9.2 C
New York
Friday, March 29, 2024

Buy now

Gautham karthik’s ” Chella pillai”

Gautham Karthik’s Chellappillai

Celebrating 125 years of Netaji Subash Chandra Bose anniversary, the team of Gautham Karthik starrer Chellappillai has exhibited a beautiful gesture of honouring him through the motion teaser that was unveiled recently.

Director Arun Chandhiran says, “On the behalf of entire Chellappillai team, I would like to thank everyone for making the first look motion poster a grand success. Marking the 125th anniversary of Netaji Subash Chandra Bose, we wanted to pay our homage and henceforth, we decided to encapsulate this element into the motion teaser. Netaji Subash Chandra Bose is the Godfather of our Nation and I felt that the contemporary generation has to know about deeds of valour. I was deeply influenced by a famous dialogue of Veteran Sivaji Ganesan sir in the movie Devar Magan – “When Netaji invited youngsters to come and battle out for Independence, majority of them was Tamilians. In the motion teaser, we have incorporated the Memorial of Indian National Army that had the foundation stone laid by Netaji in 1942, which had Japanese, English, Singaporean language, and Tamil, which is a pride to everyone here. Such fascinating connections between Netaji and Tamilians made me bring in his values herein the movie, which is an out and out entertainer. We are currently finalizing the cast and crew and will be making an official announcement on it soon.”

Written and directed by Arun Chandhiran, the film has a musical score by Theeson and is produced by Firoz Hussain Sheriff of SST Productions.

கௌதம் கார்த்திக்கின் “செல்லப்பிள்ளை” படக்குழு வெளியிட்ட நேதாஜி மோஷன் டீஸர் !

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 125 ஆவது நினைவு தினத்தை போற்றும் விதமாக, கௌதம் கார்த்திக்கின் “செல்லப்பிள்ளை” படக்குழு ஒரு அழகான மோஷன் டீஸரை வெளியிட்டுள்ளது.

இது குறித்து இயக்குநர் அருண் சந்திரன் கூறியதாவது…
“செல்லப்பிள்ளை” படக்குழு சார்பாக எங்களின் மோஷன் போஸ்டரை மிகப்பெரும் வெற்றி பெற செய்தமைக்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நம் தேசத்தின் நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 125 வது நினைவு தினத்தை போற்றும் விதமாக, அவருக்கான அர்ப்பணிப்பாக, எங்கள் சார்பில் ஒரு அருமையான காணொளியை உருவாக்கினோம். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நம் தேசத்தின் தந்தை. அவரின் தியாகத்தையும், வீரத்தையும் இன்றைய இளைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும். தேவர் மகன் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நேதாஜி குறித்து பேசிய “ நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போருக்கு கூப்பிட்டப்போ, வீச்சறிவாளும் வேல்கம்புமா… கெளம்புன பயலுக நம்ம பயலுகதேன்” ( தமிழர்கள் ) எனும் வசனம் என்னை ஆழமாக பாதித்தது. இந்த மோஷன் டீஸரில் நேதாஜி 1942 ல் துவங்கிய இந்திய தேசிய ராணுவத்தின், ஜப்பான், ஆங்கிலம், சிங்கப்பூர் மற்றும் தமிழ் மொழியில் அமைந்துள்ள அடிக்கல்லை காட்டியுள்ளோம். இது நம் அனைவருக்கும் பெருமை. தமிழர்களுக்கும் நேதாஜிக்கும் உள்ள அசைக்க முடியாத உறவு, அவரது தீரத்தை இப்படத்திலும் இணைக்க வைத்துள்ளது. முழுக்க முழுக்க கொண்டாட்ட திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தின், நடிகர் மற்றும் தொழில் நுட்ப குழுவினரை இறுதி செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

அறிமுக இயக்குநர் அருண் சந்திரன் இயக்கும் இப்படத்தினை SST Productions சார்பில் தயாரிப்பாளர் ஃபைரோஸ் ஹுசேன் ஷெரீஃப் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் தீஷன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE