வீட்டுக்குள்ளேயே சமத்துவமின்மை நிலவுகிறது. குறிப்பாக வீட்டுப்பணிகள் என்றால் இது தலைதூக்குகிறது. நாடு முழுவதும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேணடும் என்ற கருத்து சமூகத்தில் அதிகரித்துள்ளநிலையில் இந்தியாவில் வீட்டு வேலைகள் என்பது பெண்களுக்கே உரியது என்று ஆண்கள் கருதுவதாக 80 விழுக்காடு பெண்கள் தெரிவித்துள்ளனர். துணியை துவைப்பதும் சலவை செய்வதும் பெண்களின் வேலையா என்ற இந்த விவாதம் 2015 ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. இந்த விவாதத்தில் கலந்துகொள்வதில் ஏரியல் இந்தியா பெருமிதம் கொள்கிறது.
சுயேட்சையாக எடுக்கப்பட்ட சர்வே படி வீட்டுவேலைகள் என்றால் அது அம்மாவின் பணி என்று 3 குழந்தைகளில் ஒருவர் கருதுகிறார்கள். இதுகுறித்து விவாதம் சமூகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுபோன்ற கருத்து தலைமுறை தலைமுறையாக தொடருகிறது. துணியை துவைத்து சலவை செய்வது என்பது பெண்களின் வேலை என்று 70 விழுக்காடு ஆண்கள் கருதுகிறார்கள். வீட்டுக்குள்ளேயே பாலின பாகுபாடு கடைபிடிக்கப்படுவது இன்று முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது. இந்தபிரச்சனையில் பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இதுபோன்ற விவாதத்திற்கு ஏரியல் இந்தியா சர்வதேச மகளிர் தினத்தன்று அவர்களுடன் இணைந்து‘ அப்பாக்களே வீட்டுப்பணிகளை பகிரிந்து கொள்ளுங்கள்’’ என்று வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறது.
வீட்டுப்பணிகள் என்றாலே அது பெண்களுக்கு மட்டுமே என்று எப்போதும் உள்ள நிலையை மாற்றும் இயக்கத்தில் சென்னையில் பிரபல நடிகை பிரியா ஆணந்த் கலந்துகொண்டார்.அப்பாக்களே வீட்டுப்பணிகளை அம்மாவுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் என்ற பிரச்சசார இயக்கத்தில் கலந்துகொள்வதில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறினார்.
இந்த இயக்கம் குறித்து அசோசியேட் பிராண்ட் இயக்குநர் சரத் வர்மா, கூறுகையில்துணியை துவைத்து சலவை செய்வது என்பது அம்மாவின் வேலை என்று 70 விழுக்காடு குழந்தைகள் கருதுகிறார்கள் என்றார். இப்படியாக குடும்பத்தில் இருந்தே குழநதைகள் மனதில் இதுபோன்ற பெண்களுக்கு எதிதரான தவறான கருத்து திணிக்கப்படுகிறது. தற்போதுள்ள பாலின பாகுபாட்டை போக்கும் வகையிலும் சமூகத்தில் பெண்கள் என்றலோ உள்ள தவறான பார்வையை மாற்றி சரியான புரிதலை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். ஏரியல் நடத்திவரும் இந்த இயக்கம் சக்திமிக்க தகவலை சமூகத்திற்கு தெரிவிப்பதாகவும் அதை பார்த்து கணவன்மார்களும் அப்பாக்களும் இந்த இயக்கத்தில் சேர்ந்து அடுத்த தலைமுறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழவார்கள் என்றும் அவர் மேலும் கூறினார். இந்த இயக்கம் தொடர்பான ஷேர் தி லோட் என்ற விளம்பர படத்தை இதுவரை உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.