-0.2 C
New York
Thursday, January 16, 2025

Buy now

spot_img

அன்றைய கால காதலை இன்றைய டெக்னாலஜி மூலம் புட்டு புட்டு வைத்திருக்கிறது ‘புட் சட்னி’

காதல், ஆக்ஷன். செண்டிமெண்ட் என இல்லாமல், நகைச்சுவைக்கும், நகைச்சுவை கலைஞர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துவருகிறது ‘ஸ்ப்ரைட் காமெடி கான்கவுட் பை கல்ச்சர் மிஷின்’ நிகழ்ச்சி. சமூகவலைத்தளத்தை தங்களின் முக்கிய கருவியாக எடுத்து, இந்தியா முழுவதும் இருக்கிற இளைஞர்களின் போன்களிலும், கணினிகளிலும் காட்டுத்தீ போல் பரவி கொண்டிருக்கும் இந்த ‘ஸ்ப்ரைட் காமெடி கான்கவுட் பை கல்ச்சர் மிஷின்’ நிகழ்ச்சியில், தங்களின் புதியதொரு காணொளியை பதிவேற்றம் செய்திருக்கிறது தென் இந்தியாவின் சிறந்த யூத் சேனலான ‘புட் சட்னி’ . உலகளவில் தங்களின் நகைச்சுவை கலாட்டாவினால் பிரபலம் அடைந்த ‘தி டெண்டர்லியான்ஸ்’ தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியானது நாளுக்கு நாள் ரசிகர்களின் பாராட்டுகளை அதிகளவில் பெற்று கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், செல்போன் போன்ற நவீன டெக்னாலஜி வந்த பிறகு காதலர்கள் வேண்டுமானால் அதிகமாகி இருக்கலாம்..ஆனால் காதலோ கம்மி ஆகிவிட்டது என்பது தான் உண்மை. இதனை மையமாக கொண்டு நகைச்சுவை கலந்த சிந்தனையோடு உருவாகியிருப்பது தான் ‘புட் சட்னி வெளியிட்டுள்ள “ஹவ் டு பைண்ட் ட்ரூ லவ்” என்னும் காணொளி. உண்மையான காதலை எப்படி தெரிந்து கொள்ளலாம் என ஒரு ஆலோசகரை அணுகுகிறார் ஒரு பெண். ஆனால் அந்த சந்திப்போ எதிர்பாராத விதத்தில் முடிவடைகிறது…இது தான் புட் சட்னி வெளியிட்டுள்ள “ஹவ் டு பைண்ட் ட்ரூ லவ்” காணொளியின் ஒரு வரி கதை. கண்டிப்பாக இந்த காணொளியை காணும் ஒவ்வொரும் ரசிகரும் வாய்விட்டு சிரிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE