10.3 C
New York
Wednesday, April 24, 2024

Buy now

Kodi Veeran Review

சசிகுமார் நாயகனாக நடித்து வெளிவந்து இருக்கும் படம் கொடி வீரன் இந்த படம் இவருக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று என்று சொல்லலாம் காரணம் இந்த படம் தான் அவரின் உயிர் நண்பனை இழந்த படம் மிகஉந்த சோகத்திலும் பல பிரச்சனைகள் மத்தியிலும் வெளியாகி இருக்கும் படம் என்றால் அது கொடி வீரன் இந்த படம் அவருக்கு காய் கொடுக்குமா இல்லை என்ன என்பதை பாப்போம்

உறவுகளின் பலத்தை மிகவும் எதார்த்தமாக காட்டும் ஒரு இயக்குனர் என்றால் அது முத்தையா என்பது நாம் அறிந்த விஷயம் இவர் உறவுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்த்டுத்து அதில் மாபெரும் வெற்றி பெற்றவர் இதற்கு எடுத்துக்காட்டு தான் கொம்பன் படம் மாமனார் மருமகன் உறவை மிக அழகா காண்பித்து இருப்பார் அதே போல இவரின் படங்கள் அனைத்தும் அப்படி தான் இதிலும் தங்கை மற்றும் மைத்துனர் உறவு மற்றும் காதல் இவை அனைத்தையும் கலந்த ஒரு கலவையாக கொடுத்துள்ள படம் தான் கொடி வீரன்.

கதைக்கு என்ன தேவையோ அதை மிகவும் அழகாக படப்பிடித்துள்ளார் அதே போல படத்தின் திரைக்கதை மிகவும் நேர்த்தியாக மிகவும் சுவாரியஸ்மாக அமைத்துள்ளார் . சரி படத்தின் கதை மற்றும் களமும் பார்ப்போம்

சசிகுமார் சிறு வயதிலேயே தன் தாயை இழக்கின்றார். அன்றிலிருந்து தன் தங்கையை அவர் தான் பார்த்துக்கொள்கின்றார். தன் தங்கைக்கு ஒன்று என்றால் ஊரே எதிர்த்து வந்தாலும் உண்டு, இல்லை என்று பார்த்துவிடுவார்.

அப்படியிருக்க அதே ஊரில் பசுபதி அவருடைய தங்கை கணவனுடன் சேர்ந்து கொண்டு பல நாச வேலைகளை செய்து வருகின்றார். இதை அந்த ஊர் வருவாய் துறை அதிகாரி விதார்த் தட்டி கேட்கின்றார்.

விதார்த்திற்கும் சசிகுமார் தங்கைக்கும் திருமணம் நடக்க, பிறகு என்ன தன் மச்சான் பிரச்சனை இனி என் பிரச்சனை என சசிகுமார் இவர்களை காப்பாற்ற செய்யும் வேலையே மீதிக்கதை.

சசிகுமார் பிரம்மா, பலே வெள்ளையத்தேவா என பல ரூட்டில் சென்று நமக்கு இது தான் சரி என்று கிராமத்து வீரனாக களம் இறங்கிவிட்டார். தன் தங்கைக்காக எதையும் செய்யும் தைரியம், தன் மச்சானுக்காக எதிரிகளை வெட்டி சாய்க்கும் வீரம் என தனக்கே உரிய ஸ்டைலில் கலக்கியுள்ளார். ஆனால், படம் முழுவதும் இவரை 10 பேர் 10 பன்ச் பேசி பில்டப் செய்துக்கொண்டே இருக்கின்றார்கள், அது தான் ஏன் என்று தெரியவில்லை.

பசுபதி நீண்ட இடைவேளைக்கு பிறகு மிரட்டல் வில்லனாக கலக்கியுள்ளார். ஆனால், சமீபத்தில் வந்த கருப்பன் படத்தின் சாயல் மிகவும் அப்பட்டமாக தெரிகின்றது, ஏன் கதையிலேயே தெரிகின்றது. படத்தின் மிகப்பெரும் பலமே செண்டிமெண்ட் காட்சிகள் தான்.

பசுபதி தன் தங்கை பூர்ணா மீது உயிராக இருக்கின்றார், சசிகுமார் தன் தங்கை சனுஷா மீது உயிராக இருக்கின்றார். இவர்கள் இருவரின் பாசத்தில் வென்றது யார் என்ற ஒன்லைனை மிகவும் ஜனரஞ்சகமாக சொல்ல முயற்சித்துள்ளார் முத்தையா? ஆனால், படத்தில் எதற்கு இத்தனை வெட்டுக்குத்து, அதிலும் பாடல் வரிகளில் எல்லாம் ‘உன் தலையை வெட்டி வைப்பேன்’ என்று படம் முழுவதும் வன்முறை தலைவிரித்து ஆடுகின்றது.

படத்தில் பெண்களுக்கான காட்சிகள் மிகவும் அழுத்தமாக உள்ளது, சனுஷா ரேணிகுண்டாவிற்கு பிறகு ஒரு நல்ல கதாபாத்திரம், அதிலும் கிளைமேக்ஸில் பூர்ணாவிடம் சென்று சசிகுமாருக்காக பேசும் காட்சியில் கவர்கின்றார். பூர்ணாவிற்கும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அழுத்தமான கதாபாத்திரம், மிரட்டியுள்ளார்.

கதிரின் ஒளிப்பதிவில் கிராமத்து பகுதிகளை கண்முன் கொண்டு வந்துள்ளார். ரகுநந்தன் இசையும் நம்மை அப்படியே அந்த காட்சிகளுக்குள் இழுத்து செல்கின்றது, பின்னணியில் அசத்தியுள்ளார்.

படத்துக்கு மிக பெரிய பலம் என்றால் அது திரைக்கதை தான் விதார்த்திற்கு என்ன ஆகுமோ என்று மிகவும் விறுவிறுப்பான திரைக்கதை மூலம் படத்துக்கு வெற்றி பாதையைமைத்துள்ளார் அதே போல படத்தின் செண்டிமெண்ட் மேலும் பலம்

படத்தில் கொஞ்சம் வன்முறையை தவிர்த்து இருக்கலாம்

மொத்தத்தில் கொடி வீரன் குடும்பத்தோடு பார்க்கும் படம்

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE