P V P சினிமாஸ் தயாரிப்பில் தொடர் தோல்விக்கு அடுத்த தயாரிப்பு இஞ்சி இடுபழகி இவர்கள் ஏற்கனவே தயாரித்த மூன்று படங்கள் இரண்டாம் உலகம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் அப்புறம் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க தோல்விக்கு அப்புறம் எடுத்த படம். இந்த படம் என்ன வெற்றிய இல்லை தோல்வியா என்பதை விமர்சனம் முடிவில் பார்போம்.
இஞ்சி இடுபழகி படத்தின் டைட்டில் மாதிரி படத்தின் கதையும் இஞ்சி துண்டு சைஸ் தான் அப்படி கூட சொல்ல முடியாது அந்த அளவுக்கான கதை. படத்தின் தமிழுக்கு அறிமுக இயக்குனர் பிரகாஷ் இவர் தெலுங்கில் மிக சிறந்த இயக்குனர்களி ஒருவரான ராகவேந்திரா ராவ் இயக்குனரின் மகன் தான் பிரகாஷ். பாவம் இவர் படத்தை இயக்கம் போது தமிழ் படம் என்று நினைத்தார இல்லை தெலுங்கு படம் என்று நினைத்து படத்தை இயக்குனார் என்பது மிக பெரிய கேள்வி குறி? காரணம் கதையும் சரி திரைக்கதையும் சரி அந்த அளவில் தான் தான் உள்ளது .
குண்டு அதாவது பருத்த அழகி அனுஷ்காவை எப்படியாவது ஒருவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற ஆசை அவரின் அம்மாவுக்கு ஆனால் நம்ம பருத்த அழகிக்கு நொறுக்கு தீனி மீது கொள்ளை ஆசை எப்பவும் தின்னு கொண்டே இருக்கணும் என்பது ஆசை வாயை கட்டு அப்ப தான் மாப்பிள்ளை கிடைப்பார் என்று சொல்லுவது அம்மாவுக்கு தினமும் சுலோகம் சொல்லுவது போல் ஆனால் நம்ம பருத்த அழகி அதை காதில் வாங்க மாட்டார் வரும் மாப்பிள்ளை எல்லாம் தளி தரிக்க ஓடிவிடுவார்கள் . ஒரு கட்டத்தில் அம்மா செண்டிமெண்ட் தாங்க முடியாமல் பருத்த அழகி மெலிய முயற்சி நடக்க இருக்கிறது அதில் வெற்றி கிடைத்ததா என்பது தான் கதை
அனுஷ்கா படத்துக்காக மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளார் என்று சொல்லலாம் ஆனால் படத்துக்கு ஒரே பிளஸ் என்று சொன்னால் அது அனுஷ்கா தான். அடுத்து நம்ம ஹீரோ இல்லை ஜீரோ தொடர் தோல்வி எப்படி தான் கதையை தேடுகிறார் என்பது தெரியவில்லை ஓடாதா கதையாய் தேர்தெடுத்து நடிபதில் வல்லவர் என்றால் அது ஆர்யா தான் இனிமேலாவது யாரு ஹீரோயின் என்று பார்க்காமல் என்ன கதை என்று பாருங்கள் அப்ப தான் சினிமால நிலைக்கமுடியும் இல்ல இப்ப சில படங்களில் செய்யும் கௌரவ தோதற்ற நடிகர் வாழ்கை தொடர்ந்து விடும் இல்லை நான் கடவுள் ராஜேந்திரன்யிடம் பணிபுரியும் அடிஆள் ரோல் தான் கிடக்கும் .
படத்துக்கு ஒரே பிளஸ் நீரவ் ஷா ஒளிபதிவு மட்டும் என்று ஆணித்தரமாக சொல்லலாம். தெலுங்கு இசைஞானியின் இசை கொஞ்சம் கூட தமிழ்க்கு எடுபடவில்லை என்று சொல்லலாம் .
P V P சினிமாஸ் அடுத்த பத்தியாவது ஓடும் படமாக எடுங்கள் பணம் இருக்கு என்பதற்காக நீங்கள் எப்படி வேணும் நாளும் படம் எடுக்கலாம் ஆனால் டிக்கெட் காசு கொடுத்து வாங்கும் எங்களுக்கு எதற்கு இப்படி ஒரு தண்டனை .