Home News Karuppan

0 242

நீண்ட இடைவெளிக்கு பின் மிக சிறந்த கிராமத்து வாசம் என்பதை விட ஒரு வாழ்கையை வாழ்ந்தோம் என்று சொல்லலாம் அந்த அளவுக்கு மிக சிறப்பான ஒரு கதை அதில் வரும் கதாபாத்திரம் பாடல்கள் வசனங்கள் எல்லாமே மண் வாசம் என்று தான் சொல்லணும் மதுரை என்றாலே கத்தி கம்பு அருவா என்று இல்லாமல் ஒரு கணவன் மனைவி உறவுகுள் இருக்கும் பரஸ்பரம் மிக அழகா சொல்லி இருக்கும் படம் தான் கருப்பன்.
மீசை மாடு இதெல்லாம் பார்த்தவுடன் இது ஒரு சண்டை படம் இல்லை காளையை அடக்கும் ஒரு பந்தய படம் இல்லை முழுக்க முழுக்க உறவுகளின் பாசபோரட்டம் தான் இந்த கருப்பன்.
இந்த படத்தில் விஜய்செதுபதி, தன்யா,பசுபதி, காவேரி, பாபிசிம்ஹா, சிங்கம்புலி,சரத் லோகிதாச,ரேணுகா, தவசி,லிங்கா,ஆறு பாலா மட்டும் பலர் நடிப்பில் இம்மானின் ரம்யமான இசையில் சக்திவேல் கண்ணுக்கு குளிர்ச்சியான ஒளிப்பதிவில் ரேணிகுண்டா படத்தை இயக்கிய பன்னீர்செல்வம் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் கருப்பன்

இந்த படத்தில் கருப்பனாக விஜய் சேதுபதி அவன் மனைவியாக அன்பு (தன்யா) தன்யாவை ஒரு தலைபட்சமாக காதலிக்கும் பாபி சிம்ஹா சின்ன வயதில் இருந்து அன்பு எனக்கு என்று வாழும் மாமன் பாபி சிம்ஹா ஆனால் காளை அடக்கும் பந்தயத்தில் தன்யா அண்ணன் பசுபதி தன்யாவை வைத்து பந்தயம் விளையாட அதில் கருப்பன் விஜய் சேதுபதி வெற்றி பெறுகிறார் இதனால் கருப்பனுக்கு திருமணம் செய்யும் நிலைமை ஏற்படுகிறது
விஜய் சேதுபதி வேலை வெட்டியில்லாமல் ஊரை சுற்றுபர் அம்மா ஒரு வாய் பேசமுடியாதவர் இந்த சூழ்நிலையிலும் தன தங்கையை கட்டி கொடுக்கிறார் காரணம் பெண்களையும் மதிக்க கூடியவர் என்பதால் அது மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த மனிதன் என்பதால் தன் தங்கையை திருமணம் செய்து கொடுக்கிறார் இதற்கு ஊரே ஒரு பக்கம் பாபி சிம்ஹா பேச்சை கேட்டு எதிர்ப்பு தெரிவித்தும் கருப்பனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.

ஆனாலும் பாபி சிம்ஹா தன்யாவை மறக்க முடியாமல் அவரை அடைய பல வழிகளில் தீங்கு செய்கிறார் இதையும் மீறி இந்த இவர்கள் எப்படி வாழ்கிறார்கள் பாபி சிம்ஹா இவர்களை எப்படி எல்லாம் துன்புறுத்தி பிரித்து வைக்கிறார் இந்த ஜோடி மீண்டும் சேர்த்துதா இல்லையா என்பது தான் மீதி கதை சாதாரண புருஷன் பொண்டாட்டி கதை அதை மிக சிறந்த திரைகதை மூலம் அருமையாக ஒரு சிறந்த படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் பன்னீர் செல்வம்

விஜய் சேதுபதி தன் அறிமுக காட்சியில் சும்மா அதிரவைக்குறார் அப்படி ஒரு சண்டை காட்சி அதே போல காளையை அடக்கும் போது இவர் அலங்காநல்லூர் களை போலவே தோற்றமளிக்கிறார் அதே போல அந்த காட்சியில் மிக அற்புதமான காட்சியமைப்பு நாம் அலங்காநல்லூரில் இருப்பது போல ஒரு எண்ணத்தை ஏற்படுத்துகிறது சண்டைகாட்சிகளில் மற்ற படங்களைவிட இந்த படத்தில் மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளார் அதே போல அதிக ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் ஒரு சிறந்த கணவன் இப்படி தான் இருப்பான் என்பதை தன் நடிப்பு மூலம் மிக சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். மீண்டும் இந்த படத்திலும் தான் ஒரு சிறந்த நடிகர் என்று நிருபித்துள்ளார்.
தன்யா இவருக்கு இது இரண்டாவது படம் ஆனால் பல படங்கள் நடித்தது போல மிக சிறப்பாக நடித்துள்ளார் காட்சிக்கு காட்சி தன திறமையை வெளிபடுத்தியுள்ளார் விஜய் சேதுபதி காதல் காட்சிகளிலும் சரி அண்ணனுடன் விஜய் சேதுபதியுடன் மோதும் காட்சிகளிலும் மிக நேர்த்தியான நடிப்பை கொடுத்துள்ளார் என்று தான் சொல்லணும் சில காட்சிகளில் சினேகாவை நினைவுபடுத்துகிறார் அழகு நடிப்பு எல்லாம் சிறப்பாக உள்ளது நிச்சயம் ஒரு சிறந்த நடிகையாக வருவார் என்பதில் சந்தேகம் இல்லை
நீண்ட நாளுக்கு பின் மீண்டும் பாபி சிம்ஹா வில்லன் இது தான் அவருக்கு நல்ல இருக்கு இதையே அவர் தொடரல்லாம் நிச்சயம் இந்த படத்திலும் விருது வாங்குவார் அந்த அளவுக்கு ஊமைக்குசும்பு வில்லன் வெகு சிறப்பாக நடித்துள்ளார்

பசுபதி ஒரு சிறந்த நடிகர் மீண்டும் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் அருமையான நடிப்பு அவர் மனைவியாக காவேரி முன்னால் நாயகி இந்த படத்தில் அண்ணி அழகு குறையவில்லை கொஞ்சம் வெயிட் போட்டுவிட்டார் மற்றபடி அப்படியே உள்ளார், சிங்கம் புலி இந்த படத்தி தான் உருப்படியாக நடித்துள்ளார் தேவையில்லாத காமெடி என்ற பெயரில் நல்ல குணசித்திரநடிகர் என்று நிருபித்துள்ளாரபடத்தின் இயக்குனர் பன்னீர்செல்வம் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக அழகாக பயன்படுத்தியுள்ளார் என்று தான் சொல்லணும் ஒரு கணவன் மனைவிக்குள் இருக்கும் அழுத்தமான உறவை மிக அழகாக நேர்த்தியாக சொல்லி இருக்கிறார். இப்படி ஒரு மனைவி நமக்கு கிடைக்கமாட்டாளா என்றும் இப்படி ஒரு கணவன் நமக்கு கிடைக்கமாட்டானா என்று ஏங்கவைக்கும் அளவுக்கு அற்புதமான அழுத்தமான ஒரு கதை அதி எல்லோரையும் மிக சிறப்பாக நடிக்கவைத்து அதோடு சிறந்த திரைக்கதையும் கொடுத்துள்ளார் இயக்குனர் பன்னீர்செல்வம்
படத்துக்கும் கதைக்கும் தேவையான இசை அதே சமயத்தில் அதற்கு தேவையான பாடல் வரிகள் மிக அர்த்தமுள்ள வரிகள் இம்மான் மற்றும் யுகபாரதி படத்துக்கு மிக பெரிய பலம் அதே போல ஒளிப்பதிவாளர் சக்திவேல் மிக அழ்கான ஒளிப்பதிவு படத்தில் எல்லோரும் மிக அழகா தன பங்கை வெளிபடுத்தியது படத்துக்கு பலம் என்று சொல்லணும்.