சில படங்கள் அறிவிக்கப்படும் போதே பெரும் எதிபார்பை ஏற்படுத்தும். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் அறிமுகமாவதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 'தனி ஒருவன்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மோகன் ராஜா இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.
மோகன் ராஜாவின் தனி ஒருவன் படத்தின் மாபெரும் வெட்ற்றியை இவரின் அடுத்த படம் யார் ஹிரோ என்று பல எதிர்பார்புகள் இருந்தது இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தேர்வாகியுலார்,
' எங்களுடைய நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக உருவாக இருக்கும் இந்தப்படத்தில் இயக்குனர் மோகன் ராஜாவுடன் பணியாற்றுவதில் எங்களுக்கு பெருமை. அவர் இயக்கிய படங்கள் எல்லாமே ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை.இதுவே ஒரு சிறந்தஇயக்குனருக்கு தர சான்றிதழ் என சொல்லலாம். குடும்பத்தோடு படம் பார்க்க ரசிகர்களை திரை அரங்குகளுக்கு சுண்டி இழுப்பதிலும் , வந்த ரசிகர்களை திருப்திப்படுத்துவதிலும் அவருக்கென்று ஒருதனி தன்மை உண்டு.ஒரு தயாரிப்பு நிறுவனமாக எங்களுடைய 24 AM STUDIOS நிறுவனமும், நாயகனாகசிவகார்த்திகேயனும் இயக்குனர் மோகன் ராஜாவுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறோம் ' என்றார் தயாரிப்பாளர் R.D.ராஜா.