9.8 C
New York
Saturday, April 20, 2024

Buy now

“Naan Avalai Santhitha Pothu” Audio launched

சினிமா ப்ளாட்பார்ம் என்ற புதிய  பட நிறுவனம் சார்பில் V.T ரித்திஷ்குமார் தயாரித்துள்ள படம் நான் அவளைச் சந்தித்த போது. இப்படத்தை எழுதி இயக்கி இருப்பவர் எல்.ஜி ரவிசந்தர். நேற்று இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் தியேட்டரில்  நடைபெற்றது.

நடிகர் சாம்ஸ் பேசியதாவது,

“எனகு தமிழ்சினிமா லாபமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இப்படத்தின் இயக்குநர் என்மீது நம்பிக்கை வைத்து என்னை நடிக்க வைத்துள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் படத்தில் பன்ச் டயலாக் எல்லாம் பேசி இருக்கிறார்..பாடல்கள் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. இப்படத்தில் உள்ள அள்ளிக்கொள்ளவா பாட்டை கே.ராஜன் சார் அருகில் இருந்து பார்க்கும் போது பயமாக இருந்தது. ஆனால் அவரும் பாட்டை ரசித்தார். பாக்கியராஜ் சார், பேரரசு சார் எல்லாம் கண்டெண்ட் கொடுக்க வேண்டும். இப்படம் பெரிதாக ஜெயிக்க வேண்டும்” என்றார்

நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது,

“எப்போதும் பழைய ஆட்களிடம் வேலை செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு பிடித்தது எல்லாமே சினிமா தான். இப்படத்தில் கதை நான் கேட்கவே இல்லை. கதை மீது இயக்குநருக்கு பெரிய நம்பிக்கை உள்ளது. பாக்கியராஜ் சாரின் மகனால் தான் எனக்கு சந்திரமெளலி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. சினிமா பின்னணி இல்லாதவர்களும் நிறையபேர் சாதித்து இருக்கிறார்கள். அது எனக்குப் பெரிய ஊக்கத்தைத் தரும். இங்கு அவ்வளவு சீக்கிரம் யாரையும் நம்பிவிடக்கூடாது என்பதை கற்றுக்கொண்டேன். இந்தப்படத்தோட வாய்ப்பு கொடுத்ததிற்கு தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இருவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் வொர்க் பண்ண அனைவரும் என்னை நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள்” என்றார்

இயக்குநரும் நடிகரும் ஆன கே.பாக்கியராஜ் பேசியதாவது,

“இப்படத்தின் இசை அமைப்பாளர் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கிறார். கேமராமேன் செல்வா நல்லா வேலை செய்பவர். ஹீரோ சந்தோஷ் அவரது கஷ்டங்களைச் சொன்னார். அவரும் டெபனட்டா ஒரு ப்ரேக் கிடைக்கும். எல்,ஜி.ரவிச்சந்தர் காமெடி டயலாக் எழுதுகிறவர் என்றார்கள். ஆனால் சீரியஸாக இருந்தார். ஆனால் அவர் பேசியபோது தான் தெரிகிறது அவர் எவ்வளவு காமெடி செய்பவர் என்று. நான் சினிமாவைப் பார்த்து கண்கலங்கி ரொம்பநாள் ஆகிவிட்டது. இந்தப்படத்தைப் பார்த்த சில பெண்கள் அழுதார்கள் என்று கேள்விப்பட்டேன். அப்படி என்றால் நிச்சயம் இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்கும். எனக்குத் தெரிஞ்சி இரண்டு பெட்ஷீட் வியாபாரிகளை தயாரிப்பாளர்கள் ஆக்க முயற்சி நடந்த கதை உண்டு. இங்கு ஏமாறுவதற்கான சூழல் நிறைய உண்டு. இப்படத்தின் தயாரிப்பாளர் ரொம்ப நம்பிக்கையாக வந்திருக்கிறார். அவருக்கு ஏற்ற டீமும் அமைந்துள்ளது. நான் டிஸ்டிப்யூட்டரிடம் கதை சொல்வது பெரிய கொடுமை. பாரதிராஜா அப்படி நிறையபேரிடம் கதை சொல்லி சிரமப்படுவதைப் பார்த்திக்கிறேன். அதனால் நான் எடுக்கும் படத்தில் யாருக்கும் கதை சொல்லமாட்டேன். முந்தானை முடிச்சு படத்தின் கதையை கேட்டபின் ஏவி.எம்-ல் இப்படத்திற்கு இளையராஜா தான் இசை அமைக்கணும் என்றார்கள். நான் கங்கை அமரனை பிக்ஸ் பண்ணி இருந்தேன். பின் ஏவி.எம் கங்கை அமரனை சந்தித்து அவருக்கு இரு படங்கள் தருவதாகச் சொல்லி இந்தப்படத்தை இளையராஜாவிற்கு கொடுத்தார்கள்.

நான் வளர்ந்தது பெயர் வாங்கியது எல்லாமே பெண்களால் தான். எம்.ஜி.ஆர் ஒரு மீட்டிங்கில் பெண்கள் போனபின் ஆண்களிடம் பேச வேண்டும் என்றார். பின் ஆண்களிடம் அவர் சொன்னார், “ரகசியம் ஒன்றுமில்லை. இவ்வளவு பெரிய கூட்டத்தில் ஒன்றாக கலைந்து போகும்போது பெண்கள் அவதிப்படக்கூடாது என்று நினைத்து தான் அவர்களை முதலாவதாக போகச்  சொன்னேன்” என்றார். அப்படி யோசிக்கக் கூடிய எம்.ஜி.ஆர் என் படங்களை பார்த்துவிட்டு என்னை கலைவாரிசு என்று சொல்லி இருக்கிறார் என்றால் நான் பெண்களை எப்படி மதித்திருப்பேன் என்று புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தப்படத்தைப் பார்த்து சில பெண்கள் அழுததாகச் சொன்னதால் எனக்கும் இப்படத்தை உடனே பார்க்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறது” என்றார்

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE