15.1 C
New York
Monday, May 20, 2024

Buy now

ஒவ்வொரு மாதம், ஒவ்வொரு விதம்.. சிந்தை கவரும் விந்தை புடவைகள்.. ஸ்ரீபாலம் சில்க்ஸ் அறிமுகப்படுத்தும் 2016-ம் ஆண்டின் மாத புடவைகள்

ஸ்ரீபாலம் சில்க்ஸ் நிறுவனத்திற்கு புதுமை என்பது அன்றாட நடவடிக்கைகளில் ஒன்று. புதியரக புடவைகள், புதிய முயற்சிகள், புத்தம்புது டிசைன்கள் என கடந்த சில வருடங்களாக புதுமையின் பாதையில் தனித்துவமாக நடைபோட்டு வருகிறது ஸ்ரீபாலம் சில்க்ஸ்.

அந்தவகையில், பிறந்திருக்கும் புத்தாண்டை புதிய வகையில் வரவேற்கிறது ஸ்ரீபாலம் சில்க்ஸ். ஜனவரி என்றால் தை பொங்கல், பிப்ரவரி என்றால் காதலர் தினம் என ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக, அந்தந்த மாதங்களின் சிறப்புகளை எடுத்துரைக்கும் விதத்தில் புடவைகளை அறிமுகம் செய்துள்ளது ஸ்ரீபாலம் சில்க்ஸ்.

மொத்தமுள்ள 12 மாதங்களில் செப்டம்பர் நீங்கலாக 11 மாதங்களை குறிப்பிடும் வகையில் 11 விதமான புடவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது ஸ்ரீபாலம் சில்க்ஸ். செப்டம்பர் மாதத்தில் சில்க்லைன் என்ற பெயரில் வருடாந்திர வண்ணவிழாவை நடத்துவதால் அந்த மாதத்திற்கு என தனியாக புடவை அறிமுகப்படுத்தப்படவில்லை.

சென்னையில் நடைபெற்ற எழில்மிகு விழாவில் புடவைகளை அறிமுகம் செய்து வைத்த ஸ்ரீபாலம் சில்க்ஸ் நிறுவனர் திருமதி.ஜெயஸ்ரீரவி, அனைத்து தரப்பு பெண்களையும் திருப்தி படுத்துவது என்பது சவாலான பணி. அதற்காக இந்த புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

ஜனவரியின் அறுவடைத் திருவிழாவை நினைவூட்டும் விதமாக கைவேலைப்பாடுகள் நிரம்பிய ப்ளோரல் ப்ளூம்ஸ் புடவைகள் விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிப்ரவரியின் காதலர் தினத்தை நினைவூட்டும் வகையில் ரூபி சிவப்பில் புடவையும், வண்ணங்களின் விழாவான ஹோலி அரங்கேறும் மார்ச் மாதத்தில் அடர்த்தி மற்றும் பளீர் வண்ணங்களை அடிப்படையாக கொண்ட புடவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாவிற்கு சுவைகூட்டும் மாம்பழம் விளையும் மாதமான ஏப்ரலில் அதே மங்கல மஞ்சள் நிறத்தில் மாம்பழ வடிவில் டிசைன் போடப்பட்ட புடவையும், தகிக்கும் கோடையை எதிரொலிக்கும் வகையில் தகதகவென பொன்னென மின்னும் புடவைகள் மே மாதத்தில் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கும் ஜுன் மாதத்தில் கணித வடிவங்களை உருவாக்கும் செங்கோணம், முக்கோணவியல் உருவங்கள் பதிக்கப்பட்ட புடவைகள் இளம் பெண்களை ஈர்க்கும் என்பதில் இருவேறு கருத்தில்லை.

தென்மேற்கு பருவமழையின் வருகையை பறைசாற்றும் விதமாக ஜுலை மாதத்தில் மழைத்தாரைகளை நினைவூட்டும் வகையில், பட்டுப் புடவைகளில் தங்க சரிகைக்கு பதிலாக வெள்ளி சரிகைகள் அணிவகுத்துள்ளன.
நாட்டின் 69-வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் ஆகஸ்ட் மாதத்தில் சலாம் இந்தியா என்ற பெயரிலான புடவைகள் ஸ்ரீபாலம் சில்க்சால் அறிமுகமாகி உள்ளது. மூவர்ணக் கொடியின் மாண்பை போற்றும் வகையில் மூன்று வர்ணங்களும் மெருகேற்றி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதியவகை புடவைகள் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவின் மிக உயரிய பண்டிகையான தீபாவளி திருநாளையொட்டி யாரும் எதிர்பாராத வண்ணத்தில், விதத்தில் புத்தம் புது புடவை வகைகளை அறிமுகம் செய்துள்ளது ஸ்ரீபாலம் சில்க்ஸ். இலையுதிர் காலத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. இழந்தவைகள் உண்டு பண்ணும் இயற்கையின் அழகு அது. அதனை பிரதிபலிக்கும் விதமாகவே நவம்பர் மாத புடவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கிறிஸ்துமஸ் பண்டிகை, இசைக் கச்சேரிகள் என டிசம்பர் மாதம் முழுவதும் கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை. இதனை பிரதிபலிக்கும் விதத்தில் கிறிஸ்துமஸ் மரங்களும், இசைக் குறியீடுகளும் பதிக்கப்பட்ட ஹோ ஹோ ஹோ கலெக்ஷ்ன் வகை புடவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதத்தை போற்றும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட புடவைகளுக்கு முத்தாய்ப்பாக முகூர்த்தப் பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது ஸ்ரீபாலம் சில்க்ஸ். இலகுவான எடை, கண்ணைக் கவரும் வண்ணம், இந்திய பாரம்பரியத்தை நினைவூட்டும் எழில் இவை அனைத்தின் கலவை தான் இந்த முகூர்த்தப்பட்டுப் புடவைகள்.

ஸ்ரீபாலம் சில்க்சின் மாதாந்திர புதிய டிசைன் புடவைகளை அணிந்து 2016-ம் ஆண்டு முழுவதும் வண்ணமயமாக காட்சி தரலாம். ஸ்ரீபாலம் சில்க்சின் இந்த புதிய புடவைகள் அண்ணாநகர், லஸ் சர்ச் சாலை, பாண்டி பஜார் ஆகிய கிளைகளிலும், பெங்களுர் ஜெயநகரில் உள்ள கிளையிலும் கிடைக்கும்.

உலகம் முழுவதும் உள்ள பட்டுப்புடவை ரசிகர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக www.palamsilk.com இந்த இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE