அருண் விஜய் தனது சொந்தப் பட நிறுவனமான இன் சினிமாஸ் எண்டெர்டைன்மெண்ட் சார்பில் தயாரித்து நடிக்க , இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் துரிதமாக வளர்ந்து வரும் படத்துக்கு குற்றம் 23 என்று தலைப்பு இடப்பட்டு உள்ளது.பல்வேறுக் கதைகளை கேட்டு அதற்க்கு பின்னர் துவங்கப்பட்ட ‘குற்றம் 23’ படத்தின் இயக்குனர் அறிவழகன் ஈரம் தேசிய அளவில் புகழ் பெற்றவராவார்.மருத்துவ உலகில் நிகழும் சீர்கேடுகளை படம் பிடித்துக் காட்டும் இந்தப் படம் அருண் விஜயின் 23ஆம் படம் என்பதுக் குறிப்பிடத் தக்கது.
கடந்த மாதம் துவங்கப்பட்ட ‘குற்றம் 23’ படத்தின் படப்பிடிப்பு குறுகியக் காலத்தில் 60 சதவீதம் முடிந்து விட்டது. ஜூன் மாத இறுதியில் இறுதிக் கட்டப் படப்பிடிப்பும் முடிந்து ஆகஸ்ட் மாதம் முதல் பிரதி வெளி ஆகும் என நம்பிக்கை தெரிவித்தார் இயக்குனர் அறிவழகன்.