6.8 C
New York
Friday, March 29, 2024

Buy now

Nedunchalai hero Aari – An Intro

arri2

Nedunchalai hero Aari – An Intro

Actor Aari is becoming the talk of Kollywood this week due to his outstanding performance in Udhayanidhi Stalin presents Krishna directorial Nedunchalai.

Aari is basically a trained theater artist with over 7 years experience in theater plays produced by Magic Lantern, Theatre Nisha and Inland Theatres which helped hone his acting skills.

He had privilege to act as hero along with 2 legends of the Indian Film industry, directors Balachander and Bharathiraja in his debut movie Rettachuzhi produced by ace director Shankar. Before that Aari was appeared in Cheran’s Aadum Koothu.

Aari also played in the lead role in Maalai Pozhuthin Mayakkathile that released in 2012.
Also as an acting tutor have trained and conducted workshop for the actors in the movie Inidhu Inidhu
and also trained few other upcoming actors.
As a fitness trainer specializing in Periodic Age Variation trained actors in the movies Autograph and Thavamaai Thavamirunthu. Worked on Jeeva for Katrathu Tamizh, Aadhi for Mirugam, Sasikumar for
Subramaniapuram, Parthiban for Aayirathil Oruvan and Ameer for Yogi.
Now after the release of Nedunchalai, film personalities and media persons have pouring praises on Aari for his natural acting.
Aari says, “I’m a cool person and I wont expect anything from others I accept how they are… That’s the secret of my success and expecting appreciation for my sincere efforts.”

நெடுஞ்சாலை நாயகன் ஆரி.. ஒரு அறிமுகம்

முன்பெல்லாம் திரைத் துறைக்கு வருவதற்கு முன், நாடகங்களில் நடித்து நடிப்பு பயிற்சி பெறுவார்கள். எம்ஜிஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்கள் சினிமாவுக்கு வந்தது அப்படித்தான்.

இன்றைக்கு அப்படி நாடகத்தில் முறையாக 7 ஆண்டுகள் பயிற்சி பெற்று சினிமாவுக்கு வந்துள்ளவர் ஆரி. மேஜிக் லாந்தர்ன், தியேட்டர் நிஷா மற்றும் இன்லேன்ட் தியேட்டர்ஸ் போன்ற நாடகக் குழுக்களில் நடித்திருக்கிறார்.
இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் 2010-ல் தான் அறிமுகமான முதல் படமான ரெட்டைச் சுழியில் இந்திய சினிமாவின் சிகரங்களான பாலச்சந்தர் மற்றும் பாரதிராஜாவுடன் நடித்த பெருமைக்குரியவர்.
பிரகாஷ் ராஜ் தயாரித்த இனிது இனிது காதல் இனிது படத்தில் நடித்த புதுமுகங்களுக்கு நடிப்புப் பயிற்சி கொடுத்தவர் ஆரிதான். இதுபோல பல புதுமுகங்களுக்கு இவர் பயிற்சி அளித்துள்ளார்.
இவர் ஒரு பிட்னஸ் பயிற்சியாளரும்கூட. நடிகர்களை வயதுக்கேற்ற தோற்றத்துக்குக் கொண்டு வருவதில் ஸ்பெஷலிஸ்ட். சேரனின் ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, கற்றது தமிழில் ஜீவா, மிருகம் படத்தில் ஆதி, சுப்பிரமணியபுரம் படத்தில் சசிகுமார், ஆயிரத்தில் ஒருவன் பார்த்திபன், யோகியில் அமீர் ஆகியோருக்கு இந்த பிட்னெஸ் மற்றும் வயதுக்கேற்ற தோற்றம் கொண்டு வந்தவர் ஆரிதான். சேரன் – நவ்யா நாயர் நடித்த ஆடும் கூத்து படத்திலும் ஆரி நடித்துள்ளார்.
2011-ல் மாலைப் பொழுதின் மயக்கத்திலே படத்தில் நாயகனாக நடித்தார் ஆரி.
அடுத்து அவர் நடித்த படம்தான் கிருஷ்ணா இயக்கத்தில் இந்த வாரம் வெளியாகியுள்ள நெடுஞ்சாலை. உதயநிதி ஸ்டாலின் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
முழுக்க முழுக்க சாலையில் நடக்கும் கதை இது. பார்த்த பத்திரிகையாளர்களும் திரையுலகினரும் படத்தை பாராட்டியுள்ளனர். ஆரியின் நடிப்பும் விறுவிறுப்பான கதையோட்டமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
திரையுலகில் ஆரி எதிர்ப்பார்த்த அவருக்கான இடத்தை இந்த நெடுஞ்சாலை பெற்றுத் தந்துள்ளதாகவே இயக்குநர்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE