10.2 C
New York
Wednesday, April 24, 2024

Buy now

Shanmuga Pandiyan in sagaptham Movie news

சகாப்தம் பொள்ளாச்சி,வால்பாறை,ஆழியார் டேம் போன்ற பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பு 25 நாட்கள் நடைபெற்றது. இங்கே ஒரு டூயட் பாடல் படமாக்கப்பட்டது இதற்கு மாஸ்டர் ஹபீப் நடனம் அமைக்க நாயகன் சண்முகபாண்டியனும்,நாயகி நேஹா ஹிங்கும் கலந்துகொண்டார்கள்.இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்தில் 15 நாட்கள் நடைபெற்றது அப்போது அங்கே நாயகனின் ஓப்பனிங் சாங்கும் எடுக்கப்பட்டது அதில் சுமார் ஆயிரம் துணை நடிகர்களும்,இருநூறு நடன கலைஞர்களும் பங்கேற்க மிக பிரமாண்ட முறையில் நடனம் அமைத்து கொடுத்துள்ளார் மாஸ்டர் ஷோபி .மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் 20 நாட்கள் நடைபெற்றது.

மலேசியாவில் உள்ள பினாங் என்ற இடத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக போட் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டது.

இதில் கதாநாயகன் சண்முகபாண்டியன் ஐம்பது வில்லன்களுடன் 15 போட்டுகளில் இருநூறு துணை நடிகர்களோடு சேர்ந்து நடுக்கடலில் சண்டைக் காட்சியில் பங்கேற்றார். அந்த சண்டைக் காட்சி ஐந்து கேமிராக்கள் வைத்து மிக பிரமாண்டமாக படமாக்கப்பட்டது. மேலும் பிரமாண்டம் சேர்பதற்காக ஹெலிகாப்டர் மூலமாகவும் இந்த சண்டை காட்சியை படமாக்கியுள்ளார்கள்.

இந்த சண்டைக்காட்சி மொத்தம் நான்கு நாட்கள் நடைபெற்றது அந்த சண்டைக் காட்சியை தாய்லாந்தை சேர்ந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கேச்சா அவர்களால் படமாக்கப்பட்டது.

இப்படத்தின் மூலம் சவ்ரவ் என்ற இந்தி வில்லன் நடிகர் தமிழில் அறிமுகமாகிறார்.

சகாப்தம் படத்திற்காக லங்காவியிலும் அதன் சுற்றியுள்ள மலை மற்றும் கடல் பகுதிகளிலும் ஒரு டூயட் பாடல் சுமார் 50 இலட்சம் பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளது.இதற்கு நடன மாஸ்டர் நோபல் நடனம் அமைத்தார்.இப்பாடல் காட்சியில் நாயகன் சண்முகபாண்டியனும் , நாயகி சுப்ரா ஐய்யப்பாவும் நடனம் ஆடியுள்ளார்கள்.இந்த ஒரே பாடலில் மட்டும் நாயகனுக்கு 50 காஸ்ட்டியுமும்,நாயகிக்கு 50 காஸ்ட்டியுமும் பயன்படுத்தியுள்ளனர்.இப்பாடல் காட்சிகளை இதுவரை யாரும் படம்பிடிக்காத பகுதிகளில் படம்பிடித்துள்ளார்கள்.இதற்க்காக இப்படக்குழு
காலை 4 மணிக்கு கிளம்பி சுமார் 5 மணிநேரம் பயணம் செய்து லொகேஷனை அடைந்தார்களாம்.இப்பாடல் நான்கு நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது. இப்பாடலுக்குதான் அதிகமான சிரமப்பட்டோம் என்றாலும் பாடல் மிக அருமையாக வந்துள்ளது என கூறுகிறார் ஒளிப்பதிவாளர் எஸ்.கே.பூபதி. இப்படத்தின் படபிடிப்பிற்காக நடிகர் ரஞ்சித் திருமணமானா மறுநாளே கலந்துகொண்டாராம்

நான்காம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து மற்றும் பேங்காக்கில் இருபது நாட்கள் நடைபெற்றது.

தாய்லாந்து நாட்டிலுள்ள பட்டயா பீச்சில், அந்நாட்டின் பாரம்பரியம் மிக்க சாமுராய் வகை வாள்சண்டை வீராங்கனைகள் இரு பெண்மணிகளோடு, ஆப்ரிக்கன்,ஆஸ்திரேலியா ,பெல்ஜியம் ,சவூதி அரேபியா,ஜப்பான் போன்ற நாடுகளை சேர்ந்த மார்ஷல் ஆர்ட்ஸ்,லெக் ஜம்ப்,பாக்சிங் ,ரிவர்ஸ் ஆக்ஸன்,பாடி பிளாக்கிங் போன்ற கலைகளின் தலை சிறந்த கலைஞர்கள் பங்கேற்க சண்முகபண்டியன் மோதும் சண்டை காட்சி 6 நாட்கள் படபிடிப்பில் சுமார் 60 இலச்சம் செலவில் எடுக்கப்பட்டது. இச்சண்டை காட்சியில் 20 தாய்லாந்து ஸ்டண்ட் வீரர்களும் பங்கேற்றார்கள். இதில் நடிகர் ஜெகன், ரஞ்சித்,சுரேஷ் ஆகியோரும் பங்கேற்றார்கள் .இச்சண்டை காட்சியில் அதிகமான கிரேன் ஷார்ட்டுகளை பயன்படுத்தி மிக சிறப்பாக எடுத்துள்ளார் ஸ்டண்ட் மாஸ்டர் கேச்சா.

இப்படத்தின் மூலம் ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் கேச்சா தமிழில் அறிமுகமாகிறார். எத்தனையோ இந்தி,தெலுங்கு மொழி இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் இந்திய சினிமாவில் நடிக்க அழைத்தும், நடிக்க முன் வராத கேச்சா தன்னை இந்திய சினிமாவில் முதன் முறையாக விருதகிரி படம் மூலம் அறிமுகப்படுத்திய விஜயகாந்த்- அவர்களுக்காக இதில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.இவர் நாயகன் சண்முகபாண்டியனோடு மோதும் சண்டை காட்சி சமீபத்தில் பேங்காக்கில் படமாக்கப்பட்டது பேங்காக்கில் அண்டர்கிரவுண்ட் கார் சேஸிங் மற்றும் பல அடுக்கு மாடிகள் கொண்ட பகுதிகளில் சேஸிங் காட்சிகள் படம் எடுக்கப்பட்டது இக்காட்சியில் நாயகன் சண்முகபாண்டியன் 150 மாடி கட்டிடத்தில் இருந்து குதிக்கும் காட்சியில் டூப்பு இல்லாமல் நடித்தார் இதை கண்ட கேச்சாவும் படக்குழுவினரும் அவரை மிகவும் பாராட்டினார்கள் என்கிறார் இயக்குனர் சுரேந்திரன். இச்சண்டை காட்சிகள் பெரும்பாலும் ஹெலிகாப்டர் மூலம் படமாக்கியுள்ளாராம் ஒளிப்பதிவாளர் எஸ்.கே.பூபதி. இச்சண்டை காட்சி ஆறு நாட்கள் சுமார் அறுபது லட்சம் பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளதாம் .

அனைத்து சூட்டிங்கும் முடிந்த நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பாக
சிம்பு, ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசன் ஆகியோர் பாடிய குத்து பாட்டை, மிக விரைவில் ஒரு கோடி ரூபாய் பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக அரங்கு அமைத்து படமாக்க திட்டமிட்டு உள்ளனர். இப்பாடலில் கதாநாயகன் சண்முகபண்டியன் மற்றும் இரண்டு கதாநாயகிகள் நேஹா ஹிங் மற்றும் சுப்ரா ஐயப்பா நடனமாட உள்ளனர். இப்பாடலுக்கு மாஸ்டர் ராஜு சுந்தரம் நடனம் அமைக்கவுள்ளார். இப்பாடலை சிம்பு தயாரிப்பாளர் எல்.கே.சுதிஷ் அவர்களின் நட்புக்காக பாடிகொடுத்தாராம். விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளது என்கிறார் இயக்குனர் சுரேந்திரன்

இதில் நாயகனாக சண்முகபாண்டியனும் நாயகிகளாக நேகா ஹிங் வும், சுப்ரா ஐயப்பாவும் அறிமுகமாகிறார்கள். இவர்களோடு சிங்கம்புலி, ஜெகன்,பவர்ஸ்டார் டாக்டர்.சீனிவாசன்,தேவயாணி, ரஞ்சித், ராஜேந்திரநாத்,சண்முகராஜன், பன்னீர் புஷ்பங்கள் சுரேஷ், தலைவாசல் விஜய்​ , ரேகாசுரேஷ்,முத்துகாளை​ மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE