ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக அர்ஜுன் எழுதி ,இயக்கி, தயாரித்து நடிக்கும் படம் அர்ஜுனின் ஜெய்ஹிந்த் -2 . கதாநாயகியாக சுர்வீன் சாவ்லா நடிக்கிறார் .
புதுமுகமாக சிம்ரன்கபூர் என்ற முன்பை நடிகை ஒருவரும் அறிமுகமாகிறார். மற்றும் ராகுல்தேவ் , பிரம்மானந்தம், ரவிகாளே, அதுல் மாதூர், மயில்சாமி ,மனோபாலா, வினய்பிரசாத், நரசிம்ம ராஜு, கெளதம் சுந்தர்ராஜன், பரத்குமார், அமீத்திவாரி, பேபி யுனிதா ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (17 – 09 – 2014) காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
ஒளிப்பதிவு - H.C. வேணுகோபால்
இசை - அர்ஜுன்ஜெனியா
பாடல்கள் - வைரமுத்து, பா.விஜய் / கலை - சசிதர் அடாபா
வசனம் - ஜி.கே. கோபிநாத் / எடிட்டிங் - கே.கே
நடனம் - எ.ஹர்ஷா, நோபல் / ஸ்டன்ட் - பவர்பாஸ்ட் பாபு – கஜு(பேங்காக் )
நகைச்சுவை பகுதி - ராஜகோபால்.A / இணை இயக்குனர் - பரமேஷ்வர்
தயாரிப்பு நிர்வாகம் - கவிசேகர்
இணை தயாரிப்பு - ஐஸ்வர்யா, அஞ்சனா
கதை, திரைக்கதை, தயாரிப்பு, இயக்கம் – அர்ஜுன்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அர்ஜுன் பேசியது...
இந்த இசை வெளியீட்டு விழாவை ஜெய்ஹிந்த் படத்தின் தலைப்பிற்கு ஏற்றாற்போல் நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டேன் எங்களுக்கு ரியல் ஹீரோவான மேஜர் முகுந்த் அவர்களின் ஞாபகம் தான் வந்தது.
தேசத்திற்காக உயிர் துறந்த அந்த மேஜரின் குடும்பத்தை அழைத்து அவர்கள் முன்னிலையில் இந்த விழாவை நடத்த விரும்பினேன் முதலில் தயங்கிய அவர்கள் பிறகு ஒத்துக்கொண்டார்கள்.
அவர்களை மேடைக்கு அழைத்ததன் மூலம் இந்த விழா சிறப்பு பெற்றுள்ளது.
விழா மேடையில் பேசிய....மேஜர் முகுந்தனின் தந்தை வரதராஜன் பேசியது....
ஜென்டில் மேன் படத்தை பார்த்து அர்ஜுனின் தீவிர ரசிகரான முகுந்த் ஆக்ஷன் படங்களை விரும்பி பார்ப்பான் இந்த ஜெய்ஹிந்த் படத்தை பார்க்க அவன் இல்லை இருந்தாலும் இந்த விழாவில் நாங்கள்கலந்து கொண்டதே எங்களுக்கு மகிழ்ச்சி என்று கூறினார்.
இயக்குனர் பாலா பேசியது....
வழக்கமாக இது மாதிரி விழாக்களுக்கு நான் செல்வதை தவிர்ப்பேன் அர்ஜுன் என்னிடம் மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்தினர் கலந்து கொள்ள இருப்பதை சொன்ன உடனே நான் ஒத்துக்கொண்டேன்.
நான் இதுவரை எந்த சினிமா காரர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டது இல்லை இந்த குடும்பத்தினருடன் நான் போட்டோ எடுத்துக் கொள்ள ஆசைப்படுகிறேன் என்று சொல்லி போட்டோ எடுத்துக் கொண்டார்.
தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தாணு பேசியதாவது....
இது அர்ஜுன் இயக்கத்தில் வரும் எட்டாவது படம் என்றார்கள் அர்ஜுன் இயக்கத்தில் வெளியான எல்லாப் படங்களும் வெற்றிப் பெற்றுள்ளது இந்த படமும் வெற்றிபெறும் என்று பாராட்டினார்.
விழாவில் ஐஸ்வர்யா அர்ஜுன், மனோபாலா, கானாபாலா, மயில்சாமி, ஆகியோரும் பேசினார்கள்.
இயக்குனர் பாலா இசைத் தட்டை வெளியிட மேஜர்முகுந்தின் மகள் பேபி ஆர்ஷியா மற்றும் படத்தில் நடித்துள்ள பேபி யுவினா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.