தமிழ் சினிமாவில் அவ்வப்போது தான் சமூக கருத்தை மையபடுத்தி படங்கள் வருகின்றன, அப்படி ஒரு நல்ல கருத்தினை மைய்யபடுத்தி எடுக்கப்பட்ட படம் தான் 'அம்மா கணக்கு'
சரி கதைக்கு போவோம், தன் கணவன் இறந்த பின் தனி ஆளாக வீட்டு வேலை உட்பட பல வேலைகளை செய்து தனது மகளை படிக்க வைக்கிறாள் சாந்தி(அமலா பால்), ஆனால் தனது மகள் கணக்கு பாடத்தில் படு மொக்கை மேலும் அவளுக்கு படிப்பில் ஆர்வமும் இல்லாமல் இருக்க, அவளை எப்படியாவது படிக்க வைத்து தான் படும் கஷ்டம் தனது மகள் படக்குடாது என பாடுபடுகிறாள் சாந்தி. இப்படி இருக்க அவள் சரியாக படிக்காமல் போக. ரேவதியின் அறிவுரைப்படி தன் மகள் படிக்கும் பள்ளியிலேயே பத்தாம் வகுப்பு சேருகிறாள் சாந்தி. பின் என்ன ஆகிறது என்பது தான் மீதி கதை.
படத்திற்கு பெரும் பலம் சேர்க்கிறது இசைஞானி இளையராஜாவின் இசை, பின்னணி இசையில் காட்சியின் ஆழத்தை உணர்த்துகிறார். மேலும் பாடல்கள் பலே ரகம்.
கேவ்மிக் யு ஆரியின் ஒளிப்பதிவு அபாரம். மாறி மாறி ஒரே லொகேஷன் என இருந்தாலும் அதை போர் அடிக்காமல் காட்டியிருக்கிறார் அவர்.
விஜய் முருகன் கலையில் தனது நேர்த்தியை காட்டியிருக்கிறார். ஏழை வீடு மற்றும் ரேவதியின் பணக்கார வீடு இரண்டிலும் தனது கலை வண்ணம் வேற லெவல்.
படத்தில் கதாநாயகன் மற்றும் கதாநாயகி இரண்டுமே அமலா பால் தான், திருமணம் ஆன மாதிரி நடிப்பதற்கே தயக்கம் காட்டும் நடிகைகள் மத்தியில் பத்தாவது படிக்கும் பெண்ணிற்கு அம்மா வேடத்தில் நடித்தமைக்கே அவரை பெரிதும் பாராட்டியே ஆக வேண்டும். மேலும் அவரது நடிப்பு அபாரம். அமலா பாலிற்கு பெண்ணாக நடித்திற்கும் யுவஸ்ரீ கேரக்டராக வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும், அனைத்து காட்சிகளிலும் அவரின் நடிப்பு அபாரம். வாத்தியாராக வரும் சமுத்திரகனி இந்த முறை தனது நடிப்பில் சற்று வித்யாசம் காட்டியிருக்கிறார்.
அம்மா கணக்கு படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அஸ்வினி ஐயர் திவாரி, ஒரு சராசரி தாயின் கனவு அதற்காக அவள் எடுக்கும் முயற்சி மேலும் எல்லாருக்கும் கல்வி அவசியம் என ஒரு நல படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
இப்படத்தினை தனது வண்டர்பார் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கிறார் தனுஷ். தயாரிப்பாளர்கள் கமர்ஷியல் என ஓடிக்கொண்டிருக்க, சமூக அம்மறையோடு படம் கொடுத்தமைக்கு தனுஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள்
அம்மா கணக்கு - கணக்கு சரியா தான் இருக்கு