20.9 C
New York
Thursday, September 19, 2024

Buy now

spot_img

உன்னோடு கா படபிடிப்பில் அலை மோதும் ரசிகர்கள்

உன்னோடு கா பட பிடிப்பில் அலை மோதும் ரசிகர்கள் கூட்டம்!!ஆடம்பரமான திருமணம் பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

உன்னோடு கா பட குழுவினர் சமிபத்தில் பிரம்மாண்ட திருமண காட்சியை EVP பார்க்கில் செட் அமைத்து எடுத்தனர் அந்த செட் மிகவும் அழகாகவும் மிக பிரம்மாண்டமாகவும் அமைந்து இருந்தது.பல்வேறு ரசிகர்கள் அந்த செட்டை ஒரு காட்சி பொருள் போன்று பார்த்து வருகின்றனர்.பல்வேறு நட்சத்திரங்களின் குவியல் அவர்களின் ஆர்வத்தை கூட்டியது.
இதனால் படபிடிப்பில் பெரும் பிரச்சனை நிகழ்த்து உள்ளதாக தகவல்
அங்கு வரும் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கு அடங்க வில்லையாம்.மும்பை பூக்களின் வடிவங்கள் மற்றும் கலை வண்ணமயமான அலங்காரங்கள் என்று ஒரு வண்ண கலவையாக இருக்க, அதை நேர்த்தியாக படம் பிடிக்க ஒளிப்பதிவாளர் சக்தி , நிச்சயம் ஆடை வடிவமைப்பாளர் ரம்யா, டான்ஸ் மாஸ்டர் கல்யாண் மற்றும் கலை இயக்குனர் செந்தில் குமார் ஆகியோரும் பெரும் பங்கு வகிக்கின்றனர்.

ஆர்.கே. இயக்க அபிராமி மெகா மால் சார்பில் நல்லமை ராமநாதன் தயாரிக்க நெடுஞ்சாலை ஆரி நாயகனாக நடிக்க அவருக்கு இணையாக டார்லிங் 2 மாயா நடிக்கிறார். பால சரவணன் - மிஷா கோசல்ஜோடி அவர்களுக்கு இணையான முக்கியக் கதா பாத்திரங்களில் நடித்து உள்ளனர்.'நட்சத்திர நடிகர்கள் பிரபு, ஊர்வசி, ஆகியோருடன் தென்னவன்,மன்சூர் அலிகான், மனோ பாலா, இலங்கை ரஞ்சனி, சுப்பு பஞ்சு, சண்முக சுந்தரம்,சாம்ஸ், ராஜா சிங் மற்றும் பலர் நடிக்கும் 'உன்னோடு கா' படத்தின் கதையை இயற்றி இருப்பவர் திரைத்துறை வர்த்தகத்தில் கோலோச்சும் அபிராமி ராமநாதன் ஆவார்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE