9.2 C
New York
Friday, March 29, 2024

Buy now

James Vasanthan – VAANAVIL VAAZHKAI

With his debut as Music Director in the film ‘ Subramanyiapuram’ Popular Television VJ James Vasanthan made us amused. Following hits like Pasanga, Nanayam, Eesan he made a very strong fan base for himself. With all the regular stories to stay aside he debuts as director with the musical film ‘ Vaanavil Vaazhkai’.

Like all the films under his music direction his directorial debut has some unique and first of its kind thing. The film is a musical film where the actors sing and perform. The film has 17 songs. Actors who are debuting in this film are trained musician and singers. Popular Carnatic Singer Sowmya turns actor and Playback Singer Harish Ragavendra turns lyric writer with the song ‘ Super girl’.

“ Music always been important thing in my life. I wanted to compose music for a musical. But In Tamil Cinema Music is considered only as a part of a film.  None initiated to write to a script that gives important to music. I myself started writing a script which now turned as ‘ Vaanavil Vaazhkai’, a musical. “ says James

“The script is based on important things of my college life the male lead character Jack is James Vasanthan in real life. The 17 songs in the expresses different moods of our life. I have made a bunch of youngsters act in the film.  They are all trained musicians, new to acting but have done a good job. This films is for the youngsters and by the youngsters. We are keeping our fingers crossed for audience’s million dollar feedback.” adds the musician turned director James Vasanthan.

ஜேம்ஸ் வசந்தன் – வானவில் வாழ்க்கை

பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராய் நமக்கு பரீட்சயமான ஜேம்ஸ் வசந்தன், சுப்ரமணியபுரம் படத்தில் இசையமைப்பளாராய் அறிமுகமாகி நம்மில் பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். பின் பசங்க, நாணயம், ஈசன் என நமக்கு அவரது இசையின்பால் ஈர்ப்பை ஏற்படுத்தினார். தற்போது, ‘வானவில் வாழ்க்கை’ படத்தின் மூலம் இயக்குனாராக புதிய அவதாரம் எடுத்து நம்மை மேலும் ஆச்சர்ய பட வைத்திருக்கிறார்.

 

இவர் இசையமைக்கும் படங்களைப் போல் இயக்கும் படத்திலும் வித்தியாசங்களுக்கு பஞ்சமே இல்லை. ‘வானவில் வாழ்க்கை’ திரைப்படம் ஒரு மியுசிக்கல் திரைப்படம். படத்தில் மொத்தம் 17 பாடல்கள் உள்ளன. படத்தில் முதன்மை கதாப்பாத்திரங்களாய் நடிக்கும் 11 புதுமுகங்களும்  இசை கலைஞர்கள். கர்டநாடக இசைக் கலைஞர் S. சௌமியா இப்படத்தில் முதன் முறையாக நடிக்கிறார், பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா பாடலாசிரியராக அறிமுகமாகிறார். இப்படி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து, இளமை ததும்பும் ஒரு திரைப்படமாய் வெளிவருகிறது.

“ இசை எனது வாழ்வில் மிக முக்கியமான பங்கு வகித்துள்ளது. இங்கு படங்களுக்கு இசை முக்கியத்துவமாய் இருக்கிறதே தவிர, இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகள் எழுத யாரும் முயற்சிக்கவில்லை. நானே அத்தகைய கதை எழுத ஆரம்பித்து இன்று ‘வானவில் வாழ்க்கை’ என்ற மியுசிக்கல் திரைப்படமாக மாறியுள்ளது. மியுசிக்கல் என்றால் பாடல்களை பாடுபவர்களே, நடனம் ஆடி, நடித்தும் உள்ளனர்.”

“ இப்படம் எனது கல்லூரி வாழ்வில் நடந்த நிகழ்வுகளை மையமாக எழுதியிருக்கிறேன். இப்படத்தில் வரும் ஜாக் கதாப்பாத்திரம்தான் ஜேம்ஸ் வசந்தன். படத்தில் 17 பாடல்கள் ஒவ்வொன்றும் நமது வாழ்வில் முக்கியமான உணர்வுக்கான ஒரு பாடலை முன்நிறுத்தியிருக்கும். இந்தப் படத்தில் ஒரு பெரிய இளைஞர் பட்டாளமே நடித்துள்ளது. அனைவரும் இசைக்கருவிகள் வாசிக்கத்தெறிந்த பாடத்தெறிந்த இசைக்கலைஞர்கள். நடிப்பிற்கு இவர்கள் புதியவர்களே என்றாலும் மிகவும் நன்றாக நடித்துள்ளனர். இப்படம் இளைஞர்களாலான இளைஞர்களுக்கான ஒரு திரைப்படம். படத்தை பார்த்து ரசிகர்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு லட்சம் போல் எங்களுக்கு” என்று சிரித்துக் கொண்டே கூறினார் ஜேம்ஸ் வசந்தன்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE