Home News

0 323

நள்ளிரவுச் சூரியன் எழும் நாட்டில், உலகம் முழுதும் வாழும் சிறந்த கலைஞர்களுக்கான உயர்ந்த அங்கீகாரம் – தமிழர் விருது!

உலகத் தமிழருக்கான தனித்துவமான ஒரு தமிழ் திரைப்பட விழாவாகவும், “தமிழர் விருது” வழங்கும் நிகழ்வு நோர்வே நாட்டில் மட்டுமே நிகழ்கிறது. இதில் முழுநீளத்திரைப்படம் , குறும்படங்கள், ஆவணப்படங்கள், காணொளிகள்(Music Video) அனிமேஷன் திரைப்படங்களுக்கான போட்டிகள் உலகளாவிய ரீதியில் நடைபெறுகின்றது.

நோர்வே தமிழ் திரைப்படவிழாவில் நடைபெற இருக்கின்ற “தமிழர் விருது” போட்டியில் கலந்து கொண்டு தமிழர் விருதுகளை வெல்ல வேண்டுமா ? இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே உள்ளன. எதிர்வரும் மார்ச் 15 அன்று விண்ணப்ப முடிவுத்திகதி ஆகும்! உங்கள் கலைப்படைப்புகளை அனுப்பி வைக்க இந்த இணையதளத்தினை பார்வையிடவும்.

NTFF 2016 General Rules: http://www.ntff.no/node/117
Submission Form: http://ntff.no/sites/default/files/ntff.pdf

இந்த ஆண்டு (01.05.2016) உலகநாயகன், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் கமல்ஹாசன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் – தமிழர் விருதினையும், தலைசிறந்த “கலைச்சிகரம்- தமிழர் ” விருதினை நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்க இருக்கிறோம்.

ஏனைய “தமிழர் விருதுகள்” பெறப்போகும் கலைஞர்கள் தொடர்பான செய்தி எதிர்வரும் மார்ச் 25 அன்று வெளியாகும்.

எழாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இத் திரைப்படவிழா நோர்வே அரசின் அங்கீகாரத்தினை பெற்றுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து தமிழ் மொழி அல்லாத அனைத்து மொழிகளுக்கான, சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனருக்கான – தமிழர் விருதும் வழங்கப்படவுள்ளது. நோர்வே நாட்டு மக்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு தமிழ் திரைப்படங்களை பார்க்க இருக்கிறார்கள்.

தமிழ் நாட்டில் இருந்து வெளியாகும் திரைப்படங்களோடு, தமிழ்நாட்டுக்கு அப்பால் உலகம் முழுவதும் வெளியாகும் தமிழ் திரைப்படங்களை நார்வே நாட்டில் அங்கீகரித்து, தமிழ் மொழியை, கலை கலாச்சாரத்தை, பண்பாட்டை அடையாளப்படுத்தும் நல்ல திரைப்படங்களை தேர்வுசெய்து, இங்கு மதிப்பளித்து வருகின்றோம்.

0 463

சமீபத்தில் போக்கிரி ராஜா திரைப்படம் திரைக்கு வந்து வெற்றிநடை போடுகிறது. வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் சிபிராஜ் மிதந்து கொண்டிருக்கிறார். அதுவும் குழந்தைகள் மற்றும் குடும்பம் குடும்பமாக கொண்டாடுவதில் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்.

இத்திரைப்படத்தில் Cooling Glass குணா என்ற கேரக்டரில் படம் முழுக்க கூலிங்கிளாஸ் அணிந்து கொண்டு கேரளா வேஷ்டியும் வித்தியாசமான கெட்டப்பில் கலக்கியிருக்கிறார்.

ரெஸ்டாரண்ட்கள், பார்லர்கள்,காம்ப்ளக்ஸ்கள் என்று எங்கு சென்றாலும் சிபிராஜ்ஜை கூலிங்கிளாஸ் குணா என்றே அழைக்கிறார்கள். ரசிகர்கள் மற்றும் மக்களின் பட்டப்பெயரால் மகிழ்ச்சி அடைந்த சிபிராஜ் தொடர்ந்து எங்கு சென்றாலும் படத்தின் வித்தியாசமான கெட்டப்போடு சுற்றி வருகிறார். நாய்கள் ஜாக்கிரதை யைத் தொடர்ந்து போக்கிரி ராஜா படமும் வெற்றி பெற்றுள்ளதால் இரட்டிப்பு சந்தோசத்துடன் வலம் வருகிறார்.

கூலிங்கிளாஸ் குணா கேரக்டர் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதால் தொடர்ந்து இதே போன்று வித்தியாசமான கேரக்டர் மற்றும் கெட்டப்பில் நடிக்க சந்தர்ப்பம் உள்ள கதைகளில் மட்டுமே நடிக்க முடிவெடுத்திருக்கிறார் சிபிராஜ்.

0 634

வருங்கால சினிமா இனிமேல் குறும்பட இயக்குநர்கள் கையில்தான் இருக்கும் என்று ஒரு விழாவில் இயக்குநர் ஏ. சற்குணம் பேசினார். இதுபற்றிய விவரம்
வருமாறு.

இன்று சென்னை ஆர்கேவி ஸ்டுடியோவில் ‘சப்வே’, ‘நான்படிச்ச ஸ்கூல் அப்படி’ என இரு குறும்படங்களின் திரையீடு நடந்தது.ஜெனிசிஸ்
ஸ்டூடியோஸ் அனுசரணையுடன் இவ்விழா நடைபெற்றது.

குற்றவுணர்ச்சி உள்ள குற்றவாளிகள் தான் சிக்கிக் கொள்கிறார்கள். குற்றவுணர்ச்சி இல்லாதவர்கள் சுதந்திரமாகத் திரிகிறார்கள் என்று கூறுகிற
குறும்படம் ‘சப்வே’.

ஆங்கிலம் தெரியாததை இன்று தமிழ் ளைஞர்கள் எவ்வளவு தூரம் தாழ்வு
மனப்பான்மையாக மாற்றிக் கொள்கிறார்கள் என்று கூறுகிற குறும்படம்
‘நான்படிச்ச ஸ்கூல் அப்படி’.

இப்படங்களின் திரையீட்டுக்குப் பின்பு இயக்குநர் ஏ. சற்குணம் பேசினார்
.அவர் பேசும் போது–

“இந்த இரண்டு குறும்படங்களையும் பார்த்தேன். இரண்டு படங்களுமே இரண்டு வேறு வகையில்இருந்தன. நன்றாக இருந்தன. தரமாகவும் இருந்தன. இதில் பணியாற்றியவர்கள் என் குழுவினர் போல இருப்பவர்கள். என் படங்களில் பணியாற்றியவர்கள்.

இன்று குறும்படங்கள் கவனிக்கப்படுகின்றன.

இன்றைய தமிழ்ச்சினிமா குறும்பட இயக்குநர்கள் கையில் போய்க்கொண்டு
இருக்கிறது.குறும்பட இயக்குநர்கள் தான் தமிழ்ச் சினிமாவில் இப்போது தரமான படங்களின் இயக்குநர்களாக, முக்கியமான படங்களின் இயக்குநர்களாக அறியப்படுகிறார்கள்.

முன்பெல்லாம் ஊரிலிருந்து இங்கு வந்துதான் சினிமாவைக் கற்றுக்
கொள்வார்கள் . இப்போது காலம் மாறிவிட்டது.இப்போதெல்லாம் ஊரில் இருக்கும் போதே, இங்கே வரும் போதே ஒரு குறும்படம் எடுத்துவிட்டு நேரே
தயாரிப்பாளரிடம் ,நானும் ஒரு சினிமா எடுத்திருக்கிறேன் என்று
காட்டிவிட்டு வாய்ப்பு கேட்கிறார்கள்.வருங்கால தமிழ்ச் சினிமா இனி
குறும்பட இயக்குநர்கள் கையில்தான் இருக்கும் என்பதை நான் நம்பிக்கையுடன் கூறுவேன். ” என்று கூறி படக்குழுவினரை வாழ்த்தியதுடன் தொழில் நுட்பக் கலைஞர்களின் பெற்றோரையும் மேடையில் ஏற்றி கௌரவப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் ‘சப்வே’ குறும் படத்தின் இயக்குநர் வினோத்ராஜ்,
‘நான்படிச்ச ஸ்கூல் அப்படி’ குறும்படத்தை இயக்கிய தினேஷ்குமார்,
நடிகர்கள் சஷி, சேகர்,தினேஷ்வரன், நடிகை அனுசுயா ஒளிப்பதிவாளர் விக்னேஷ் குமுளை, இசையமைப்பாளர் சாந்தன் அன்பழகன், விநியோகஸ்தர் ஜெனிசிஸ் ஸ்டூடியோஸ் – ஜெனீஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

0 291

Essensuals, a diffusion line of Toni & Guy launched its new salon @ Eldams Road, Teynampet with an in-house Café Jerry’s Den. Actor T.R. Silambarasan inaugurated the salon and the café located in heart of the city on 6th March 2016.

Toni and Guy is one of the largest within the hairstyling industry in the world and they are growing very aggressively all over India. The services include hairstyling, beauty service, spa and bridal. Among numerous branches in the city this new salon is one of stand-alone as it also offers a dining facility at Jerry’s Den under the same roof.

This Salon has a fully glassed 34 ft frontage with ample parking. In addition to hairstyling, beauty, spa and bridal services this salon also offers world famous NUBAR nail art and extensions.

Jerry’s Den is a compact high end Café located inside the salon. This Café comes out with some unique vegetarian dishes infused with international flavours and the first of its kind in Chennai. Jerry’s Den offers Sandwiches, Italian Bread, Pasta, Desserts, Green Tea and Juices. Customers sitting for long hours in the salon can enjoy the tasteful and amazing food and drinks served by the Café.

Speaking on the launch, Ms. Neelima Sriram, Franchise owner, Toni & Guy said, “For the salon we decided to go unconventional, and go for classic design, which actually evolved as we started the interiors. This includes raw brick wall finish in the styling area with six cutting stations, no false ceilings instead we painted it black and decorated with Egyptian Asfour Crystal Chandelier”.

Ms. Neelima Sriram and Ms. Kala Pillai, Founders, Jerry’s Den stated that “Our cafe boasts about freshly made food every day. Everything at Jerry’s den is made from the scratch using many ORGANIC ingredients. The cafe specialty is, it will welcome the customer with the aroma of freshly in-house baked bread and offers the exclusive in-trend collection of only Green tea on the menu list to begin with. As per David Wynne ““We eat with our eyes first,” This brings the art of food plating @Jerry’s den. We welcome our customers to enjoy the food with the right balance of taste and aesthetics. We hope this new concept of Salon with an in-house Café will fascinate Chennaites”.

.
Now, rush to the new Salon located at New No. 107, Old No 47, Eldams Road, Teynampet, Chennai to avail the special inaugural offers:

Toni & Guy Essensuals launched its new salon @ Eldams Road, Teynampet with an in-house Café Jerry’s Den.

Essensuals, a diffusion line of Toni & Guy launched its new salon @ Eldams Road, Teynampet with an in-house Café Jerry’s Den. Actor T.R. Silambarasan inaugurated the salon and the café located in heart of the city on 6th March 2016. Among numerous branches in the city this new salon is one of stand-alone as it also offers a dining facility at Jerry’s Den under the same roof.

0 545

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் ராம்குமார் மற்றும் அபிராமி துஷ்யந்த்தின் இஷான் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க, இளைய திலகம் பிரபு, காளிதாஸ் ஜெயராம் இணைந்து நடிக்கும் மீன் குழம்பும் மண் பானையும் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் உலக நாயகன் டாக்டர். கமல்ஹாசன் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இது நடிகர் திலகத்தின் மீதும், அவர்கள் குடும்பத்தின் மீதும் கொண்டுள்ள அன்பின் காரணமாகவே சாத்தியமானதாக மலேசியாவில் படப்பிடிப்பை முடித்து திரும்பி இருக்கும் இயக்குனர் மற்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

மேலும் இத்திரைப்படத்தில் பூஜா குமார், ஆஸ்னா சவேரி, ஊர்வசி, .S.பாஸ்கர், சந்தானபாரதி, R.S.சிவாஜி மற்றும் பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இமான் இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார்.

அமுதேஷ்வர் இயக்கும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை J.லக்‌ஷ்மண் குமாரும், படத்தொகுப்பை ரிச்சர்ட் கெவினும் கலையை M.பிரபாகரனும், தயாரிப்பு மேற்பார்வையை S.ஆனந்த் வாண்டையாரும், கள தயாரிப்பை RS. சிவாஜியும் கவனிக்கிறார்கள்.

0 742

‘கலைச் செல்வன்’ விஜய் ஆண்டனி நடிக்கும் பிச்சைக்காரன் படத்தின் மீதான ரசிகர்களின் ஆவல், நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து கொண்டே போவது , நிஜமாகவே ஒரு ஆவேசமான கடல் அலையைப் பார்ப்பது மாதிரியான உணர்வைத் தருகிறது.

படத்தின் அட்டகாசமான டீசர் மற்றும் கொண்டாட வைக்கும் டிரைலர் , குறும்பு கொப்பளிக்கும் புரோமோ வீடியோ இவற்றை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை நொடிக்கு நொடி எகிறிக் கொண்டே போகிறது என்றால்,

அதற்கேற்ப படம் வெளியாகும் திரையரங்குகளின் எண்ணிக்கையும் மணிக்கு மணி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இதுவரை தமிழ் நாட்டில் மட்டும் 260 திரையரங்குகள் போடப்பட்டு உள்ளது . இது அதிகரித்துக் கொண்டு இருப்பது ஒருபக்கம் இருக்க, மற்ற மாநிலங்களும் உலகின் மற்ற பகுதிகளிலும் மேலும் மேலும் ஒப்பந்தமாகும் தியேட்டர்களின் எண்ணிக்கை இதுவரை பாராத ஒன்றாக இருக்கிறது இது தமிழ் சினிமா உலகின் ஒட்டு மொத்த கவனத்தையும் கவர்ந்து உள்ளது .

படத்தை வெளியிடும் கே ஆர் பிலிம்ஸ் சரவணன் இது பற்றிக் கூறும் போது ” பிச்சைக்காரன் படத்தை திரையிடும் தியேட்டர்களின் எண்ணிக்கை பெருகி வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது . அளவில்லாத ஆதரவு எங்களுக்கு கிடைத்துக் கொண்டு இருக்கிறது. படத்தை திரையிடக் கேட்கும் தியேட்டர் அதிபர்களின் அழைப்புகளால் எங்கள் போன்கள் தொடர்ந்து பிசியாகவே இருக்கிறது.

விஜய் ஆண்டனி சார் நடித்து வெளியான அந்த புரமோஷனல் டீசர் வீடியோ , ரசிகர்களின் மனதில் கும்மென்று பற்றிக் கொள்ள, ‘இது பார்த்தே ஆகவேண்டிய படம்’ என்ற முடிவுக்கு ரசிகர்கள் ஏக மனதாக வந்து இருப்பது புரிகிறது .

படத்தை பார்த்த அனைவரும் விஜய் ஆண்டனியின் மிக சிறப்பான நடிப்பையும் , ஒரு கமர்ஷியல் டைரக்டராக இயக்குனர் சசி பிரம்மாண்டமாக விஸ்வரூபம் எடுத்து இருப்பதையும் மனதார வாயார மாய்ந்து மாய்ந்து பாராட்டித் தள்ளுகிறார்கள்.

இதே போல அனைத்து மீடியாக்களும் கூட தங்களது சக்தி வாய்ந்த ஆதரவை எங்களுக்கு முழுமையாகக் கொடுத்து, படத்தின் மாபெரும் வெற்றிக்கு உதவுவார்கள் என்று மனப்பூர்வமாக நம்புகிறோம் ” என்கிறார் உற்சாகத்தில் உச்சியில் நின்றபடி !

0 456

கவிஞர் வைரமுத்து பிரபல கதாநாயகர்களின் படங்களுக்குப் பரபரப்பாகப் பாடல்கள் எழுதி வருகிறார். கடந்த ஆண்டு இலக்கியப் படைப்புகளுக்கு அதிக நேரம் ஒதுக்கிய கவிஞர் வைரமுத்து இந்த ஆண்டு அதிகமான நேரத்தைத் திரைப் பாடல்களுக்குச் செலவிடுகிறார்.
புகழ் மிக்க விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க பரதன் இயக்க விஜய் நடிக்கும் அவரது அறுபதாவது படத்திற்கு எல்லாப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதுகிறார். இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.
மணிரத்னம் இயக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க கார்த்தி – சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தில் ஏழு பாடல்கள் எழுதுகிறார்.
லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் பிரமாண்டமான படத்தில் எட்டுப் பாடல்கள் எழுதுகிறார்.
விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா – சமந்தா நடிக்கும் 24 படத்திற்கும் கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதியிருக்கிறார். இசை ஏ.ஆர்.ரகுமான்.
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி – தமன்னா நடிக்கும் தர்மதுரை படத்தில் எல்லாப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
விஷால் – ஸ்ரீதிவ்யா நடிக்க முத்தையா இயக்கும் மருது படத்தில் இமான் இசையில் கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதி வருகிறார்.
ஜி.என்.ஆர் குமரவேல் இயக்கத்தில் விக்ரம்பிரபு – ரன்யா ராவ் நடிக்க, இமான் இசையமைக்கும் வாகா படத்தில் இதயத்தை உருக்கும் காதல் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
சுசீந்திரன் இயக்கத்தில் உதயநிதி – மஞ்சிமா மோகன் ஜோடி சேரும் புதிய படத்தின் எல்லாப் பாடல்களையும் இமான் இசையில் எழுதுகிறார்.
இளைய தலைமுறையின் வாழ்வியல் மாறுதலுக்கேற்பப் புதிய மொழிநடையை உருவாக்கி வருவதாகக் கவிஞர் வைரமுத்து கூறினார்.
எதிர்காலத்தில் பாடல்களே இல்லாத படங்கள் வருமா என்ற கேள்விக்கு “பாடல்கள் இல்லாத படங்களைத் தயாரிக்க முடியும்; பாடல்கள் இல்லாத வாழ்க்கையைத் தயாரிக்க முடியுமா?” என்றார் கவிஞர் வைரமுத்து.

0 704

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூலாங்குறிச்சி கிராமத்தில் நடந்த ஒரு சமீபத்திய நிகழ்வு அங்கு இருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பசுமை பொங்கும்,அமைதியான இந்த ஊரில் சமீபத்தில் ஒரு நாள் நடு ரோட்டில் ஒரு அழகான இளம் பெண்ணும், இளைஞனும் மோதிக் கொண்டார்கள். முதலில் வாய் சண்டையாக இருந்த இந்த சண்டை போக போக உக்கிரமாகி , அந்த இடத்தையே ஒரு போர் களமாக்கி விட்டது. எதோ சின்ன பசங்க சண்ட போட்டுக்குறாங்க என்று அலட்சியமாக இருந்த ஊர் மக்கள், சண்டையின் வீரியத்தை பார்த்து காவல் துறையிடம் புகார் தெரிவிக்கலாம் என்றுக் கூட யோசிக்க துவங்கினர்.அந்த நேரத்தில் ‘Cut’ என்று வந்த வார்த்தையை கேட்டபிறகு தான், படப்பிடிப்பு என்று அறிந்து அவர்கள் ஆசுவாசப் படுத்திக் கொண்டனர். நல்லம்மை ராமநாதன் தயாரிப்பில், புதிய இயக்குனர் ஆர் கே இயக்கும் ‘உன்னோடு கா’ படத்தில் தான் இந்த சம்பவம் அடைந்தது. கதா நாயகனாக நெடுஞ்சாலை, மற்றும் ‘மாயா’ ஆகியப் படங்களில் கதா நாயகனாக நடித்தஆரி நடிக்க அவருக்கு இணையாக நடிக்கிறார் ‘டார்லிங்’ 2 கதாநாயகி மாயா.

‘ இந்த அருமையான ஊரில் படப்பிடிப்பு நடத்த வாய்ப்பு வழங்கிய அபிராமி ராமநாதன் சாருக்கு பெரிய நன்றி. பூலாங்குறிச்சி என்கிற இந்த அழகு கொஞ்சும் ஊர் அவருடைய சொந்த ஊர் ஆகும். இந்த ஊருக்கு அவர் பல நலத் திட்டங்களை புரிந்து இருக்கிறார். இந்த ஊரையே அவர் தத்து எடுத்துக் கொண்டு இருக்கிறார் என்பதை அவருக்கு ஊரார் கொடுக்கும் மரியாதையில் தெரிகிறது.குடும்பத்தோடு படம் பார்க்க வருவோர் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் ஒரு அருமையான படமாக உருவாகிக் கொண்டு இருக்கிறது ‘உன்னோடு கா’. பிரபு சாரும் ஊர்வசி அம்மாவும் மிக பிரமாதமாக நடித்து இருக்கிறார்கள்.அவர்களது நடிப்பு ரசிகர்களின் விலா நோக சிரிக்க வைக்கும் என்பது நிச்சயம். எங்கள் படப்பிடிப்புக் குழுவினர் அனைவருக்கும் பிரபு சார் தன்னுடைய செலவில் மிகப் பெரிய விருந்து வைத்தார்.படப்பிடிப்பு நடந்த நாட்கள் அத்தனையும் இனிமையான நாட்கள். ‘உன்னோடு கா’ எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் வகையில் இனிமையான படமாக இருக்கும் என்பது நிச்சயம்’ என்றார் ஆரி.

0 632

ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள போக்கிரி ராஜா படம் மார்ச் 4ம் தேதி ரிலீசாவதில் பிரச்சனை இருந்தது அனைவருக்கும் தெரியும். தற்போது சினிமா இருக்கும் நிலையில் ஒரு படத்தை எடுத்து அதை ரிலீஸ் செய்வது மிக கடினமாக உள்ளது. கலையாக இருந்த சினிமாவை வியாபாரமாக்கி எதை தொட்டாலும் பிரச்சனையாக்கி அதில் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள். பி.டி.செல்வகுமார் எனக்கு நல்ல நண்பர் எனக்கு ஒரு பிரச்சனை வரும்போது எனக்கு உறுதுணையாக இருந்து பிரச்சனைகளை தீர்த்து வைத்தார். புலி என்று தலைப்பை வைத்து தமிழ் மீது அவருக்குள்ள பற்றை நான் மிகவும் ரசித்தேன். தயாரிப்பாளர் சங்கத்தில் நேற்று முழுவதும் இருந்து போக்கிரி ராஜா பிரச்சனையை பேசி தீர்த்துவிட்டோம். தயாரிப்பாளர் சங்கத்திலும் படத்தின் ரிலீசுக்காக தலைவர் தாணு, சிவசக்தி பாண்டியன், திருப்பூர் சுப்ரமணியன், டி.சிவா, அருள்பதி மற்றும் பலர் இணைந்து பிரச்சனைகளை சுமூகமாக பேசி தீர்த்து வைத்துள்ளார்கள். போக்கிரி ராஜா திட்டமிட்டப்படி வருகிற மார்ச் 4ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகும் என தெரிவித்துக் கொள்கிறோம்.