18.4 C
New York
Tuesday, September 17, 2024

Buy now

spot_img

உதயநிதியுடன் பலமான கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷ்ணு

திரைப்ப்பட துறையில் தரமான படங்களை தயாரிப்பதன் மூலமும், வெற்றிகரமான படங்களை விநியோகிப்பதன் மூலமும் தனக்கென தனி பெயரை ஈட்டிய Red Giant movies தங்களது 12 ஆவது தயாரிப்பை , சென்னையில் எளிமையான பூஜை மூலம் துவக்கி உள்ளனர். ஒரு நட்சத்திரமாக தனது அந்தஸ்தை உயர்த்திக் கொண்ட உதய நிதி ஸ்டாலின் , அந்த தகுதியை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் இயக்குனர் சுசீந்திரன் உடன் இணைந்து தன்னுடைய அடுத்த படத்தை துவக்குகிறார்.

'உதய் சாருடன் இணைந்து பணியாற்றுவது மிக சந்தோஷமான விஷயம்.அவருடன் இணைந்து பணியாற்ற சரியானக் கதைக்கு காத்துக் கொண்டு இருந்தேன். அதற்கேற்ற கதை வந்தவுடன் தயங்காமல் அவரை அணுகினேன் , இதோ இன்று பூஜை , விரைவில் படப்பிடிப்பு. உதய் சாருடைய பலமே படத்துக்கு படம் வித்தியாசம் காட்ட வேண்டும் என்கிற அவருடைய உத்வேகம் தான்.அந்த உத்வேகமே இந்தக் கதைக்கு உரமாகும்,
இந்தப் படத்தில் உதயநிதியுடன் விஷ்ணு விஷாலும் இணைந்து நடிக்க உள்ளார். உதய் சாருக்கு இணையான பலமான கதாப் பாத்திரம் அவருக்கு.தொடர்ந்து மூன்று ஹிட் படங்கள் கொடுத்த தன்னம்பிக்கை அவரது எண்ணத்திலும் செயலிலும் எதிரொலிக்கிறது.
'அச்சம் என்பது மடமையடா' படம் வெளி வரும் முன்னரே ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்ப்பு பெற்ற மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார்.விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைக்கான தேர்வு நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது.
டி இமான் இந்தப் படத்துக்கு இசை அமைக்கிறார். ஏற்கனவே இதே நிறுவனத்துக்கு 'மனிதன்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் மதி , இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார். ஒரு நிறுவனத்துக்கு தொடர்ந்து இரண்டு படங்களை ஒளிப்பதிவு செய்வதன் மூலம் அவர் தன்னுடைய திறமையை நிரூபித்துக் கொள்கிறார்.
பல்வேறு தலைப்புகளை இந்தப் படத்துக்காக பரிசீலனை செய்து வருகிறோம்.கதைக்கேற்ற சரியான தலைப்பு கிட்டியவுடன் அறிவிப்போம். மார்ச் மாதம் படப்பிடிப்பு துவக்க பட உள்ளது' என்றுக் கூறினார் இயக்குனர் சுசீந்திரன்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE