தற்போதைய காலக்கட்டத்தில், உலகில் எந்த மூலையில் இருக்கும் எந்த
பொருட்களாக இருந்தாலும் அவற்றை நாம் இருக்கும் இடத்தில் இருந்தபடியே
வாங்கிவிடும் வசதியை தொழில்நுட்பங்கள் கொடுத்திருக்கிறது. இதுபோன்ற
தொழில்நுட்ப வசதிகள் வெவ்வேறு பெயர்களில் தினமும் அறிமுகமாகிக்
கொண்டிருந்தாலும், முழுக்க முழுக்க தமிழில் இதுபோன்ற ஒரு தொழில்நுட்பம்
இருக்கிறதா? என்றால், இல்லை என்று தான் பதில் வரும்.
ஆனால், இனி அப்படியான பதில் வராது. ஆம், முழுக்க முழுக்க தமிழில்
உருவாக்கப்பட்ட ஈ காமர்ஸ் ஆப், ‘ஈசி டீல்’ (Easy Deal App)
அறிமுகமாகியுள்ளது.
காய்கறி, பழவகைகள், மளிகை பொருட்கள் முதல், ஏ.சி. பிரிட்ஜ்ட், டிவி என
எலக்ட்ரானிக் பொருட்கள் என மக்களுக்கு தேவைப்படும் அனைத்து விதமான
பொருட்களைய்யும், மக்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தபடியே
வாங்கும் பெரும் வசதியை இந்த ஆப் செய்கிறது.
அதிலும், வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களை கொரியர் சர்வீஸ் மூலம்
விநியோகிக்காமல், தங்களது கட்டுப்பாட்டில் இயங்கும் கிளை விநியோக மையம்
மூலமாகவே, விநியோகிப்பதால், பொருட்கள் பாதுகாப்பாகவும், தரம் குறையாமலும்
வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பது இதன் மற்றொரு சிறப்பு.
ஈசி டீல், என்ற இந்த ஆப்பை ஆன்ராய்ட் போன்களில் டவுன்லோட்
செய்துக்கொண்டால் போதும், பல்லாயிறக்கணக்கான பொருட்கள் உங்களது
உள்ளங்கையில் வந்துவிடும். தற்போதையை கோடைக்காலத்திற்கு ஏற்ப, ஈசி டீல்,
பலவகையான பழ வகைகளை விநியோகம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
6 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை, என பொருட்கள் விநியோகம் செய்வதில்
துரிதத்தைக் காட்டும் ஈசி டீல், பொருட்களின் விநியோகத்தை இலவசமாக
செய்வதோடு, வாடிக்கையாளர்கள் மார்கெட்டில் தாங்கள் வாங்கும் விலையைக்
காட்டிலும், ‘ஈசி டீல்’ நிறுவனம் குறைந்த விலையில், மொபைல் போன்கள்,
எலக்ட்ரானிக் பொருட்கள், காய்கறிகள் பழ வகைகள், ஆடைகள் என அனைத்துவிதமான
பொருட்களையும் குறைந்த விலையில், பலவிதமான சலுகைகளுடன் விற்பனை
செய்கிறது.
எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்ட இந்த புதிய ஆபின் அறிமுக விழா இன்று
சென்னை விஜய் பார்க் ஓட்டலில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக
பிரபல விளம்பரப்பட இயக்குநரும், ‘சுற்றுலா’ திரைப்படத்தின் இயக்குநருமான
வி.ராஜேஷ் அல்ஃபெரட், ஈசி டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஐ.ஜார்லஸ்
ஜெபராஜ், பிரபல திரைப்பட நடிகர் ரமேஷ் கண்ணா, செய்தி வாசிப்பாளர்
எம்.சண்முகம், சன் தொலைக்காட்சி புகழ் புலவர் எம்.ஏ.ராமலிங்கம் ஆகியோர்
கலந்துக்கொண்டார்கள்.
தற்போது செயல்பட்டு வரும் இதுபோன்ற ஈ காமர்ஸ் ஆப்கள் அனைத்தும் வட
இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்குவதோடு, நாம் ஆர்டர் கொடுக்கும்
பொருட்களையும் அங்கிருந்தே வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்து
வருகின்றன. ஆனால் தென்னிந்தியாவை தலைமையிடமாக் கொண்டு இயக்கும் ஈசி டீல்
ஆப், அனைத்து மாவட்டங்கங்கள் மட்டும் இன்றி அனைத்து பகுதிகளிலும்
விநியோகத்திற்காக தனி மையம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது.
தற்போது தென்னிந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஈசி டீல் ஆப்,
இன்னும் ஒரு வருடத்தில் இந்தியா முழுவதும் தனது சேவையை தொடங்க உள்ளது.
மேலும், லாபத்தை மட்டுமே நோக்கமாக கொள்ளாமல், மக்களுக்கு வேலை
வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுக்கும் வகையில், ஈசி டீல் ஆப் நிறுவனம்
செயல்படுவதாக, அந்நிறுவனத்தின் மேலாளர் அருண் அகஸ்டின் தெரிவித்தார்.