சென்னை அருகே தாம்பரத்தில் உள்ள ஶ்ரீ சாய்ராம் கல்லூரியின் 17 வது
பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள ஶ்ரீ லியோ முத்து அரங்கில்
நடைப்பெற்றது. சாய்ராம் கல்வி நிறுவனங்களின் துனைத்தலைவர்
கலைச்செல்வி லியோமுத்து குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தார்.
இவ்விழாவில் கலந்துகொண்ட இஸ்ரோ நிறுவனத்தின் முன்னாள்
பேராசிரியர், பத்மஶ்ரீ ஒய்.எஸ்.ராஜன் 1217 மாணவ, மாணவிகளுக்கு
பட்டங்களை வழங்கி பாராட்டு த்தெரிவித்தார்.
கல்லூரியின் நிர்வாக முதன்மை செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோ முத்து பேசியபோது, “சாய்ராம் கல்வி நிறுவனத்தின் குறிக்கோள் கல்வியில் மென்மேலும் வளர்ச்சி, மாணவ, மாணவியர்களின் நலன் அதாவது
நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்கும்விதமாக, படிப்பை முடித்து
கல்லூரியிலிருந்து வெளியேரும்போதே அவர்களுகேற்ற வேலையைப் பெற்றுக்கொடுப்பது, சமூகநலனில் அக்கறை கொள்ளச்செய்வதே.’ என்றார்.
பட்டம்பெற்ற 1217 மாணவ, மாணவியர்களில் 240 பேர் முதுகலை பட்டம்
பெற்றவர்கள்.. 977 பேர் இளங்கலை பொறியியல் பட்டம்பெற்றவர்கள். அதில்
890 பேர் முதல்வகுப்பில் தேர்ச்சிபெற்றவர்கள். 170 பேர் அண்ணா பல்கலைகழகத்தின் 2015ம் ஆண்டிற்கான ரேங்க் பெற்றவர்களாவார்கள்.
இவர்களுக்கு கல்லூரியின் சார்பில் 35 லட்சம் செலவில் தங்கப்பதக்கம்
வழங்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் தர வரிசை
எண்ணிக்கையிலான பட்டியலில் கடந்த 3 வருடங்களாக சாய்ராம் கல்லூரி
தமிழகத்தில் முதலிடத்தை பிடித்து வருவது குறிப்பிடதக்கது. முன்னதாக கல்லூரி முதல்வர் சி.வி.ஜெயக்குமார் வரவேற்புரையாற்றினார்.
கல்லூரி மேலாண்மை துறை இயக்குனர் மாறன்,கல்லூரி டிரஸ்டி
சர்மிளாராஜா, நிர்வாக இயக்குனர் சத்திய மூர்த்தி உட்பட பலர்
கலந்துகொண்டனர்.