இயக்குனர் ஷங்கர் தனது படங்களில் எந்த நடிகையையும் ஒரு படத்திற்கு மேல் நடிக்க வைத்ததில்லை என்பது குறிப்பிடதக்கது. ஆனால் இப்போது லண்டன் நடிகை எமிஜாக்சனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதுவும் அடுத்தடுத்து கிடைத்திருக்கிறது. ஷங்கர் இயக்கிய ஐ படத்தில் நடித்தவர் அடுத்து எந்திரன்-2 படத்திலும் நடிக்கிறார் என்பது தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில், விஜய், தனுஷ் என்று பெரிய நடிகர்களுடனும் நடித்து வருவதால் கோலிவுட்டில் முன்னணி நடிகையாகி விட்டார் எமிஜாக்சன்.
மேலும், எந்திரன்-2 படத்தில் அவர் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதாகத்தான் இதுவரை கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது விசாரித்தால், ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்பதே இன்னும் முடிவாகவில்லையாம்.
சில முன்னணி பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். அதோடு இந்த படத்தில் எமிஜாக்சன் ரோபோ வேடத்தில் நடிக்கிறாராம். அதற்கான ரிகர்சல் சம்பந்தமாகத்தான் சமீபத்தில் பங்கேற்று இருக்கிறார். இதற்கிடையே எந்திரன்-2 படத்தில் ஏற்கனவே ஹாலிவுட் நடிகர் அர்னால்டு நடிப்பதாக உறுதி செய்யப்பட்ட நிலையில், இப்போது விஜய்யின் கத்தி படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் நீல்நிதின் முகேசும் வில்லனாக நடிப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது