இயக்குனர் கே.பாக்யராஜ் பாராட்டிய
“ தங்கரதம் “
தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான படங்கள் தயாரித்துக் கொண்டிருந்தாலும் ஒரு படத்தின் first look, poster designs மற்றும் publicity மூலம் சினிமா இண்டஸ்ட்ரியை திரும்பி பார்க்க வைப்பது ஒரு சில படங்கள் தான். சமீபத்தில் அப்படி எல்லோரையும் வியக்க வைத்த ஒரு படம் “ தங்கரதம் “ இந்த படத்தின் first look ஐ வெளியிட்ட இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்கள் படத்தின் டிசைன்களை பார்த்து விட்டு வெகுவாக பாராட்டியுள்ளார்.
ஒட்டன் சத்திரம் மார்கெட்டுக்கு ஒரு கிராமத்திலிருந்து காய்கறி ஏற்றிவரும் டெம்போக்களின் பின்னணியில் சொல்லப்பட்ட ஒரு எதார்த்தமான காதல் கதை.
படத்தின் ஹீரோ ஓட்டும் டெம்போவின் பெயர்தான் “ தங்கரதம் “ படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் தங்கரதம் டெம்போவும் ஒன்று.
இதில் வெற்றி, அதிதி கிருஷ்ணா என்ற புதுமுகங்கள் நாயகன்,நாயகிகளாக நடிக்க, நான்கடவுள் ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், சௌந்தர்ராஜா, லொள்ளுசபா சாமிநாதன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். நான் கடவுள் ராஜேந்திரன் தனி பாடலுக்கு ஆடியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக டிஸ்கோ சாந்தியின் தங்கை சுசித்ரா ஆடியிருக்கிறார்.
அடுத்து வெளியாக இருக்கும் இந்த படத்தின் டீசர், டிரைலர், மற்றும் இசையை தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி ஆவலோடு எதிர்பார்கிறது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் உதவியாளர் டோனி பிரிட்டோ இசையமைக்க, ஜேக்கப் ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் அர்ஸ் எடிட்டிங் செய்ய, யுகபாரதி மற்றும் பாலமுருகன் பாடல் வரிகள் எழுத, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் பாலமுருகன். பினுராம் அவர்களின் நிர்வாகத் தயாரிப்பில் மிகுந்த பொருட்ச்செலவில் NTC MEDIA மற்றும் V-Care Production சார்பில் பிரமாண்டமாய் தயாரிக்கிறார் வர்கீஸ்.