12.9 C
New York
Thursday, October 10, 2024

Buy now

spot_img

கண்ணா லட்டு திண்ண ஆசையா, வாலிபராஜா படங்களில் நடித்த சேதுவின் அடுத்த படம் 50 – 50

கண்ணா லட்டு திண்ண ஆசையா... வாலிபராஜா படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் சேது.

இப்படங்களைத் தொடர்ந்துப்"ஆளுக்கு பாதி 50-50" என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கு ஜோடியாக 144 படத்தில் நடித்த ஸ்ருதி ராமகிருஷ்ணன் கதாநாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் பாலசரவணன், மயில்சாமி, பட்டிமன்றம் ராஜா, லொள்ளு சபா ஸ்வாமிநாதன், மதன்பாபு,ஸ்ரீரஞ்சனி, ஜான் விஜய், நான் கடவுள் ராஜேந்திரன், முண்டாசுப்பட்டி முனிஷ்கான், யோகி பாபு என பெரியகாமெடிப் பட்டாளங்களுடன் தொடங்கி உள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கதாநாயகியை பேசிவருகிறார்கள்.

R.K.பிரதாப் ஒளிப்பதிவு செய்ய, தரன் இசை அமைக்கிறார். ராஜா சேதுபதி எடிட்டிங் செய்கிறார்.

திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குனர் கிருஷ்ண சாய்.

நகைச்சுவஜ் நிரம்பிய இத்திரைப்படத்தை Lipi Cine Craft V.N.Ranjith Kumar தயாரிக்கும் 2வது படம் இது.

இப்படத்தைப் பற்றி இயக்குனர் கிருஷ்ண சாய் கூறியதாவது,

இன்று இருக்கும் பரபரப்பான சூழ்நிலையில் மக்கள் திரையரங்கு செல்வது அவரவர் கவலைகளை மறந்துவாய்விட்டு சிரித்து மகிழவே... அதைத் திரைப்படத்தின் மூலம் நிறைவேற்றியுள்ளேன்.

சென்னை, கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. பாடல்கள் வெளிநாட்டில் படம்பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.

திரைக்கதை, வசனம், இயக்கம் - கிருஷ்ண சாய்
ஒளிப்பதிவு - R.K.பிரதாப்
இசை - தரண் குமார்
படத்தொகுப்பு - ராஜா சேதுபதி
கலை இயக்குநர் - ராகவ குமார்
கதை - அலெக்ஸ் ஸ்டண்ட் - பில்லா ஜெகன் நடன இயக்குனர் - ஸ்ரீதர், சாண்டி பாடலாசிரியர் - நா.முத்துக்குமார், முத்தமிழ்

தயாரிப்பாளர் - V.N.ரஞ்சித் குமார்

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE