11.2 C
New York
Saturday, April 20, 2024

Buy now

KEE MOVIE Audio launch news

கீ” படத்தின் இசை வெளியீட்டு விழா! இன்று சென்னையில் வெகு விமர்சியாக நடைபெற்றது.

இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் காலீஷ் மனம் திறந்து பேசியவை ” இப்படத்தை தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் மைக்கெல் ராயப்பன் சாருக்கு என் முதல் நன்றி.பல வருடமா இப்படத்த தயாரிக்க யாருமே முன் வரல.ஒரு அறைக்குள் அடைந்துகிடந்தேன்.இறுதியா மைக்கல் சார் தயாரிக்க ஒத்துக்கிட்டாரு.ஜிவா, நிக்கி கல்ராணி மற்றும் அனைவரும் நன்றாக ஒத்துழைத்து நடித்துள்ளார்கள்.தயாரிப்பாளர்கள் எங்களை போல இளம் இயக்குனர்களுக்கும் வாய்ப்பளித்து உதவுங்கள்.பத்திரிகையாளர்கள் அனைவருக்கும்
‘ கீ ‘படக்குழு சார்பாக நன்றிகள்.”

படத்தின் நாயகன் ஜிவா பேசியவை “படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தை மலயாள நடிகர் கோவிந்த் பத்மசூரியா நடித்துள்ளார். மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்.
நிக்கி கல்ராணியுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.படத்திற்கு விஷால் அருமையாக இசையமைத்துள்ளார்.அருமையான கதையைக் கொண்டது இத்திரைப்படம்.தற்போதைய டெக்னாலஜியில் வளர்ந்து வரும் பிரச்சனையை கூறும் படமாக அமையும்.தயாரிப்பாளர் மைக்கெல் ராயப்பனுக்கும் மற்றும் இயக்குனர் காலீஷ் அவர்களுக்கும் நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்.”

விழாவில் நடிகை நிக்கி கல்ராணி பேசியவை “இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளர் அவர்களுக்கும் , காலீஷ் அவர்களுக்கும் நன்றி.ஜிவா மற்றும் பலருடன் இப்படத்தில் நடித்துள்ளேன்.மகிழ்ச்சியாக உள்ளது.சமூகத்திற்கு நல்கக் கருத்தை தரும் படமாக அமையும்.தற்ப்போது சமூகத்தில் பெண்கள் இருக்கும் ஓர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.விஷால் சூப்பரா மியுசிக் போட்டுக்காரு.”

“இப்படத்தில் இசையமைக்க என்னை பரிந்துரை செய்த R.J பாலாஜி அவவர்களுக்கு நன்றி.வாய்பளித்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கும் மிக்க நன்றி.பாட்டு எல்லாமே அருமையாக
வந்துள்ளது.உங்க அனைருக்கும் மிகவும் பிடிக்கும் வகையில் அமையும்.பாடல்களை அழகாகக எழுதிய தாமரை,கார்கி,அமுதவன்,சுபு ஆகியோர்க்கு என் நன்றிகள்.” இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் கூறினார்.

இசை வெளியீட்டு விழாவில் கோவிந்த் பத்மசூரியா பேசியது ” தமிழில் எனக்கு இது முதல் படம்.நான் ஜிவா படங்கள் நிறைய பாத்துருக்கேன். நான் அவருடைய ரசிகன். படப்பிடிப்பு துவங்கும் 2மாதங்களுக்கு முன்பே ட்டிரைலர்.ரெடி பண்ணிட்டாங்க.நா ரொம்பவே வியந்தேன்.படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குனருக்கும், தயாரிப்பயாளருக்கும் எனது நன்றி.விஷால் மிக அருமையாக மியூசிக் போட்டுள்ளார்.”

இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி கூறியது
“இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் பிரமாண்டமா இருக்கு.நண்பன் ஜீவாவிற்கு எனது வாழ்த்துக்கள்.
நிக்கி கல்ராணி மற்றும் இசையமைப்பாளர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இயக்குனர் காலீஷ் அவர்களின் முதல் படத்தின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் அவர்கள் மிகப்பெரிய வெற்றியடைந்து வளர வேண்டும்.”

இசை வெளியீட்டு விழாவில் விஷால் பேசியவை
” படத்தின் பாடல்கள் மற்றும் ட்டிரைலர் பார்த்தேன்.மிக அற்ப்புதம் இருக்கு .படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.”

இசை வெளியீட்டு விழாவில் பேசிய R.B உதயகுமார் கூறியது
“சுகாசினியும் நானும் சிறு வயதில் இருந்து நெருங்கிய நண்பர்ள்.இந்த படம் போஸ்டர்களை பார்க்கும்போதே தெரிகிறது.தற்ப்போது இருக்கும் தலைமுறையினருக்கு நல்லக் கருத்தை தரும் படமாக அமையும்.ப்ளூ வேல் கேம் மாதிரி ஒரு ஆபத்தான விளையாட்டை எதிர்கொள்வதால் ஏற்ப்படும் விளைவுகளை இத்திரைப்படம் தெரிவிக்க உள்ளது.இசையமைப்பாளர், இயக்குனர் மற்றும் படத்தில் நடித்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.”

“இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு என்னை அழைத்தத மைக்கல் ராயப்பன் அவர்களுக்கு நன்றி.படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.” என்று இசை வெளியீட்டு விழாவில் இமான் அண்ணாச்சி தெரிவித்துள்ளார்.

இயக்குனர் கே.வி ஆனந்த் பேசியவை” இசை வெளியீட்டு விழாவிற்க்கு என்னை அழைத்ததற்க்கு நன்றி.ஜிவா திறைமையுள்ள நடிகர், விஜய் சேதுபதியும் அப்படித்தான்.ஜிவா பிஞ்சிலேயே பழுத்தவர்.விஜய் சேதுபதி பழுத்து பிஞ்சானவவர். பாடல்களும் காட்ச்சியமைப்பும் மிகவும் பிரமாண்டமாக உள்ளது. இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகருக்கும், இயக்குனர் காலீஷ் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.தைரியமாக படத்தை தயாரிக்க முன் வந்த மைக்கல் ராயப்பனுக்கும் எனது வாழ்த்துக்கள். ஒளிப்பதிவாளர் அபி நந்தன் மிகச் சிறப்பான வேலையை செய்துள்ளார்.

“38 வருடங்களுக்கு முன்பு படத்தில் நடிக்கும் போது எப்படி ஒரு படபடப்பு இருந்ததோ அதேபோல் தற்போது இப்படத்தில் நடிக்கும்போதும் இருந்தது.பழைய காலங்களில் பெரியவர்களிடம் நிறைய கற்றுக்கொண்டோம்.தற்போது காலீஷ் போன்ற அறிமுக இயக்குனர்களான சிறியவர்களிடம் கற்றுக்கொள்கிறோம்.படத்தில் அனைவருடனும் நடித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் ” என நடிகை சுகாசினி பேசினார்.

இத்திரைப்படம் பிப்ரவரி 9ம் தேதி திரைக்கு வெளிவர இருக்கிறது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE