தமிழகத்தில் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரிகளின் பட்டியலில் முன்னிலையில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி மற்றும் சாய்ராம் கல்வி குழுமம், படிப்பு மட்டும் இன்றி, மாணவர்களுக்கான பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில், மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டுவதற்கான நிகழ்ச்சி ஒன்றை கடந்த மே 28, 29 ஆகிய இரண்டு நாட்கள் நடத்தியது.
‘பிக் பேங்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த அறிவியல் நிகழ்ச்சியை எல்.எம்.ஈ.எஸ் அகடெமியுடன் சேர்ந்து சாய்ராம் கல்வி குழுமம், சென்னை தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடத்தியது.
பள்ளி மாணவர்களிடம் அறிவியலின் ஆர்வத்தை தூண்டும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அறிவியல் மூலம் நடத்தப்படும் அதிசய நிகழ்வுகள் செய்துக்காட்டப்பட்டது. சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பயன் பெற்றார்கள். சென்னை மட்டும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், பெங்களூர், ஐதராபாத் போன்ற வெளின் மாநில பள்ளி மாணவர்களும் இந்த அறிவியில் நிகழ்வில் கலந்துக்கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மாணவர்களுக்கு பேருந்து வசதி மற்றும் உணவு ஆகியவற்றை சாய்ராம் கல்வி குழுமம் இலவசமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில், ஒரு பொருளின் அழுத்தம் சீராக இருப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து மாணவர்கள் முன்னிலையில் செய்து காட்டப்பட்டது. அதாவது ஒரு ஆணி மீது, காலை வைத்தால் அது இறங்கிவிடும். அதே பல ஆணிகளை வைத்து அதன் மீது நாம் கால் வைத்தால், அப்போது நமக்கு எதுவும் ஆகாது, காரணம் நம் காலின் அழுத்தமானது, அந்த ஆணிகளில் சீராக பரவுகிறது. இதை தான் சிலர் கவுளுக்கு ஆணி காலனி அணிந்து நடக்கிறேன், ஆணி மெத்தையில் படுக்கிறேன், என்று நேர்த்திகடன் செய்கிறார்கள். இதுபோல பல்வேறு அறிவியல் விஷயங்களை, ஒரு மேஜிக் போல மாணவர்களிடம் செய்துக் காட்டியதால், அது அவர்களை வெகுவாக கவர்ந்ததோடு, அவர்களிடம் அறிவியல் மீதான ஆர்வத்தையும் தூண்டியது.
இதேபோல, இரண்டு நோட்டு புத்தகங்களில் உள்ள தாழ்களை ஒன்றோடு ஒன்று புரட்டிப்போட்டால், அதை எப்படி பிரித்தாலும் பிரிக்க முடியாது, என்பதும் செய்துகாட்டப்பட்டது. இதைதான் பிக்ஷன் என்று சொல்கிறார்கள். அதாவது அந்த நோட்டு புத்தக தாழ்கள் இடையே இருந்த காற்று அடைக்கப்படுவதால், அந்த நோட்டு புத்தகத்திற்கு இப்படி ஒரு வலிமை கிடைக்கிறது. இது நோட்டு புத்தகத்தின் அளவைக்கொண்டு, பிக்ஷனின் சக்தியும் அதிகரிக்கிறது.
அந்த வகையில், இரண்டு பெரிய புத்தகங்களை ஒன்றோடு ஒன்று சேர்த்து, பிரிக்க முயற்சிக்கப்பட்டது. அதில், 210 டன் எடை கொண்ட கார் ஒன்றை, இணைக்கப்பட்ட நோட்டு புத்தகங்கள் கொண்டு தூக்கப்பட்டது. சுமார் 10 அடிக்கும் மேலாக தூக்கப்பட்ட்ட போதிலும், கார் அந்தரத்தில் பறந்ததே தவிர, நோட்டு புத்த்கங்கள் பிரிந்தபாடியில்லை. இவ்வாறு செய்யபட்ட பிக்ஷன் முறையைப் பார்த்து அங்கு இருந்த மாணவர்களும், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனார்கள்.
இதுபோன்ற, நிகழ்வு நடைபெறும் இரண்டு நாட்களில் சுமார் 24 அறிவியல் விஷயங்களை மாணவர்களுக்கு செய்துக்காட்டப்பட்டது.
இந்த அறிவியல் நிகழ்வுகளை செய்பவர் எல்.எம்.ஈ.எஸ் அகடெமியின் நிறுவனர் பிரேமானந்த் சேதுராஜன். அமெரிக்காவில் பணியாற்றிய இவர் தற்போது, தமிழக பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டுவதற்காக, இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அதன் முதல் முயற்சி தான் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ‘பிக் பேங்க்’ அறிவியல் நிகழ்ச்சி.
இந்த நிகழ்வு குறித்து சாய்ராம் கல்வி குழுமத்தின் முதன்மை தலைமை அதிகாரி சாய்பிரகாஷ் லியோ முத்துவிடம் கேட்ட போது, “பிரேமானந்த் சேதுராஜன், அறிவியல் சம்மந்தமான சில அறிய விஷயங்களை, வீடியோவாக யூடியுப் சேனலில் ஒளிபரப்பி வருகிறார். அந்த வீடியோக்களை தொடர்ந்து நாங்கள் பார்த்து வந்தபோது, அவருக்கும், மாணவர்களுக்கும் இதை வைத்து ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து, அவரை தொடர்புகொண்ட போது அவர் அமெரிக்காவில் இருந்தார். அப்போது, தமிழகம் வந்தால் நேரில் சந்திப்பதுடன், எந்த உதவியாக இருந்தாலும் எங்களிடம் கேளுங்கள் என்று கூறியிருந்தோம்.
அதன்படி, தமிழகம் வந்த அவர் என்னை சந்தித்து, பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கேம்ப் ஒன்றை செய்ய இருப்பதாக கூறியதோடு, அதற்கான இடம் உள்ளிட்ட வசதிகளை கேட்டார். இதற்கு உடனே சம்மதம் தெரிவித்து, தற்போது அதை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். இது ஆரம்பம் தான், இதுபோன்ற பல்வேறு விஷயங்களை செய்வதற்கு சாய்ராம் கல்வி குழுமம் முழு ஒத்துழைப்பையும் கொடுக்கும்.
கல்வியில், ஒழுக்கம் என்று சிறந்த கல்லூரிகளில் தொடர்ந்து முதலிடம் வகித்து வந்தாலும், படிப்பு மட்டும் இன்றி மாணவர்களு வேறு சில வழிகளில் ஆக்கப்பூர்வமான விஷயங்களை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம். அதன் அடிப்படையில் தான் இந்த அறிவியல் நிகழ்வு நடத்தப்பட்டது. தற்போது பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட இந்த் அறிவியல் கண்காட்சியைப் போல எதிர்காலத்தில், மிகப்பெரிய் அறிவியல் விஷயங்களோடு, கல்லூரி மாணவர்களுக்கும் நடத்துவோம்” என்று தெரிவித்தார்.
எல்.எம்.ஈ.எஸ் அகடெமியின் நிறுவனர் பிரேமானந்த் சேதுராஜன், இந்த நிகழ்வு குறித்து பேசுகையில், “நான் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவன், அமெரிக்காவில் பணிபுரிந்து வந்தேன். தற்போது எனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை தியரில் சொல்வதை விட பிராக்டிக்லாக சொல்வதே சிறந்தது. அதிலும் சிறுவர்களிடம் சொல்லும்போது, அவர்களுக்கு புரிவதுடன், அவர்களின் ஆர்வத்தை தூண்டும் விதத்திலும் சொல்ல வேண்டும். அதனால், தான் இந்த அறிவியல் நிகழ்வுகளை மேஜிக் போல அவர்களிடம் காட்டி வருகிறோம்.
சுமார் 24 அறிவியல் நிகழ்வுகள் இந்த இரண்டு நாட்கள் கண்காட்சியில் செய்யப்பட்டது. மாணவர்களும் மிகவும் உற்சாகத்தோடு, இந்த நிகழ்வுகளில் பங்கெடுத்தார்கள்.
நான் அமெரிக்காவில் இருக்கும்போதே, இரண்டு ஆண்டுகளாக இதுபோன்ற அறிவியல் விஷயங்களை வீடியோவாக பதிவு செய்திருக்கிறேன். அதை பலர் பார்த்தும் வருகிறார்கள். இதை நேரடியாக மாணவர்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும், என்ற எனது கனவு இன்று நினைவாகியுள்ளது.
இதற்கு பெரும் உறுதுணையாக இருந்த சாய்ராம் கல்வி குழுமத்திற்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது முதல் முயற்சி என்பதால், இந்த நிகழ்வில் அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்கவில்லை. ஆனால், எதிர்காலத்தில், சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இதுபோன்ற அறிவியல் நிகழ்ச்சியை தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக அரசிடமும் அனுமதி கோரியுள்ளோம். அவர்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம்.
நான் அமெரிக்காவில் பணிபுரிந்ததற்கு காரணம், அங்குள்ள கல்வி முறை மற்றும் உலக நாடுகளின் கல்வி முறையை அறிந்துக்கொள்வதற்கே. 6 வருடங்கள் பணியாற்றிய நான், தற்போது எனது பணியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழகத்திற்கே வந்துவிட்டேன். ஒரு நாடு வல்லரசு ஆக வேண்டும் என்றால், அந்த நாட்டில் கண்டுபிடிப்புகள் அதிகமாக இருக்க வேண்டும், என்று அப்துல் கலாம் அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால், நமது கல்வி முறை மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டதாகவே உள்ளது. அதை மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த அறிவியில் நிகழ்வுகளை மேற்கொண்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.