விஜய்சேதுபதி நடித்த “ஆரஞ்சு மிட்டாய்” படத்தை தயாரித்த
common man presents B.கணேஷ் மிக பிரம்மாண்டமாய் தயாரிக்கவிருக்கும் அடுத்த படம் “றெக்க”.
இந்த படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை “வா டீல்” படத்தை இயக்கிய ரத்தினசிவா இயக்குகிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லக்ஷ்மிமேனன் நடிக்கிறார், இவர்கள் இருவரும் முதல் முறையாக ஜோடியாக இணைந்த படம் இதுவே ஆகும்.
இப்படத்துக்கான போடோஷூட் சமீபத்தில் ஏ.வி.ம் ஸ்டுடியோவில் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் பிரபல புகைப்பட கலைஞர் ஜி.வெங்கட்ராமன் அவர்களால் எடுக்கப்பட்டது.
இந்த போட்டோவில் விஜய் சேதுபதி அதிரடி நாயகனாக நடிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க போவது நிச்சயம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் முழுக்க, முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு முழுநீள கமர்சியல் திரைப்படமாக வரும் என்பதும், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கின்றது.