Home Tags Posts tagged with "Arya"

0 291

தொடர்ந்து இரட்டை அர்த்தங்கலான படங்கள் மூலம் வெற்றி கண்ட இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் அருமையான குடும்ப காமெடி காதல் கதை படமும் இந்த கஜினிகாந்த் என்றும் சொல்லலாம் இதற்கு முன் ஹர ஹர மாகதேவ் மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து படங்கள இயக்கிய சந்தோஷ் ஜெயகுமார் படமா என்று ஆச்சர்ய படுத்தும் படம் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த வித ஆபாசம் இல்லாமல் வெறும் நகைசுவை அதோடு அழகான காதலை மிக அற்புதமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார்

இந்தியா மீது 17 முறை படையெடுத்தவர் கஜினிமுகமுது. விடாமுயற்சிக்கு உதாரணமாக அவரைச் சொல்வார்கள். ஏ.ஆர்.முருகதாஸ், மறதிக்காரரை மையமாகக் கொண்ட கதைக்கு கஜினி என்று பெயர் வைத்தவுடன், கஜினி என்றால் மறதிக்காரர் என்ற அடையாளம் வந்துவிட்டது.கஜினிகாந்த் அதை மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது. தர்மத்தின்தலைவன் பட ரஜினி போல் ஞாபக மறதிக்காரர் ஆர்யா. ஒரே நேரத்தில் அழகான பெண்ணின் காதலுக்கும், காதலியின் அப்பாவுடைய தீவிர வெறுப்புக்கும் ஆளாகிறார் ஆர்யா.காதலில் வென்றாரா? என்பதைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் ஏற்கெனவே வந்த பல படங்களின் காட்சிகளை நினைவுபடுத்தினாலும் சிரிப்புக்குப் பஞ்சமில்லை. ஞாபகமறதிக்காரர் வேடத்துக்கு ஆர்யா பொருத்தமாக இருக்கிறார். படம் முழுக்கச் சிரிக்கவைப்பது, காதலி நிராகரித்துவிட்டாள் என கலங்கி அழும்போது, படத்தில் இடம்பெறும் ஒரே ஒரு சண்டைக்காட்சியில் சிறப்பாகச் சண்டை போடுவதுமென எல்லாவற்றையும் செய்துவிட்டார்.அவருக்குப் பக்கபலமாக கருணாகரனும் சதிஷூம். இருவரில் யாருடைய தேதி கிடைக்கிறதோ அவரை ஆர்யாவோடு கோர்த்துவிடுகிறார் இயக்குநர். அவர்களும் ஆர்யாவின் பேச்சுக்குப் பொருத்தமாகப் பதில் பேசி சிரிக்கவைக்கிறார்கள்.

நாயகி சாயிஷா அழகுப்பதுமை. தமிழ் சினிமாவுக்கும் மிக அருமையான நடிகை அழகு நடிப்பு நடனம் என்று எல்லாத்திலும் மிகவும் கைதேர்ந்த ஒரு நடிகை என்று தான் சொல்லணும் அதோடு தொடர்ந்து வெற்றி படங்கள் மேலும் தமிழ் சினிமாவின் ராசி நடிகை பட்டியலில் இடம் பிடிக்கிறார் சாயிஷா பாடல்களில் உடலழகைக் காட்டி மகிழ்விக்கிறார். நடிக்கவும்

நாயகியின் அப்பாவாக வரும் சம்பத், நாயகனின் அப்பாவாக வரும் ஆடுகளம் நரேன் ஆகியோரும் சிறப்பு. அதிலும் ஆடுகளம் நரேனின் ஆட்டம் அதிரடி.இதுவரை கொஞ்சம் சீரியஸான கதாபாத்திரத்தில் வந்த நரேன் இந்த படம் மூலம் நகைசுவை நடிகராகவும் தடம் பதிக்கிறார்.மொட்டை ராஜேந்திரன், நீலிமாராணி, உமாபத்மநாபன் ஆகியோர் தங்கள் பங்கை நன்றாகச் செய்திருக்கின்றனர்.வில்லனாக வரும் லிங்கேஸ் இந்த படம் மூலம் லிஜீஷ் என்ற பெயரில் நடித்துள்ளார் படத்தில் வில்லன் கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். ஆகிறார் கவனிக்கவைக்கிறார்.

பள்ளுவின் ஒளிப்பதிவு,படத்துக்கு மிக பெரிய பலம் படத்தின் காட்சிகள் ஓவியம போல ஒளிப்பதிவு செய்துள்ளார். பாலமுரளிபாலுவின் இசை ஆகியனவும் படத்துக்குத் தேவையான அளவு இருக்கிறது.

ஒருவரிக் கதையை வைத்துக்கொண்டு சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சந்தோஷ்பிஜெயகுமார்.இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமலும் வாய்விட்டுச் சிரிக்க வைக்கலாம் என்பதற்கு இப்படம் சிறந்த எடுத்துக்காட்டு. இயக்குனர் சந்தோஷ் இரட்டை அர்த்தம இல்லாமல் ஒரு தரமானகுடும்ப படம் கொடுக்க முடியும் என்பதை இந்த படம் மூலம் நிருபித்துள்ளார்.

0 215
கஜினிகாந்தை குடும்பத்துடன் பார்க்கலாம். 
 
இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் நம்பிக்கை
 
 
ஆர்யா, சயீஷா நடித்திருக்கும் கஜினிகாந்த் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம் என்று இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்.
 
ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
 
இதில் பாடலாசிரியர்கள் கபிலன் வைரமுத்து, கு. கார்த்திக், இசையமைப்பாளர் பாலமுரளி பாலு, இயக்குநர் சந்தோஷ் ஜெயகுமார், படத்தொகுப்பாளர் ஜி. கே. பிரசன்னா,  நடன இயக்குநர் பாபா பாஸ்கர், ஒளிப்பதிவாளர் பல்லு, நடிகர்கள் ஆடுகளம் நரேன், நடிகை உமா பத்பநாபன், நாயகன் ஆர்யா, நாயகி சயீஷா, நடிகை நிலீமா ராணி, நடிகர் லிங்கேஸ்வரன்,  விநியோகஸ்தர் சக்திவேலன், தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்,
 
பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து பேசுகையில், ‘இசையமைப்பாளர் பாலமுரளி பாலுவுடன் இணைந்து நான் மதியால் வெல் என்ற ‘விமன்ஸ் ஆந்தம் ’ என்ற பாடல் மற்றும் பணமதிப்பிழப்பு குறித்த ஆல்பம் ஒன்றை வெளியிட்டோம். அவருடன் இணைந்து இந்த படத்திலும் ஒரு பாடலை எழுதியிருக்கிறேன். ஆர்யாவின் ரசிகன் நான். அவரிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். தனியார் தொலைகாட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை சீசன்=2 நடத்தினால் அதில் கலந்து கொள்ளவேண்டாம். எங்க வீட்டு மாப்பிள்ளை ஆவதை விட ரசிகர்களின் செல்லபிள்ளையாக நீங்கள் இருப்பதை நாங்கள் விரும்புகிறோம்.’ என்றார்.
 
விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில்,‘ தென்னிந்தியாவில் அதிக திரைப்படங்களை தயாரித்து வரும் முன்னணி நிறுவனம் ஸ்டூடியோ கிரீன். தாங்கள் தயாரிக்கம் ஒவ்வொரு படங்களும் விநியோகஸ்தர் முதல் அனைத்து தரப்பினருக்கும் லாபம் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் படத்தை தரமாக தயாரித்து வருகிறார்கள். அவர்களின் தயாரிப்பில் அண்மையில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம் ’ ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வருவதைப் போல் கஜினிகாந்த்தும் வெற்றிப் பெறும். ஏனெனில் கஜினிகாந்த் பேமிலி எண்டர்டெயினர் படம்.’ என்றார்.
 
நடிகை உமா பத்மநாபன் பேசுகையில்,‘இயக்குநர் சந்தோஷ், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ரசிகர்களின் எந்த காட்சியை ரசிக்கிறார்கள் என்பதை உளவியல் ரீதியாக அலசி ஆராய்ந்து கதைகளையும் காட்சிகளையும் உருவாக்கி வருகிறார் என்பதை என்னுடைய சிறிய அனுபவத்தின் மூலம் தெரிந்துகொண்டேன். அதனால் தான் அவர் முதல் இரண்டு படங்களில் என்ன கொடுக்கவேண்டும் என்று நினைத்தாரோ அதைக் கொடுத்தார். இந்த படத்தில் எதனை ரசிக்கவேண்டும் என்று நினைத்தாரோ அதை கொடுத்திருக்கிறார். அதனால் இந்த படம் வெற்றிப் பெறும்.’ என்றார்.
 
நடிகர் ஆர்யா பேசுகையில்,‘ இந்த படம் தெலுங்கு படத்தின் ரீமேக். இதற்கு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான் காரணம். படபிடிப்பிற்கு முன் தயாரிப்புகளை ஏழே நாளில் இயக்குநர் சந்தோஷ் முடித்துக் கொடுத்து படபிடிப்பிற்கு சென்றார். இது அவரின் திறமை. இந்த படத்தின் வசனங்களும் இளந்தலைமுறையினை கவரும் வகையில் இருக்கும். அவரின் முதல் இரண்டு படங்களும் அடல்ட் படங்களாக இருந்தாலும் வசனங்கள் நன்றாகத்தான் இருந்தது. பாங்காக்கில் பாடல் காட்சியுடன் இப்படத்தின் படபிடிப்பைத் தொடங்கினோம். எனக்கு நடன அசைவுகள் எதுவும் வரவில்லை. ஆனால் உடன் நடிக்கும் நாயகி சயீஷாவிற்கு எளிதாக இருந்தது. நான் ரொம்ப கஷ்டப்பட்டு ஆடினேன். இந்த படத்தை 38 நாட்களில் இயக்குநர் திட்டமிட்டு நிறைவு செய்தார். இந்த படத்தை அனைவரும் குடும்பத்துடன் பார்க்கலாம். ’ என்றார்.
 
இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் பேசுகையில்,‘ ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு நான் இயக்கும் முதல் படம் இது. என் மீது நம்பிக்கை வைத்ததற்கு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்யவேண்டும் என்று தயாரிப்பாளர் முடிவு செய்தவுடன், ஆர்யாவிடம் பேசி இந்த படத்தின் பணிகள் தொடங்கியது. அவர் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாது. நாயகி சயீஷா, இந்த படத்தில் அவர் தான் என்னிடம் வேலை வாங்கினார். வசனங்களை கேட்பார். அதை படித்து, பொருள் தெரிந்துகொண்டு காட்சிகளில் சிறப்பாக நடித்தார்.
 
என்னுடைய முதல் இரண்டு படங்களும் அடல்ட் ஹாரர் காமெடி படங்கள். குடும்பத்துடன் பார்க்கமுடியுமா? என கேள்வி கேட்டு, இதற்கு விமர்சகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை எழுந்தது. ஆனால் என்னைப் பொறுத்தவரை தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்ற படங்களை பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் பார்க்கமுடியும். அவர்கள் அந்த படங்களை யாருடன் பார்க்கவேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள். இதை தெரிந்தவர்கள் யாரும் இது குறித்து விமர்சனம் செய்திருக்கமாட்டார்கள். ஆனால் கஜினிகாந்த் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம். ஏனெனில் துளி கூட ஆபாசம் இல்லாமல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் உருவாக்கியிருக்கிறோம். 
 
இந்த படத்தில் ஒரு குடும்பத்தினர் தங்களின் பிள்ளையின் காதலுக்காக எந்த எல்லை வரைக்கும் பயணிப்பார்கள் என்பதையும், தங்கள் வீட்டு பெண்ணிற்கு எந்த மாதிரியான மாப்பிள்ளையை தேர்வு செய்வோம் என்பதையும் பொழுதுபோக்கு அம்சத்துடன் உருவாக்கியிருக்கிறேன். கடைக்குட்டி சிங்கம் போல் கிராமீய பின்னணியில் இல்லாமல், நகரத்தின் பின்னணியில் தயாராகியிருக்கும் கஜினிகாந்திற்கும் ஆதரவு தரவேண்டும்.’ என்றார்.

0 326

நடிகர் சூர்யா, ஆர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி நடித்த கூட்டத்தில் ஒருத்தன்  “மாற்றம் ஒன்றே மாறாதது“ Gift Song ப்ரோமோ சாங் வருகிற ஜூன் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் , ரமானியம் டாக்கீஸ் தயாரிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் “ கூட்டத்தில் ஒருத்தன் “. அசோக் செல்வன் , ப்ரியா ஆனந்த நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை தா.செ. ஞானவேல் இயக்கியுள்ளார். இப்படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இது வரை தமிழ் சினிமாவில் முதல் பெஞ்ச் மாணவர்கள் , கடைசி பெஞ்ச் மாணவர்கள் பற்றி நிறைய படங்கள் வந்துள்ளது. இப்படம் கொஞ்சம் வித்யாசமாக மிடில் பெஞ்ச் மாணவர்களைப் பற்றி பேசும் படமாக இருக்கும். இந்த உலகத்தில் பெரும்பான்மையானவர்கள் மிடில் பெஞ்சர்ஸ் தான். அவர்களை கொண்டாடும் படமாக கூட்டத்தில் ஒருத்தன் இருக்கும். இப்படத்தில் நிவாஸ் கே பிரசன்னா இசையில் அனைத்து பாடல்களும் ஆல்பம் ஹிட்டாக வெற்றி பெற்றுள்ளது.   “ மாற்றம் ஒன்றே மாறாதது “Gift Song ஒவ்வொரு பூக்களுமே பாடலைப் போல மோட்டிவேஷனல் பாடலாக இருக்கும்.கவிஞர் கபிலன் பாடல் வரிகளில் அனைத்து பாடல்களும் மிகச்சிறப்பாக வந்துள்ளது.  இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் அனைத்தும் அனைவரையும் ஊக்குவிக்கும் வரிகளாக அமைந்துள்ளது இந்த சிறப்பாகும்.இப்பாடலில் வரும் வரியான “ உன் கேள்விக்கு விடை நீயடா , மண்பானையாய் உடையாதடா “ ,தோல்வியெல்லாம் தோல்வியல்ல , வெற்றி  என்றும் தூரமல்ல போன்ற வரிகள் அனைவருக்கும் பாஸிட்டிவான ஒரு விஷயத்தை கொடுக்கக்கூடிய வரிகளாக இருக்கும்.இப்பாடலை படமாக்கும் போதே எல்லோரும் இப்பாடல் அருமையாக உள்ளது என்று பாராட்டினார்கள். அப்போது நாங்கள் யோசித்த விஷயம் தான் இந்த Gift Song . படத்துக்குள்ளே மட்டும் இந்த பாடலை வைக்காமல் , இதை ஒரு ப்ரோமோ பாடலாக மாற்றலாம் என்று முடிவு செய்தோம். “ கொலைவெறி டி “ பாடல் எப்படி ஒரு சூப் சாங்காக இருந்ததோ அதே போல் இது Gift Song என்று எல்லோராலும் கொண்டாடப்படும் பாடலாக இருக்கும். இப்பாடலை நாங்கள் உருவாக்கிய நேரத்தில் தான் தமிழகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தது. மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்ற இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு தமிழ் சினிமா நட்சத்திரங்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை அனைவரையும் சந்தித்து அவர்களுக்குமாற்றத்தை பற்றி சொல்லகூடிய அழகான கிப்ட் ஒன்றை வழங்கினோம். அந்த பாடலை வருகிற ஜூன் 2௦ விஷுவலாக வெளியிடுகிறோம். இந்த பாடலில் இடம்பெற்றுள்ள விஷுவல்ஸ் படத்தில் இடம்பெறாது. படத்துக்கென்ற தனியாக நாங்கள் விஷுவல்சை எடுத்துள்ளோம்.இப்பாடலில் அகரம் அறக்கட்டளையின் நிறுவனர் , நடிகர் சூர்யா , ஆர்யா , சிவகார்த்திகேயன் , நாசர் , பிரகாஷ் ராஜ் , சிவகுமார் , விஷ்ணு விஷால் , சமுத்திரகனி , ஆர்.ஜே. பாலாஜி , அசோக் செல்வன் , ப்ரியா ஆனந்த் , நிவாஸ் கே பிரசன்னா , செப் தாமு , ரம்யா நம்பீசன் , வி,ஐடி கல்லூரி மாணவர்கள்  போன்ற பலர் இப்பாடலில் இடம்பெற்றுள்ளனர். இப்பாடல் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என்றார் இயக்குநர் த.செ. ஞானவேல்.

0 951

ஆர்யாவைப் கதாநாயகிகளுக்குப் பிடிக்க என்ன காரணம் என்று ஒருபடவிழாவில் விவாதிக்கப்பட்டது.  யூடிவி மோஷன்ஸ் பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணுவர்தன் பிலிம்ஸ் இணைந்து வழங்கும் படம் ‘யட்சன்’ ..

ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னதி, சுவாதி நடித்துள்ளனர். விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். ‘யட்சன்’ என்றால் குபேரன்,இயக்குபவன் என்று பொருளாம்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா  நடந்தது.அதுவே படத்தின் அறிமுக விழாவாகவும் அமைந்தது.

விழாவில் படத்தை இயக்கியுள்ள விஷ்ணுவர்தன் பேசும் போது ” இது ‘ஆரம்பம்’ படத்துக்கு முன்பே பேசப்பட்ட ஒரு விஷயம். ஆனந்தவிகடனில் வந்த சுபா அவர்களின் தொடர்கதை திரை வடிவம் பெற்றுள்ளது. படத்தின் பாடல்கள்  நன்றாக வந்து வரவேற்பைப் பெற்றுள்ளன.  கம்போசிங் ,பாட்டு என்று நாங்கள் வெளிநாடு எல்லாம் போய்  சிரமப்படவில்லை. திநகரிலுள்ள ஒரே ரூமில்தான் இப்படிப்பட்ட பாடல்களை எல்லாம் உருவாக்கினோம்.

ஒளிப்பதிவாளர் ஒம்பிரகாஷ் என்னுடன் இணைந்துள்ள 2 வது படம். ஸ்டண்ட் சில்வா ,.ஆர்ட் லால்குடி இளையராஜா

ஆர்யாவுடன் இது எனக்கு 5 வது படம். ஆர்யா என் ஹீரோ.அவரைப் பார்த்தாலே எதுவும் கேட்க வேண்டாம். கதை சொல்ல வேண்டாம். எப்ப மச்சான் ஷூட்டிங் போகலாம் என்பவர் .அவருடன் என் தம்பி கிருஷ்ணாவும் இணைந்திருக்கிறார்.நான் எப்போ படம் தொடங்கினாலும்அம்மா உன் தம்பியையும் நடிக்க வைப்பா என்பார்கள் . அவருக்கு ஏற்றமாதிரி கதை அமைந்ததால் இதில் நடிக்க வைத்திருக்கிறேன். ஆர்யா-கிருஷ்ணா இரண்டு பேரையும் நடிக்க வைக்க படாதபாடு பட்டேன். தீபா சன்னதிக்கு நல்ல நடிப்புக்கு இடம் தருகிற பாத்திரம்.

யுவன் என் ஆரம்பகாலம் முதல் என்னுடன் பெரியபலமாக தொடர்பவர். நீ எத்தனை ஆல்பம் போட்டாலும் எனக்கு தனியா போட வேண்டும் என்று உரிமையோடு கேட்கிற நட்பு எங்களுடையது.

படப்பிடிப்பே ஜாலியாக கலாட்டாவாக போனது.” என்றார்.

பாடலாசிரியர் பா. விஜய் பேசும் போது ” நானும் விஷ்ணுவர்தனும், யுவனும் இணைந்து இது எட்டாவது படம். அதிலும் எல்லாப் படங்களிலும் எல்லாப் பாடல்களையும் எழுதியுள்ளேன். எங்கள் 3 பேரிடம் அப்படி ஒருநட்பு, புரிதல் உள்ளது. இவர்களுக்கு எழுதும் போது மட்டும் பாடல் எழுதும் மனநிலையில்  நான் போனதில்லை நண்பர்களைப் பார்ப்பது போல போவேன். இந்தப் படத்தின் மூலம் ஆர்யா என்கிற நண்பனின் நட்பு கிடைத்தது. ஆர்யாவை ஏன் எல்லாப் பெண்களும் கதாநாயகிகளும் விரும்புகிறார்கள் தெரியுமா? இதுவரை தெரியாது,இப்போது புரிகிறது.
நட்புக்குஅவ்வளவு மரியாதை தருபவர். எளிமையாக, இனிமையாகப் பழகுபவர்.
இதுவரை மூவாயிரம் பாடல்கள் எழுதியிருக்கிறேன். நான் பிரஸ்மீட் வைத்து பாட்டெழுத மாட்டேன் என்று சொன்னதில்லை நடிக்க வந்தபிறகு அப்படி பரப்பி விட்டார்கள். இதன் பாடல்களும் ,’சர்வம்’ படத்துக்குப்பிறகு இந்தப்படமும் பெரிய வெற்றியடையும் ”என்றார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா  பேசும்போது ” இந்த விஷ்ணுவர்தனின் படத்துக்கு மட்டும் யுவன் என்ன ஸ்பெஷலாக செய்திருக்கிறார் என்ன மேஜிக் செய்திருக்கிறார் என்கிறார்கள். விஷ்ணுவர்தனின் துறுதுறுப்பும் எனர்ஜியும் பழகினாலே நமக்கும் வந்து விடும் .அவரை பள்ளி நாட்களிலிருந்தே தெரியும். நல்லதோ கெட்டதோ முகத்துக்கு நேரே சொல்பவர் .”என்றார்.

கிருஷ்ணா பேசும் போது ”ஆர்யாவுடன் சேர்ந்து நடித்தது செம ஜாலியாக இருந்தது..என்னைப் பார்க்கிறவர்கள் எல்லாரும் ஏன் அண்ணன் இயக்கத்தில் நடிக்கவில்லை என்பார்கள் இனி இதைக் கேட்க மாட்டார்கள் .என் முதல் இரண்டு படமும் தோல்வி அடைந்தபோது மிகவும் வருத்தப்பட்டேன். அப்போது அண்ணன் ‘நேரம் வரும்போது நாம் இணையலாம் ‘என்று கூறினார். என் படங்களுக்கு யுவனின் இசை அடையாள அட்டையாக இருந்து வெற்றி பெற்றுத்தந்தது. ‘கழுகு’ படவெற்றிக்கு100 சதவிகித காரணம் யுவன் இசைதான்” என்றார்.

ஆர்யா பேசும்போது “என்னைநடிக்க வைத்து யூடிவியில் பலபடங்கள் எடுத்த போதும் தொடர்ந்து வாய்ப்பு தருகிறார்கள். எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறார்கள். விஷ்ணுவர்தனிடம் நான் கதை கேட்பதில்லை. அவர் சொல்ல ஆரம்பித்தால் ஆறேழு மணிநேரம் போகும் ஆறேழு மணிநேரம் கதை சொல்வார் அவருடைய பொறுப்பை விடமாட்டார் எனவே நான் கதை கேட்பதில்லை.

நான் இதுவரை நடித்தவை 25 படங்கள், என் எல்லாப் படங்களுக்கும் யுவன்தான் இசை என்கிற அளவுக்கு நிறைய செய்துள்ளார் .என் சினிமா பயணம் ‘தீப்பிடிக்க’ பாடலில் தொடங்கியது அதுமுதல் ‘தீப்பிடிக்க’ பாட்டில் நடித்த பையன் என்று அடையாளம் வந்தது. அது இன்னும் தொடர்கிறது காரணம் யுவன்..

‘சர்வம்’ படத்துக்கு பிறகு ‘யட்சன்’ படமும் பேசப்படும் .இதில்கிருஷ்ணா  புது கிருஷ்ணாவாக வருவார் கிருஷ்ணாவுடன் நடித்ததில் திருப்தி. அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார். பெங்களூரிலிருந்து வந்துள்ள தீபா சன்னதி அழகான நடிகை.இந்தப் பட அனுபவம் ஜாலியாக இருந்தது.” என்றார்.

நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் சுபா, நடிகை தீபா சன்னதி, ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் தயாரிப்பாளர் யூடிவி ஜி.தனஞ்ஜெயன் ஆகியோரும் பேசினார்கள்.

ஆடியோ சிடியை எழுத்தாளர்கள் சுபா வெளியிட யுவன் சங்கர்ராஜா பெற்றுக் கொண்டார்.