8.3 C
New York
Thursday, March 28, 2024

Buy now

Maniyar Kudambam

குணச்சித்திர, நகைச்சுவை நடிகரான தம்பி ராமையா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். அவருடைய இயக்கத்தில் அவரது மகன் கதாநாயகனாக நடித்துள்ளார். அப்பா, மகன் கூட்டணியில் ஒரு கலகலகப்பான குடும்பம் பிளஸ் நகைச்சுவைக் கதையைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள்.தனது மகன் உமாபதி ராமைய்யாவை ஹீரோவாக வைத்து தம்பி ராமைய்யா கதை, திரைக்கதை, வசனம்
எழுதி இயக்கியதோடு, பாடல்கள் எழுதி இசையும் அமைத்திருக்கும் ‘மணியார் குடும்பம்’ எப்படி
என்பதை பார்ப்போம்.

கிராமம், குடும்பம், முறைப் பெண், காதல், வில்லன் என வழக்கமான தமிழ் சினிமாவுக்கு உரிய ஒரு கதையைத்தான் தேர்வு செய்திருக்கிறார் தம்பி ராமையா. படத்திற்குத் தூணாக இருப்பது அவருடைய கதாபாத்திரம்தான். ஒன்றுமில்லை என்றாலும் வறட்டு கௌரவத்துடன் நிஜ வாழ்வில் வாழும் மனிதர்களை அப்படியே பிரதிபலித்திருக்கிறார்.

பொறுப்பில்லாத  கிராமத்து இளைஞராக உமாபதி. அந்த மாதிரி கதாபாத்திரத்தில், இயல்பாக இருந்தாலே போதும் நடிப்பது தெரியாது. அவரும் நடிப்பில் குறை வைக்காமல் செய்ய முயற்சி செய்கிறார். நடனத்தில் முன்னணி ஹீரோக்களுக்கும் போட்டியாக இருப்பார் போலிருக்கிறது. வசனத்தை இன்னும் தெளிவாக உச்சரிக்கக் கற்றுக் கொண்டால் அவரும் தமிழ் சினிமாவில் ஒரு இடத்தைப் பிடிக்கலாம்.

நாயகி மிருதுளா முரளி, நாயகன் உமாபதியைக் காதலிப்பதோடு நிற்காமல் அவர் உயர்வதற்கும் உறுதுணையாக நிற்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி, ஜெயப்பிரகாஷ், ராதாரவி, ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, பவண், ஸ்ரீரஞ்சனி, ஸ்ரீஜா, யாஷிகா ஆனந்த் என பலர் நடித்திருக்கிறார்கள்.குத்து பாட்டு, காதல் பாட்டு, கிளைமாக்ஸுக்கு முன்பாக ஒரு பாஸ்ட் பீட் பாட்டு, இரண்டு
சண்டைக்காட்சிகள், சில காமெடி காட்சிகள், சில செண்டிமெண்ட் என்று பழைய சினிமா பாணியை
கையாண்டிருந்தாலும், திரைக்கதையை சிதைக்காமல், தான் சொல்ல வந்ததை இயக்குநர் தம்பி ராமைய்யா
கமர்ஷியலாக சொல்லியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE