Home News

0 65

சவரக்கத்தி விமர்சனம்
‘கத்தி’யை கையில் எடுத்த நாயகர்கள், வில்லன்கள் ஆகியோரை மையமாக வைத்து எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், அந்தப் படங்களில் சொல்லாமல் விட்ட ஒரு உன்னதமான கருத்தை இந்த ‘சவரக்கத்தி’ படத்தில் சொல்லி நம்மை உருகவும் வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜி.ஆர். ஆதித்யா.

S4S Rating – 4/5
படத்தின் நாயகனான ராம் கையில் நம் உடலைத் திருத்தும் சவரக்கத்தி, வில்லனான மிஷ்கின் கையில் உடலையும், உயிரையும் குலைக்கும் கத்தி. இந்த ‘கத்தி’ எதற்குப் பயன்பட வேண்டும் என்று ஆணித்தரமான முடிவுடன் படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர்.

முடி திருத்தும் பார்பர் ஆக இருக்கும் ராம், தன் மச்சானுக்குத் திருமணம் நடத்தி வைப்பதற்காக, மனைவி, குழந்தைகளுடன் பைக்கில் செல்கிறார். செல்லும் வழியில் ஒரு சிக்னலில், வேகமாக வந்து நின்ற ஜீப் ஒன்றால், ராம் தடுமாறி கீழே விழுகிறார். கோபமாக எழும் ராம், ஜீப்பில் உள்ள ரவுடியான மிஷ்கினை அடித்துவிட்டு சென்று விடுகிறார். யாரோ ஒரு சாதாரண ஆளிடம் அடி வாங்கியதைத் தாங்க முடியாத மிஷ்கின், ராமைத் தேடிக் கண்டுபிடித்து கொலை செய்யத் துடிக்கிறார். மிஷ்கின் தேடுவதை அறிந்த ராம் அவரிடமிருந்து தப்பித்துக் கொண்டே இருக்கிறார். மிஷ்கினும் விடாமல் துரத்துகிறார். இந்த துரத்தல் போட்டியில் யார் வென்றார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

மிஷ்கின், ராம் போன்ற சீரியசான படங்களைக் கொடுக்கும் இயக்குனர்கள் நடித்திருக்கும் படம், இந்தப் படமும் சீரியசாகத்தான் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. படத்தின் ஆரம்பத்தில் இருந்து கிளைமாக்ஸ் வரையிலும் நகைச்சுவையோடு கலந்த திரைக்கதையும், வசனமும் அமைந்து படம் அவ்வளவு கலகலப்பாக நகர்கிறது. வழக்கமான நகைச்சுவைப் படங்களில் இருந்தும் இது ஒரு மாறுபட்ட நகைச்சுவைப் படமாகவும் அமைந்து ரசிக்க வைக்கும்.

பிச்சைமூர்த்தியாக நடிப்பில் ‘பிச்சி’ எடுத்திருக்கிறார் ராம். வாயைத் திறந்தாலே பொய் பேசுபவர் என்ற கதாபாத்திரத்தில், அவரைப் பார்க்கும் போது அப்படியே பொருந்திப் போயிருக்கிறார். நகைச்சுவை நடிப்பும் அவருக்கு இயல்பாக வருகிறது. மிஷ்கின் துரத்தி வரும் போது, அவர் யார் எப்படிப்பட்டவர் எனத் தெரியாமல் பார்க்கில் உடற்பயிற்சி செய்து கொண்டு காத்திருக்கிறார். மிஷ்கினின் சுயரூபம் தெரிந்ததும், அவர் எடுக்கும் ஓட்டம் கடைசி வரை நிற்கவில்லை. கிளைமாக்சில் மகன் கண் முன் தானும் ஒரு சண்டைக்காரன்தான், யாரையும் அடிப்பேன் என அவர் எடுக்கும் விஸ்வரூபம் சிம்ப்ளி சூப்பர்ப். இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் வேறு எந்த ஹீரோவையும் நடிக்க வைத்திருந்தால் கூட இப்படி நடித்திருக்க மாட்டார்கள். ராம் தேர்வு மிகச் சரியான தேர்வு.

அதே போல வில்லன் மங்காவாக மிஷ்கின், மற்றுமொரு சிறப்பான தேர்வு. வழக்கமான ரவுடியாகவும் இருக்கக் கூடாது, அதில் கொஞ்சம் காமெடித்தனமும் இருக்க வேண்டும். பிரகாஷ்ராஜ், நாசர், சம்பத், நரேன் என வழக்கமான நடிகர்களைத் தேர்வு செய்யாமல் இருந்ததற்கே இயக்குனர் ஆதித்யாவுக்கு தனி பாராட்டு. உடல் மொழி, உருட்டிக் கொண்டிருக்கும் கண்கள், கோபத்தில் அடிக்கடி கத்துவது என ‘மங்கா’ கதாபாத்திரத்திற்கு தனி உருவம் கொடுத்திருக்கிறார் மிஷ்கின். ஆரம்பக் காட்சியில் ஒரு ஹோட்டலில் ஒரு பெண்ணை முறைத்துக் கொண்டேயிருக்கும் காட்சியில் இருந்து, கிளைமாக்சில் 6 மணி ஆகிவிட்டது போகலாம் என டக்கென எழுந்து கிளம்புவது வரை ஒவ்வொரு காட்சியிலும் மங்காத நடிப்பு மிஷ்கினிடம்.

பூர்ணா நடித்த சுபத்ரா கதாபாத்திரத்தில் சில நடிகைகள் நடிக்க மறுத்துவிட்டார்களாம். அந்த நடிகைகளுக்கு நன்றி. இல்லையென்றால் பூர்ணா நமக்குள் உணர வைத்த சுபத்ரா கதாபாத்திரத்தை அவர்கள் உணர வைக்கத் தவறியிருப்பார்கள். இந்தக் கதாபாத்திரத்தைப் பற்றிக் கேட்டதுமே நடிக்க சம்மதித்த பூர்ணாவின் நடிப்பார்வம், படத்தில் ஒரு காட்சியிலும் குறையவில்லை. எவ்வளவு படங்களில் நடிக்கிறோம், எத்தனை கோடிகளை சம்பாதிக்கிறோம் என்று நினைக்காமல் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கும் பூர்ணாவின் நடிப்பார்வத்தை இன்னும் பல இயக்குனர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மற்ற கதாபாத்திரங்களில் சில காட்சிகளில் வரும் நடிகர்கள் கூட அவர்களது முத்திரையைப் பதித்துவிட்டுப் போகிறார்கள். அவர்களும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என அவர்களுக்கும் சிறப்பான காட்சிகளை அமைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதிலும், மிஷ்கினிடம் இருக்கும் அடியாட்களில் கீதா ஆனந்த் மற்றவர்களைக் காட்டிலும் தனித்துத் தெரிகிறார்.

பூர்ணாவின் மாற்றுத்திறனாளி தம்பி, அவருடைய காதலி, அந்தக் காதலியின் அப்பா அம்மா ஆகியோரை வைத்தும் ஒரு காதல் டிராக், படத்துடன் ஒன்றிணைந்து வந்து படம் முடிவதற்கும் காரணமாய் அமைகிறது. அவர்கள் அனைவரும் சில காட்சிகளில் வந்தாலும் மனதில் அழுத்தமாய் பதிகிறார்கள். மாற்றுத் திறனாளியைத் காதலியின் அம்மா சங்கீதா பாலன் கை கொடுத்து தூக்கும் அந்த ஒரு காட்சியிலேயே வசனமேயில்லாமல் சங்கீதாவின் சம்மதத்தை உணர வைத்துவிடுகிறார் இயக்குனர். இப்படி பல காட்சிகளில் இயக்குனரின் தனி முத்திரை வெளிப்படுகிறது.

அரோல் கொரேலியின் பின்னணி இசை கதையின் தன்மையில் இருந்து சிறிதும் விலகாமல் சேர்ந்தே பயணிக்கிறது. கார்த்திக்கின் ஒளிப்பதிவு கதையின் யதார்த்தத்தை காட்சி வடிவில் நமக்கு இன்னும் அழுத்தமாய் ரசிக்க வைக்கிறது. ஜுலியன் எந்த இடத்திலும் தொய்வில்லாமல் படத் தொகுப்பைச் செய்திருக்கிறார்.

ஒரு நாளுக்குள் நடந்து முடியும் கதை. நாயகனும் ஓடுகிறார், நாயகியும் ஓடுகிறார், வில்லனும் ஓடுகிறார், கூடவே நாமும் ஓடுகிறோம். கதைக்குள் சேர்ந்து நாமும் பயணிக்கும் உணர்வுதான் ஏற்படுகிறது.

0 75

Raju Murugan – Jiiva film titled Gypsy

National Award winning director Raju Murugan, who has delivered classy films like Cuckoo and Joker, is to next work on a film with actor Jiiva that has been titled Gypsy.
Raju Murugan, who was writing dialogues for Varma, which is being directed by Bala, is believed to have narrated the story of Gypsy to Jiiva who liked it immensely as it was both different and unique.
Gypsy is to be produced by S Ambedkumar on behalf of Olympia Movies, which has produced hit films like Desingu Raja and Manam Kothi Paravai.
Raju Murugan, who has until now made films that have focussed on social lifestyles and social structures, will look to make Gypsy as a commercial entertainer with social consciousness. The director and his unit will be shooting at various places across the country for this film.

ராஜூமுருகன் – ஜீவா – இணையும் ஜிப்ஸி

குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜூமுருகனுடன் நடிகர் ஜீவா இணையும் படத்திற்கு ஜிப்ஸி என பெயரிடப்பட்டுள்ளது.
தற்போது ராஜூமுருகன் பாலாவின் வர்மா படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். இதனையடுத்து இயக்குனர் ராஜூமுருகன் ஜீவாவிடம் ஜிப்சி கதையை கூறியுள்ளார். வித்யாசமான கதை என்பதால் ஜீவாவும் உடனே கமிட் ஆகியுள்ளார்.
இந்த படத்தை தேசிங்கு ராஜா, மனம்கொத்திப் பறவை ஆகிய படங்களை தயாரித்த ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் சார்பில் S.அம்பேத்குமார் தயாரிக்கவுள்ளார்.
இயக்குனர் ராஜூமுருகன் இதுவரை குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்கள் மூலம் சமூக வாழ்வியலை பிரதிபலிக்கும் படங்களை கொடுத்துள்ளார். தற்போது ஜிப்ஸி படம் மூலம் ஜீவாவுடன் இணைந்து கமர்ஷியலான சமூக வாழ்வியல் படத்தை கொடுக்கவுள்ளார். இந்த படத்தை இந்தியா முழுவதிலும் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்த இயக்குனர் ராஜூமுருகன் திட்டமிட்டுள்ளார்.

0 77

கருப்பன் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி நடித்துள்ள அடுத்த படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து டீசர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்கள் அனைவரையும் வெகுவாக பூர்த்தி செய்தது. படம் எந்த அளவிற்கு பூர்த்தி செய்தது என்பதை பார்த்து விடலாம்.

ஆந்திர மாநிலம் எமசிங்கபுரம் என்ற ஒரு மலைகிராமம் தான் படத்தின் கதைக்களம். இங்கு வாழும் அனைவரும் நேர்மையாகவும், யாரையும் துன்புறுத்தாமலும் திருடுவது மட்டும் தான் இவர்களது தொழில். எமனையே முதற்கடவுளாக
நினைத்து வழிபடுகின்றனர். இந்த கூட்டத்திற்கு விஜய் சேதுபதி தான் இளவரசர்.

தனது நண்பர்கள் இருவருடன் திருடுவதற்காக சென்னை வருகிறார் விஜய் சேதுபதி. அங்கு நாயகி நிகாரிகாவை சந்திக்கிறார். அவரை கடத்திச் சென்று விட வேண்டும் என்று சில திட்டங்கள் போட்டு தோல்வியடைந்தாலும், இறுதியாக அவரை கடத்தி தனது கிராமத்திற்கு சென்று விடுகிறார் விஜய் சேதுபதி.

நிகாரிகாவை 15 நாட்கள் மட்டுமே சந்தித்து பேசி, பழகிய கெளதம் கார்த்திக், அவரை காப்பாற்ற அந்த எமசிங்கபுரத்திற்குள் நுழைகிறார். எதற்காக விஜய் சேதுபதி நிகாரிகாவை கடத்திச் செல்கிறார்..?? காப்பாற்ற சென்ற கெளதம் கார்த்திக்கின் நிலை என்ன..?? என்பதே படத்தின் மீதிக் கதை.

விஜய் சேதுபதி வழக்கம் போல் தனது கதாபாத்திரத்திற்கு தேவையானதை செம்மையாகவே பூர்த்தி செய்திருக்கிறார். அதே யதார்த்த நடிப்பு, டைமிங் என தனக்கேற்ற வேலையை நிறைவாகவே செய்து முடித்திருக்கிறார்.

கெளதம் கார்த்திக் சினிமா கேரியரில் நிச்சயம் இப்படம் அவருக்கு ஒரு மைல்கல் தான். துருதுருவென தனது கேரக்டருக்கு தேவையானதை கொடுத்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் ஏற்றிருந்தாலும் ஓவர் டோஸ் ஆகியிருக்கும்.

நாயகி நிஹாரிகா தமிழ் சினிமாவில் ஒரு புதுவரவு. இன்னும் சில தமிழ் படங்கள் இவருக்காக காத்திருக்கின்றன. களையான முகம், நகைச்சுவை கலந்த நடிப்பை கொடுத்திருக்கிறார். காயத்ரி வழக்கம் போல தன் கண்களாலும், அசையாமல் பேசும் உதடுகளாலும் கவர்கிறார்.

காமெடி என்ற பெயரில் ரமேஷ் திலக், ராஜ்குமார், டேனி என மூவரும் கொஞ்சம் பொறுமையை சோதித்தாலும் காப்பாற்ற வந்தவனாக விஜய் சேதுபதி ஆங்காங்கே சில கவுண்டர் அடித்து அவர்களிடம் இருந்து காப்பாற்றி விடுகிறார். வலு இல்லாத கதைக்களம் படத்திற்கு சற்று சரிவை கொடுத்திருக்கிறது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் ஒருமுறை கேட்கும் ரகம், பின்னனி இசையில் ஏற்றம் இறக்கத்தை காண்பித்து மிரட்டியிருக்கிறார்.

ஸ்ரீ சரவணின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் அற்புதம்

0 69

நாயகன் விஜய் யேசுதாஸ் எந்த வேலைக்கும் போகாமல், நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். இவர் ஊருக்கும், பக்கத்து ஊருக்கும் ஜாதி பிரச்சனை இருந்தாலும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து பழகி வருகிறார்கள். அதே நேரத்தில் விஜய் யேசுதாஸ் அவரது உறவுக்கார பெண்ணான நாயகி அம்ரிதாவை காதலித்து வருகிறார். அதேநேரத்தில் போலீஸ் வேலை மீது விஜய் யேசுதாஸுக்கு ஆர்வம் ஏற்படுகிறது. போலீஸானால் மரியாதை கிடைக்கும், சாப்பாடு, சரக்கு என ஜாலியாக இருக்கலாம் என்ற ஆசையில் போலீசாக முயற்சி செய்கிறார்.

அதற்காக தனது உறவினரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான பாரதிராஜாவிடம் உதவி கேட்கிறார். அவரும் ஒரு லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு விஜய்க்கு உதவி செய்து, தேர்வில் தேர்ச்சி பெற வைக்கிறார். பிறகு பயிற்சியில் மிகவும் கஷ்டப்பட்டு ஒருவழியாக போலீசாகி விடுகிறார்.

ஆனால், பயிற்சி முடித்து ஊருக்கு திரும்பும் போது, இரு ஊர்களுக்கும் இடையேயான ஜாதி பிரச்சனை முற்றி கலவரமாக மாறி விடுகிறது. போலீசாக இருந்து இரண்டு ஊர் பிரச்சனைகளை தீர்க்க போராடும் விஜய் யேசுதாஸ், கடைசியில் ஜாதி பிரச்சினையை தீர்த்து வைத்தாரா? விஜய் யேசுதாஸ் – அம்ரிதா இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஏற்கனவே மாரி படத்தில் போலீஸ் அதிகாரியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய் யேசுதாஸ் இந்த படத்தில் நாயகனாக சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு சாதாரண இளைஞனாக படித்துவிட்டு ஊர் சுற்றுவது, குடித்து விட்டு சேட்டை செய்வது என முதல் பாதியில் கலகலப்பாகவும், இரண்டாம் பாதியில் பொறுப்புள்ள போலீஸ் அதிகாரியாகவும் நிமிர்ந்திருக்கிறார். துணிச்சலான பெண்ணாக அம்ரிதா மனதில் நிற்கிறார். காதல் காட்சியில் ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார்.

எக்ஸ் மிலிட்ரி மேனாக வரும் பாரதிராஜா, அனுபவ நடிப்பால் கவர்கிறார். அவரது கிண்டல் கலந்த பேச்சு ரசிக்கும்படியாக இருக்கிறது. செல்பி எடுக்கும் காட்சி, வசனம் பேசும் காட்சி என ஒவ்வொரு காட்சியும் ரசிக்க வைக்கிறது. சிங்கம் புலி, மனோஜ் குமார் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
இரண்டு ஊருக்குள் நடக்கும் ஜாதி பிரச்சனையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் தனா. இதுபோன்ற கதைகள் பல வெளியானாலும், இதில் வித்தியாசம் காண்பித்திருக்கிறார் இயக்குனர். திரைக்கதை வலுவில்லாமல் இருந்தாலும், ஒரு சில காட்சிகள் சுவாரஸ்யமாக இருப்பதால் படத்தை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

படத்திற்கு பெரிய பலம் கார்த்திக் ராஜாவின் இசை. இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. அதுபோல் பின்னணி இசையையும் கதையின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. ராஜா வேல் மோகனின் ஒளிப்பதிவும் ரசிக்கும்படி இருக்கிறது.

0 70

மதுரைக்கு அருகே உள்ள கிராமம் ஒன்றின் தலைவர் சமுத்திரக்கனி. சாதி பாகுபாடால் பக்கத்து ஊரில் மக்கள் அந்த ஊரில் உள்ள கோவிலுக்குள் செல்லக்கூடாது. ஜல்லிக்கட்டு போன்ற பொது நிகழ்ச்சிகளில் களமிறங்க கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கட்டுள்ளது. அவர்களும் கோயிலுக்குள் வர வேண்டும், யார் வேண்டுமானாலும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கலாம் என்று அந்த ஊர் மக்களு ஆதரவாக பேசுகிறார் சமுத்திரக்கனி.

அவரது முடிவுக்கு அதே ஊரில் இருக்கும் வேல ராமமூர்த்தி உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டியும் நடக்கிறது. அதில் பக்கத்து ஊர் மக்களும் கலந்து கெள்கின்றனர். அந்த போட்டியின் போது ஏற்படும் பிரச்சனையில், சமுத்திரக்கனி, வேல ராமமூர்த்தியின் தம்பி, மைம் கோபியின் அண்ணன் உயிரிழந்து விடுகின்றனர்.
இதையடுத்து அந்த ஊரில் இருக்க மனமில்லாமல் சமுத்திரக்கனியின் மனைவி, அவரது சிறுவயது மகன் சண்முகபாண்டியனை அழைத்துக் கொண்டு மலேசியாவுக்கு சென்றுவிடுகிறார். பின்னர் 20 வருடங்களுக்கு பிறகு சண்முகப்பாண்டியனுக்கு பெண் பார்ப்பதற்காக மீண்டும் அவர்கள் சொந்த ஊருக்கு வருகின்றனர். அங்கு ஜாதி பிரச்சனையால் நின்று போன ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் நடத்த வேண்டும், அப்பா சமுத்திரக்கனியை கொன்றவர்களை கண்டுபிடித்து பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்கிறார் சண்முகபாண்டியன்.

கடைசியில் அந்த ஊரில் ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் நடந்ததா? சமுத்திரக்கனியை கொன்றவர்களை சண்முகபாண்டியன் பழிவாங்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஹீரோயிசம் இல்லாமல் சண்முகபாண்டியன் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மீனாக்‌ஷிக்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும், கொடுத்த கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார். ஊர் தலைவராக சமுத்திரக்கனி சாதாரண மனிதராக வந்து கலக்கியிருக்கிறார். அவர் பேசும் வசனங்களும், அவரது நடிப்பும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. மிடுக்கான தோற்றம், நடை என வேல ராமமூர்த்தி மிரட்டியிருக்கிறார். மைம் கோபி, மாரிமுத்து, பி.எல்.தேனப்பன் என மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு மற்றும் அதனை மையப்படுத்திய கதை என்றாலும், ஜல்லிக்கட்டுக்கு எதற்காக தடை ஏற்பட்டது. அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதை சிறப்பாக சொல்லியிருக்கிறார் பி.ஜி.முத்தையா. ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வெளிநாட்டு அமைப்புகளின் எதிர்ப்பை விட, நமது ஊர் கிராமங்களில் நடக்கும் சாதி பிரச்சனை தான் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த விடாமல் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது என்பதை தெளிவாக காட்டியிருக்கிறார். எனினும் படத்தின் கதையின் பலம், திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லையோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்படி, படம் மெதுவாக நகர்கிறது. அதேபோல் மற்ற படங்களை போல இல்லாமல், இந்த படத்தில் நாயகன் ஒரு சாதாரண இளைஞனாக, ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று காளையை அடக்கும்படியான காட்சிகளை வைக்காமல் காட்டியிருப்பது பார்க்க புதுமையாக இருக்கிறது.

சந்தோஷ் தயாநிதி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். டி.உதயகுமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.

0 90

‘Kaali’ starring Vijay Antony and directed by Kiruthiga Udhayanidhi is one of the most awaited projects of this year. The shooting of this action drama was happening at a rapid pace and has been successfully wrapped up , thanks to the meticulous planning and execution of the team headed by the director Kiruthiga Udhayanidhi. With her efficiency and work pace she has once again proven to a producer’s blessing. The post production work of ‘Kaali’ has begun and aims to finish it soon.
‘Kaali’ is produced by ‘Vijay Antony Film Corporation ‘. The movie stars Anjali, Sunaina, Shilpa Manjunath and Amritha playing the female lead. Actors Yogi Babu, R K Suresh, Madhusudan and Jaya Prakash have played important supporting character roles in ‘Kaali’.
The cinematography of ‘Kaali’ is done by Richard M Nathan, editing by Lawrence Kishore, art direction by Sakthee Venkatraj and Stunt choreography by Sakthi Saravanan.

விஜய் ஆண்டனியின் நடிப்பில் கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் உருவாகிவரும் ‘காளி’ படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று. மிக வேகமாக நடந்து வந்த இந்த ஆக்ஷன் டிராமா படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளது. இயக்குனர் கிருத்திகா மற்றும் அவரது அணியின் சிறப்பான மற்றும் வேகமான பணியால் ‘காளி’ படம் இவ்வளவு வேகமாகவும் சிறப்பாகவும் முடிந்துள்ளது என கூறப்படுகிறது. ‘காளி’ படத்தின் Post Production பணிகள் துவங்கியுள்ளது. மிக விரைவில் இப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘காளி’ படத்தை ‘Vijay Antony Film Corporation’ நிறுவனம் தயாரித்துள்ளது. அஞ்சலி , சுனைனா, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் அம்ரிதா ஆகியோர் இப்படத்தின் கதாநாயகிகள். யோகி பாபு, R K சுரேஷ், மதுசூதன் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரிச்சர்ட் M நாதனின் ஒளிப்பதிவில், லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பில் , சக்தி வெங்கட்ராஜின் கலை இயக்கத்தில் , சக்தி சரவணனின் சண்டை இயக்கத்தில் ‘காளி’ உருவாகியுள்ளது.

0 100

Actor Jai who hit the bullseye with ‘Balloon’ is all set to go bigger with his next release ‘Jarugandi’ directed by Venkat Prabhu’s long term associate Pichumani. It is a well know trivia that actor Nitin Sathyaa is the producer of this interestingly titled flick. Badri Kasturi is the co producer of ‘Jarugandi’.

The first look of ‘Jarugandi’ was launched yesterday by director A R Murugadoss who has a fan following all over the country breaking the linguistic barriers. This in fact had given major boost to the film in terms of wide and deep reach.

“A R Murugadoss is always known to support quality contents and iam sure our film will fit into the bill perfectly. We are in the verge of completing film. 90 % of the film’s shoot is over. As a producer i attach lot of pride and honour in associating with a film like ‘Jarugandi’, says the producer Nithin Sathya with pride.

Reba Monica John plays Jai’s pair in ‘Jarugandi’. Robo Shankar, Danny Arun, Jayakumar, Bose Venkat and Ilavarasu play important supporting characters in the movie. Cinematography of ‘Jarugandi’ is done by RD Rajasekar, music by Bobo Shashi, editing by Praveen KL, art direction by Remiyan and Stunt choreography by Don Ashok.

‘பலூன்’ படத்தின் மூலம் வெற்றியை சுவைத்துள்ள ஜெய்யின் அடுத்த படமான ‘ஜருகண்டி’ படத்தை வெங்கட் பிரபுவின் முன்னாள் இணை இயக்குனர் பிச்சுமணி இயக்கிவருகிறார். இப்படத்தின் தயாரிப்பாளர் பிரபல நடிகர் நிதின் சத்யா மற்றும் பத்ரி கஸ்துரி என்பது அனைவரும் அறிந்ததே.

‘ஜருகண்டி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று, இந்திய முழுவதும் மொழி எல்லைகளை தாண்டி தனக்கென ரசிகர்களை பெற்றிருக்கும் பிரபல இயக்குனர் A R முருகதாஸ் அவர்களால் ரிலீஸ் செய்யப்பட்டது. நல்ல சினிமாவை என்றுமே ஊக்குவிப்பவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த ஆதரவு இப்படத்திற்கு பெரும் பலமாக அமைவது நிச்சயம்.

”நல்ல படங்களை என்றுமே பாராட்டி ஆதரவு தரும் A R முருகதாஸ் அவர்கள் எங்கள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. எங்கள் படத்தின் 90 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஒரு தயாரிப்பாளராக இப்படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன் ” என நிதின் சத்யா பெருமையுடன் கூறினார்.

இப்படத்தின் ஜெய்க்கு ஜோடியாக ரேபா மோனிகா ஜான் நடிக்கின்றார். ரோபோ ஷங்கர், டேனி அருண், ஜெயக்குமார், போஸ் வெங்கட் மற்றும் இளவரசு ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். RD ராஜசேகரின் ஒளிப்பதிவில் , போபோ சஷியின் இசையில் , பிரவீன் KL படத்தொகுப்பில் , ரேமியன் கலை இயக்கத்தில், டான் அசோக்கின் ஸ்டண்ட் இயக்கத்தில் ‘ஜருகண்டி’ வருகின்றது.

0 107

The shooting spot of ‘Mr.Chandramouli’ had a surprise visitor in President of Tamil Film Producers Council and Secretary of South Indian Artistes Association, Actor Vishal visited the set early morning today. The team was busy shooting when they realised that Vishal was entering their sets to surprise them. Vishal was full of praise of the team ‘Mr.Chandramouli’ for their meticulous planning and execution. He has also heaped praises on director Thiru and producer Dhananjayan for being very professional and finishing the movie at such a rapid pace and announcing the movie’s release date as April 27th now itself. He feels this is a very positive sign in Tamil cinema and has urged others also to follow this.

‘Mr.Chandramouli’ stars Karthik, Gautham Karthik, Regina Cassandra and Varalakshmi Sarathkumar in the lead roles.

Mr.சந்திரமௌலி’ படப்பிடிப்புக்கு விஜயம் செய்த நடிகர் விஷால் !!!

கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா கசன்றா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் ‘Mr.சந்திரமௌலி’ படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும் தென்னிந்தியா நடிகர் சங்கத்தின் செயலாளருமான திரு.விஷால் அவர்கள் வந்து படக்குழுவினரை சந்தித்து அவர்களது வேகமான மற்றும் சிறந்த பணியை பாராட்டியுள்ளார். திட்டமிட்டபடி படப்பிடிப்பை சிறப்பாக நடத்துவதும், ரிலீஸ் தேதியை தற்பொழுதே ஏப்ரல் 27 என அறிவித்திருப்பதும் இயக்குனர் திரு மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்களது அருமையான திட்டமிடுதலுக்கு சான்றாகும் என விஷால் கூறியுள்ளார். இதே போல் தமிழ் சினிமாவின் மற்றவர்களும் சிறப்பாக திட்டமிடவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.