Home News

0 1071

பிரீமியர் லீக் ஆப் பேட்மிண்டனுக்கான ஏலம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் சென்னை அணியை நடிகர் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜயபிரபாகரன் அவர்கள் எடுத்துள்ளார். இதற்கு சென்னை ஷ்மாஷர்ஸ் (Chennai Smashers) என்று பெயர் சூட்டியுள்ளார். சென்னை அணியில் விளையாட பி.வி. சிந்து (P.V. Sindhu), சிக்கிரெட்டி (Sikkireddy), ஜெர்ரிசோப்ரா (Jerrychopra), கிருஷ்ணபிரியா (Krishnapriya) ஆகிய இந்திய வீரர்களும், சோனி (Sony), சைமன்சன்டோசோ Simonsantoso, பியா (Pia) ஆகிய இந்தோனேஷிய வீரர்களும், மேலும் இங்கிலாந்தை சேர்ந்த கிரிஷ்ஆட்காக் (Chrisadcock), பிரான்ஸை சேர்ந்த பிரிஷ் (Brice), கனடாவை சேர்ந்த டோபி (Toby) ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இந்த பிரீமியர் லீக் பேட்மிண்டன் போட்டி தொடக்க விழா நிகழ்ச்சியோடு வரும் ஜனவரி 2-ம் தேதி மும்பையில் ஆரம்பமாகிறது. இப்போட்டி மும்பையில் தொடங்கி சென்னை, ஐதராபாத், பெங்களூரு ஆகிய இடங்களில் நடைபெறுகிறது, இதன் இறுதி போட்டி டெல்லியில் நடைபெறுகிறது.
சென்னை அணியின் பயிற்சியாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இன்னும் யார் யார் இடம்பெறுவார்கள் என்பதனை விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிப்பேன் என்றும், சென்னை ஷ்மாஷர்ஸ் அணி இந்த தொடரின் இறுதி போட்டியில் வெற்றி பெற்றால் அதில் 50% தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக அளிப்பேன் என்றும் அணியின் உரிமையாளர் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.

0 1386

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் பாடல்கள் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். அந்த வகையில் “ரஜினி முருகன்” திரைப்படத்தில் இடம் பெற்ற “என்னம்மா இப்படி பண்றீங்களே மா” பாடல் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது.

இந்த பாடல்கள் திரைப்படத்திற்கு கூடுதல் பலமாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் திரையரங்கிற்கு அழைத்து வருவதற்க்கு ஒரு தூண்டு கோலாகவும் அமைந்துள்ளது. நான் ஒரு கானொளியில் கண்டேன் ஒரு “சேக்” அவரது பாணியில் இந்த பாடலை பாடி ரசித்துக் கொண்டு இருந்தார் அதைப்பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த பாடல் படத்திற்க்கு அடையாளமாகவும் மாறியுள்ளது அதற்காக இசையமைப்பாளர் டி.இமானுக்கு என் நன்றிகளை இங்கு பதிவு செய்து கொள்கிறேன்.

இந்த திரைப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் எந்த வேலையாக இருந்தாலும் சரி அதை செய்து முடித்து பெரியாளாக வேண்டும் என்பதை குறிக்கோளாக எடுத்து கிராமத்தில் வாழும் இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தின் வாழ்வியலை சுவாரசியமாகவும் நகைச்சுவை உணர்வுகளுடன் காட்சியமைத்து இருக்கிறோம். என்னுடன் இணைந்து இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண் மற்றும் இயக்குநர் சமுத்திரகனி இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவரும் என்பதில் எந்த விதமாக சந்தேகமும் இல்லை. “ரஜினி முருகன்” திரைப்படத்தின் பெயர், அனைத்து தரப்பு மக்களை சென்றடைவதற்குகான முக்கியமான காரணமாகும்.

இந்த பெயரை வைக்க வேண்டும் என்று சொல்லும் போது மனதில் சிறிய அச்சம் ஏற்ப்பட்டது. ஏன்னென்றால் சிறு வயதில் இருந்தே ரஜினி சாரின் வெறித்தனமான ரசிகன் அதே நேரத்தில் அவருடைய பெயரை அவரது அனுமதியுடன் எனது படத்திற்க்கு வைப்பது என்பது பெருமைக்குரியது. நான் பல சுவரொட்டிகளில் பார்த்திருக்கிறேன் ரஜினி சார் ரசிகர்கள் அவர்களது பெயருக்கு முன்னால் ரஜினி சார் பெயரை சேர்ப்பது வழக்கம். அதனால் எதுவும் பிரச்சனை வருமோ என்ற அச்சம் இருந்தது ஆனால் தற்போது அவர்களின் பெரும் அதரவுடம் படம் வெளிவரப்போகிறது என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

அத்துடன் ரஜினி சாருக்கு பிடிக்கும் கோடிக்கணக்கான குழந்தைகளில் நானும் ஒருத்தன் என்பதால் தான் எனக்கு குழந்தை ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். இந்த திரைப்படம் எல்லா தரப்பு மக்களையும் கவரும் விதமாக இருக்கும் எடுத்துக்காட்டாக வயதானவர்கள் விரும்பும் விதமாக குடும்பத்தின் வாழவில்லை நகைச்சுவையுடனும், இளைஞர்களுக்கு ரசிக்கும் விதமாக காதல் காட்சிகளும், குழந்தைகள் விரும்பும் விதமாக பாடல்கள் மற்றும் நகைச்சுவைகளை சேர்த்து ஒரு கதம்பமாக கொடுத்துள்ளோம். படத்தின் சிறப்பு தாத்தா கதாபாத்திரத்தில் வரும் ராஜ்கிரண் அவரை சுற்றி நடக்கும் குடும்ப அழகியலை நகைச்சுவை உணர்வுடன் பதிவு செய்துள்ளோம்.

இந்த திரைப்படத்தில் புகைபிடிப்பது போன்ற எந்த காட்சிகளும், இடம் பெறவில்லை. இயக்குநர் பொன்ராம் கதையை விவரிக்கும் தருணத்தில் என்னிடம் கூறியது இந்த திரைப்படம் குடும்பத்துடன் வந்து பார்த்து ரசிக்கும் விதமாக இருக்க வேண்டும் என்றார் அத்துடன் குழந்தைகள் ரசிக்கும் விதமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த திரைப்படத்தில் நான் புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கவில்லை அதுமட்டுமின்றி இதற்கு முன் நான் நடித்த எந்த திரைப்படத்திலும் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் தேவைப்படவில்லை அதனால் தவிர்த்திருக்கிறேன் அத்துடன் அதுபோன்ற எண்ணமும் எனக்கு கிடையாது.

இதைத்தாண்டி மக்களின் நிலைப்பாடும் தற்போது தெளிவாக உள்ளது மக்கள் திரைப்படத்தை பார்த்து ரசித்து விட்டு பின்னர் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து விடுகின்றனர். நகைச்சுவை கலந்து ஒரு திரைப்படம் கொடுக்க நினைக்கும் போது நாம் இது போன்ற கருத்துகளை ஆராயமுடியாது. என்னை ரசிப்பவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்களாக இருப்பதால் அவர்களை மதித்து அவர்கள் ரசிக்கும் விதமாக தான் காட்சியமைத்து இருக்கிறோம். இந்த திரைப்படம் மதுரையின் மண் வாசனை மாறாமலும் அதே நேரத்தில் மதுரையை சுற்றியுள்ள கிராமத்தின் கொண்டாட்டமனான் தருணத்தை நகைச்சுவையாக தந்துள்ளோம். படத்தை பார்த்து மக்கள் தான் எப்படி இருக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டும்.

ஆனால் நாங்கள் நினைத்ததை சிறப்பாக கொடுப்பதற்கு ஏற்ப என்னுடன் சூரி, ராஜ்கிரண், இயக்குநர் சமுத்திரகனி, ஒளிப்பதிவாளர் பாலசுப்புரமணியம் மற்றும் படக்குழுவினர் சிறப்பாக அமைந்தனர். அதனால் கண்டிப்பாக குடும்பத்துடன் பார்த்து ரசிப்பார்கள் என்பதில் எனக்கு எந்த வித மாற்று கருத்தும் இல்லை. என குழந்தைக்கு ரஜினி , விஜய், அஜித் இவர்களை பார்த்தால் பெயர் சொல்லும் அளவிற்க்கு தெரியும் தொலைக்காட்சிகளில் பார்த்தால் அவர்களது பெயர் சொல்லி மாமா என்று கூப்பிடுவாள். அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பதற்க்கு நேரம் கிடைப்பதில்லை.

ஆனால் மா கா பா ஆனந்த நண்பர் என்பதால் தொடர்ந்து அலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவோம். புத்தகம் படிப்பது போன்ற பழக்கங்கள் கிடையாது. அலைபேசியில் வாட்ஸ் ஆப், பேஸ்புக் மற்றும் டுவிட்டரை கவனிக்கவே நேரம் போதுமானதாக உள்ளது. என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்கள் தான் இப்போது வரைக்கு என் நெருங்கிய நண்பர்கள் அவர்களுடன் தான் நான் இருக்கிறேன். அவர்களில் ஒரு நண்பர் அருண்ராஜா பாடலாசிரியாரகவும் மற்றும் சிலபடங்களில் நடித்தும் இருக்கிறார். இன்னும் இரண்டு நண்பர்கள் தயாரிப்பு துறையில் வேலை செய்கின்றனர். எனக்கு வாய்ப்பளித்த அனைவரையும் நான் நன்றியுடன் நினைக்கிறேன். என்னை ஒரு கதாநாயகனாக வைத்து இயக்கிய இயக்குனர்களுக்கு தான் நான் பெரிய நன்றி தெரிவிக்க வேண்டும். நான் நினைத்து கூட பார்த்தது கிடையாது கதாநாயகனாக திரையில் வருவேன் என்று. இயக்குநர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கை தான் அதற்கு காரணம்.இயக்குநர் பாண்டிராஜ் தொலைக்காட்சியில் இருந்து நேரடியாக என்னை கதாநாயகனாக நடிக்க வைத்தார். இயக்குநர் துரை செந்தில்குமார் “எதிர் நீச்சல்” படத்தில் கடைசி இருவது நிமிடம் என்னை வசனம் பேசாமலே நடிக்க வைத்தார். இயக்குநர் எழில் என்னை வைத்து முழுநீள நகைச்சுவை படத்தை எடுத்தார். இயக்குநர் பொன்ராம் சத்தியராஜ் போன்ற பெரிய நடிகருக்கு இணையாக நடிக்க வைத்திருந்தார் இவை அனைத்தும் அவர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கை மட்டும் தான். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை பதிவு செய்து கொள்கிறேன் இவர்கள் தான் என் குரு. நான் முதலில் நடனம் தொலைக்காட்சிகலில் கற்றுக் கொண்டது தான் பிறகு பல முயற்சிகளுக்கு பின் தற்போது முன்பை விட நன்றாக ஆடுகிறேன் என்கின்றனர் அதனால் சிறிய நம்பிக்கை வந்துள்ளது. இதே போல் கடினமாக உழைத்தால் பிற்காலத்தில் ஒரு நல்ல நடனமாடும் நாயகனாக வருவேன் என்று நினைக்கிறேன். என்னுடைய காதலி மற்றும் தோழி அனைவருமே என மனைவி மட்டும் தான். காரைக்குடியில் பிரியா மெஸ் கடையில் சாப்பிட்டதில் இருந்து டையட் என்பதை மறந்துவிட்டேன் அந்த அளவுக்கு நன்றாக உணவு இருந்தது.

பள்ளியில் ஒரே ஒரு முறை மேடை ஏறி பேச்சுப் போட்டியில் கலந்து இருக்கிறேன் அதற்கு பிறகு கல்லூரி காலங்களில் மட்டும் தான் மேடை ஏறியுள்ளேன். நான் பேட்டி எடுத்த நடிகர்களில் எனக்கு பிடித்தவர் விக்ரம். அவர்ளுடன் ஒருமுறை பேட்டி எடுக்கும் போது அவர் கூறினார் ஒருனாள் நீ கதாநாயகனாக வருவாய் அப்படி நடிக்கும் போது நான் அதில் வில்லனாக நடிப்பேன் என்றார். அப்படி ஒரு கதை கிடைத்தால் கண்டிப்பாக விகரம் சாரைப் பார்த்து வில்லனாக நடிக்க கேட்பேன். ரஜினி முருகன் திரைப்படத்தை குடும்பத்துடன் வந்து திரையரங்கில் பார்த்து ரசிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

0 1099

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலர் நடிக்க பொன் ராம் இயக்கி இருக்கும் படம் ‘ரஜினிமுருகன்’.

இமான் இசையமைத்து இருக்கும் இப்படத்துக்கு பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடும் முயற்சியில் பலமுறை இறங்கியது. ஆனால், அந்நிறுவனம் வாங்கிய கடனால் படத்தை வெளியிட முடியாமல் திணறியது.

இது தொடர்பான பேச்சுவார்த்தையில் திருப்பதி பிரதர்ஸ் இறங்கியது. தற்போது கடன் பிரச்சினைகள் முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், டிசம்பர் 4-ம் தேதி ரஜினிமுருகன் வெளியாகிறது என்று அப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான லிங்குசாமி ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இது மாதிரி பல முறை சொல்லி இருந்தாலும் பார்போம் இந்த வாட்டியாகவது வரும் என்ற நம்பிக்கை வைப்போம் அத்துடன் கடுமையான போட்டியில் வருகிறது ஆமாம் டிசெம்பர் மாதம் 4-ம் தேதி உறுமீன், ஈட்டி, போன்ற படங்களுடன் போட்டி போடபோகிறது. எல்லாம் முருகன் மேல இருக்குற நம்பிக்கை தான்.

0 1166

விஜய் தற்போது இயக்குனர் அட்லி படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும் இந்த நிலையில் சமிபத்தில் இவரி அடுத்த படத்தின் இயக்குனர் யார் என்று போட்டிகள் நிலவியது இந்த நிலையில் இயக்குனர் பரதன் இப்படத்தை இயக்குகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த படம் இவர்கள் இணையும் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. எங்கள் வீட்டு பிள்ளை , உழைப்பாளி , நம்மவர் , தாமிரபரணி , படிக்காதவன் , வேங்கை ,வீரம் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த பிரபல நிறுவனமான விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படம் விஜய்60 ( இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை).

B. நாகி ரெட்டி அவர்கள் நல்லாசியுடன் பி வெங்கட் ராம் ரெட்டி வழங்கும் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் B.பாரதி ரெட்டி தயாரிக்கிறார். இது தவிர மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெறுகிறது.

0 6264

The 6th edition of the 80’s Actors re union

The 6th edition of the 80s actors re union was celebrated in Nina Reddys guest house in olive beach, Chennai on 29th august.

Suhasini, Lissy and Kushbu collaborated successfully in arrangements hosting and inviting guests

The theme was Moulin Rouge

The house was decorated in true French styles in red gold and neon, red carpets red velvet cakes red macaroons and red roses and red friendship bands welcomed the 34 guests who were dressed according to the theme …..Red and Beige were the color of attire …All women were dressed in designer were in RED

…The house resembled the red hues of Moulin rouge Paris with red candles and reddish mood lighting ….in the sun deck and red lantern lit the pool with gobos circulating theme of 80s actors logo and Moulin rouge logo …..

The new guests for this year were stars from Bollywood 80s too like Jackie shroff, Poonam Dhillon and Swapna who worked in South Indian films

Jayasudha from Hyderabad

Rehman and Parvathy from Kerala and

Satyaraj and Bhagyaraj from Chennai

The evening started with a welcome and a photo opp in the façade of a mouline rouge embossed red velvet and gold neon back drop specially created. They passed thru the stairs decorated with red and red dotted pom poms hand made by the female actors …and candles lit in red glasses on the side of a winding staircase that lead them to a sprawling deck with gabbanas and gazebos decorated with red stenciled and chinese and French red lanterns

The gusets were shown a 10 minute audio visual of the intro to 80s actors club and the past celebration , inviting 2015s new entrants and leading them to the Moulin rouge party …Gifts were distributed to all and specially to the gorgeously dressed women and the very important portrait pictures were clicked by stills Ravi …who is a favorite of all stars from 80s

The party started with karaoke singing of Sumaltha , Jackie and Jayasudhas renditions of 80s western pop hits and moved onto Hindi songs and Tamil and Malayalam songs by Mohanlal and Suhasini

The dance floor was kicked off with a mesmerizing dance by Poornima, Suhasini and Menaka from Shaukeen called Manali Trance

Highlight was the Lungi dance where Kushbu distributed Lungis to all .. And every star danced wearing lungis … Jackie Shroff took all the 12 lungis back to Bombay as a memorabilia

The finale was a broad way like act where Kushbu Suhasini and Jaishree were dressed like French dancers in black and white with black hats and red feather stoles …They spontaneously invited Mohanlal Chiranjeevi Venkatesh to the floor and the men danced and jived too

At the stroke of midnight a special 80s cake was cut and 2nd cake celebrating more than 7 ppl who celebrate august birthdays

Mohanlal does a magic show every year and this year was his magic trick of levitation …. every year he attempts …so far no success This year too tried with Kushbu as the volunteer but failed But he refused to leave until he succeeded …Sarath kumar was the candidate and the levitation actually happened everyone cheered him Mohanlal succeeded in his magic trick this year.

The party continued till Poonam and Jackie Sumalatha Mohan lal Revathy were dropped at the airport to take their respective national and international flights

The arrangements took 10 days of Suhasini, Kushbu and Lissy’s time and efforts to bring the classy themed re union

They parted at wee hours of the morning planning to meet again next year in a new destination

0 994

பிறந்தநாள் கொண்டாட்டடங்களை தவிர்த்து ; நற்பணியில் இறங்கிய நடிகர் விஷால் !!

பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து நடிகர் விஷால் ICSA சென்டரில் இன்று நாடு திரும்பவிருக்கும் இலங்கை அகதிகளுடன் நற்பணி நாளாக கொண்டாடினார். விழாவில் அவர் பேசியதாவது ; நான் தாமிரபரணி படபிடிப்புக்காக இராமேஸ்வரத்தில் இருந்த போது தான் அங்கு இருக்கும் இலங்கை அகதிகள் முகம் பற்றி எனக்கு தெரியவந்தது. எனக்கு முகாமை பற்றிய இன்னும் பல தகவல்களை என் அண்ணி ஸ்ரேயா அவர்களின் தோழியான பூங்கோதை சந்திரஹாசன் மூலமாக தெரிந்துகொண்டேன். மேலும் அவர் இயக்குனராக இருக்கும் “OFERR” என்னும் NGOவை பற்றிய என்னிடம் கூறியவுடன் எனக்கும் அவர்களுடன் சேர்ந்து நற்பனி செய்ய ஆர்வம் ஏற்ப்பட்டு தொடர்ந்து செய்து வருகிறேன். ஒவ்வொரு முறை நான் “OFERR” சென்று திரும்பும் போது என்னுள் புத்துணர்ச்சி ஏற்ப்படுவதை நான் உணர்கிறேன். என்னுள் அரசியல் நோக்கம் இருப்பதால் தான் நான் இதை போன்ற நற்பணிகளை செய்கிறேன் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். எனக்கு சத்தியமாக அதைபோன்ற அரசியல் நோக்கம் துளி கூட இல்லை. நான் ஒரு நடிகன், மக்களை மகிழ்விக்கும் மகத்தான பொறுப்பு எனக்கு உள்ளது. அதை மட்டும் சரியாக செய்தால் போதும் என்று நான் நினைகிறேன். மேலும் நான் Traffic constable ஆக இருந்து நற்பணி அற்ற நினைபவர்களுக்கு சரியான வழியை காட்டவே விரும்புகிறேன். நடிகர் கார்த்தி நேற்று இரவு என்னிடம் பேசி கொண்டு இருக்கும் போது பெண் குழந்தைகள் பலர் தாங்கள் படிக்கும் பள்ளியில் கழிப்பறை இல்லாத காரணத்தினால் அவர்களுடைய படிப்பையே நிறுத்திவிட்டு சென்றதாகவும் , அதை கருத்தில் கொண்டு கார்த்தி பாரிஸ் உள்ள அரசு பள்ளி ஒன்றுக்கு அவருடைய அகரம் அறகட்டளை மூலமாக ஒரு இலட்சம் ருபாய் செலவில் கழிப்பறை கட்டிகொடுதுள்ளார் , அதை போலவே ஒரு லட்சம் ருபாய் கொடுத்தால் வேறு ஒரு பள்ளியில் கழிப்பறை கட்டி கொடுக்கலாம் என்ற செய்தியை என்னிடம் தெரிவித்தார். நானும் அதை நிச்சயம் செய்ய உள்ளேன் என்று கூறிய விஷால். அங்கு வந்திருந்து இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த மாணவர்களுக்கும், ICSAவை சேர்ந்த முப்பது மாணவர்களுக்கும் , உடலால் சவால்விடப்பட்ட மாணவர்களுக்கும் , பார்வையற்றவர்களுக்கும் ஒரு லட்சத்தி அறுபத்தி ஏழாயிரம் ரூபாயை நன் கொடையாக கொடுத்தார். அது போக அவர்களுக்கு shoe மற்றும் socksயை வழங்கினார். மேலும் socks வழங்க தன்னுடைய நற்பணி மன்றத்தினர் மூலமாக மக்களை அணுகி நிதி பெற்று மேலும் இதை சிறப்பாக செய்யவுள்ளதாக கூறினார். தனி ஒருவனாக இருந்து பணியாற்றுவதை விட பலர் பேர் கைகோர்த்து இந்த நல்ல விஷயத்தை செய்தால் சிறப்பாக அமையும் என்று கூறினார் புரட்சி தளபதி விஷால் அவர்கள்.

0 885

தண்ணீர் பிரச்சனை பற்றிப படங்கள் தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல. இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் ’தண்ணீர் தண்ணிர்’ என்ற தலைப்பிலேயே ஒரு படம் எடுத்து நீராதாரம் அற்ற கிராமத்தின் துன்பங்களைப் பதிவு செய்தார் இன்றளவும் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக நினைவுகூரப்படும் படம் அது.

இரண்டாவது படத்திலேயே தேசிய விருது பெற்ற சற்குணம் இயக்கியிருக்கும் ‘சண்டி வீரன்’ படமும் குடிநீரின்றித் தவிக்கும் கிராமத்தின் பிரச்சனைகளைப் பேசுகிறது. தேசியவிருதுகளைக் குவித்த இயக்குனர் பாலா இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறர். அதன் தாக்கம் எந்த அளவு இருக்கிறது?

பாரி (அதர்வா) சிங்கப்பூரிலிருந்து தன் சொந்த கிராமத்துக்கு வருகிறான். பஞ்சாயத்து பிரசிடெண்டும், ஊரில் உள்ள அனைவரது மரியாதையைப் பெற்றவருமான மில் ஓனரின் (லால்) மகளும் (ஆனந்தி) அவனும் காதலிக்கிறார்கள்.

பாரியின் கிராமத்து எல்லையில் இருக்கும் குளத்து நீர்தான் குளத்துக்கு அந்தப் பக்கம் இருக்கும் கிராமத்தில் வசிப்பவர்களுக்கான ஒரே குடிநீர் ஆதாரம். பல ஆண்டுகளாக இந்த கிராமத்து மக்கள் அந்த கிராமத்தினர் தண்ணீரைப் பயன்படுத்தவிடாமல் செய்கிறார்கள். பணபலமும் பதவிபலமும் மிக்க லால், குளத்தைத் தொடர்ந்து குத்தகைக்கு எடுத்து குளத்து நீரின் மூலம் அவர்களுக்கு உப்புக்கரிக்கும் நீர் மட்டுமே கிடைப்பதை உறுதி செய்கிறார்.

பக்கத்து கிராமத்தின் மக்களின் துயரத்தை அறியும் பாரி, அவர்களுக்கு குடிநீர் கிடைக்கவைக்க எடுக்கும் முயற்சிகள் பிரச்சனையைப் பெரிதாக்குகின்றன. பக்கத்து கிராம மக்கள் அனைவரையும் கொன்றழிக்க தன் கிராம மக்களை ஒன்று திரட்டும் லால், அதோடு தன் மகளைக் காதலிக்கும் பாரியையும் கொல்ல ரகசியத் திட்டம் தீட்டுகிறார்.

அண்டை கிராமத்தையும் தன் உயிரையும் பாரியால் காப்பாற்றிக்கொள்ள முடிந்ததா என்பதே மீதிக் கதை.

கிராமிய மணம் கமழும் கதைகள் தமிழ்த்திரையில் அரிதாகிவிட்ட சூழலில் கிராமிய ரசம் சொட்டச் சொட்ட ஒரு படம் கொடுத்திருப்பதற்காகவே சற்குணத்துக்கு ஒரு ஷொட்டு. கிராம மக்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், விழாக்கள், அவர்களின் அப்பாவித்தனம், வன்முறை கலந்த குணம் ஆகியவற்றை மிக அழுத்தமாகப் பதிவுசெய்கிறது படம். கிராமங்களுக்கும் நகர வாழ்க்கைக்கும் தொலைதூர இடைவெளி உருவாகிவிட்ட சூழலில் நகர்ப்புற மக்கள் இந்தப் படத்தைத் இதற்காகவே பார்க்கலாம்.

குடிநீர் தட்டுப்பாடு என்ற எரியும் பிரச்சனையைக் கையிலெடுத்திருக்கும் இயக்குனர் அந்த அடிப்படை உரிமை எப்படி பலருக்கு விலையுயர்ந்த பொருளாக மாறிவிட்டது என்பதை விளக்குகிறார். குடிக்க சுகாதாரமான் நீரற்ற கிராம மக்களின் அவலநிலையை அழுத்தமாகப் பதிவுசெயவதோடு அப்பாவி மக்கள் குடிநீருக்கு வேறொருவரை அண்டி இருக்க வேண்டிய நிலையின் சமூக, பொருளாதார, அரசியல் காரணிகளையும் மறைமுகமாகக் கேள்வி எழுப்புகிறது படம்.

இரண்டு மணி நேரத்துக்கு ஐந்து நிமிடம் குறைவான நேரத்தை எடுத்துக்கொள்ளும் படத்தில் தொடக்கத்தில் வரும் காதல், நகைச்சுவைக் காட்சிகள் போரடிக்கவில்லை என்றாலும் சற்று அளவுக்கதிகமாக நீட்டிக்கபப்ட்டிருக்கின்றன. சிங்கப்பூரில் அதர்வா அடிவாங்கி தப்பிப்பதை காட்சிப்படுத்தியிருக்கத் தேவையில்லை. வ்சனத்தில் சொல்வதே போதுமானதாக இருந்திருக்கும். படத்தின் மையக்கதைக்கும் அதற்கும் பெரிய தொடர்பு ஒன்றும் இல்லை.

ஆனால் படத்தின் மையச்சிக்கலுக்குள் நுழைந்தபின் படம் தீவிரமடைகிறது. இடைவேளையின்போது பிரச்சனை உக்ரமடைந்து நிமிர்ந்து உட்கார வைக்கிறது

இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் வரும் பாடல் இரண்டு மணி நேரமாவது படம் ஓட வேண்டும் என்பதற்காகவே வைக்கப்பட்டதாக்த் தோன்றுகிறது. ஆனால் அதன் பின் ஒற்றை மனிதனாக நாயகன் ஒரு கிராமத்தைக் காப்பாற்ற முயலும் காட்சிகள் விறுவிறுப்பாகவும் நம்பகத்தன்மையுடனும் இருக்கின்றன. ஆனால் இறுதியில் அனைவரும் நல்லவராக மாறுவது அதுவரை ஏற்பட்ட தாக்கத்தை சற்று குறைந்துவிடுகிறது.

அதோடு இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பக்கத்து கிராமத்தவருக்குத் தண்ணிர் தர மறுப்பதற்குக் வரட்டுப் பிடிவாதம் காரணம் என்பது விளக்கப்பட்டாலும் தண்ணீர் பகிர்வதில் உள்ள பிரச்சனையை இன்னும் விவரமாக சொல்ல அதிக நேரம் எடுத்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் படம் எடுத்துக்கொண்ட பிரச்சனையின் தீவிரத்தன்மை இன்னும் ஆழமாக ரசிகர்களைச் சென்றடைந்திருக்கும்.

நடிகர்களில் அதர்வா விளையாட்டுத்தனமான கிராமத்து இளைஞனாகவும் மற்றவர்களின் பிரச்சனையைத் தோளில் சுமந்து தீர்வு தேட முயற்சிக்கும் மனிதனாகவும் நன்றாகப் பொருந்துகிறார் வசன உச்சரிப்பில் மட்டும் சற்று கவனம் செலுத்த வேண்டும். ’கயல்’ ஆனந்தி பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். நடிப்புக்குப் பெரிய வேலை இல்லை. வரட்டுப் பிடிவாதமும் சர்வாதிகார மனோபாவமும் மிக்க மனிதராக வரும் லால் படத்துக்கு பெரிய பலம். அதர்வாவின் அப்பாவி அம்மாவாக வரும் ராஜஸ்ரீயும் குறைவைக்கவில்லை.

அருணகிரி இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக ’அலுங்குறேன் குலுங்குறேன்’ டூயட் பாடல் நம்மை 80களில் இளையராஜா இசையமைத்த எண்ணற்ற கிராமிய மணம் கமழும் டூயட் பாடல்களுக்குக் கொண்டுசெல்கிறது. சபேஷ்-முரளியின் பின்னணி இசை காட்சிகள் சரியான தாக்கத்தை ஏற்படுத்த உதவுகிறது. பி.ஜி. முத்தையாவின் ஒளிப்பதிவு ஒரு பச்சைப் பசேலென்ற கிராமத்துக்குச் சென்றுவிட்டு வந்த உணரவைத் தருகிறது.

ரொம்ப சீரியசான கதைக்கு கிளைமாக்ஸ் மட்டும் ஏன் காமெடி என்ட்ரி தெரியவில்லை கடைசியில் டைட்டில்ல போடும் காட்சிகளை கிளைமாக்ஸ் அக வைத்து இருந்தால் படம் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும் .

0 871
 

When it rains it pours it is said , and the recent testimonial evidence to this old saying is the commitment of Bobby Simha to R S Infotainment  the production house with multiple projects of different genres.’ Three different projects for the same banner more or less during the same period is the best leaf out of a artiste’s career  book. The professionalism is reflected all over. I would rather say that the best gift that would ever be granted to Bobby Simha is giving him the title of Rajini sir. We have titled the film ‘Veera’. It was not intentionally planned but more of a glorious co incidence.The script is well webbed with action and humour. Bobby Simha  now emerging as a star will suit the role. In my opinion this film will add another feather to his hat. My company is proud to introduce talents that could serve the industry for a long time. Debutant director K.Rajaraman will be the director of this film.The details the writer Bakkiyam Sankar had worked out for this script deserves special attention. Promising Iswarya Menon is paired opposite him and Bala Saravanan an actor of immense potentiality in the area of comedy plays an all important role. We are commencing shoot shortly and I’m sure this film will be block buster like the earlier Veera ‘ concluded Producer Elred Kumar with flowing confidence.


ஒரு நடிகர் ஒரே பட நிறுவனத்துக்கு தொடர்ந்தது படம் நடிப்பது அவரது திறமையை தாண்டி தொழில் பக்தியையும் குறிப்பபிடும்.அந்த வகையில் ஆர் எஸ் இன்போடைன்மென்ட் நிறுவனத்தில் தொடர்ந்து  நடிப்பதன் மூலம் நடிகர்  பாபி சிம்மா சிறப்பு அந்தஸ்து பெறுகிறார். 
‘ ஒரு நிறுவனத்துக்கு ஒரு நடிகர் மூன்று படங்களில் ஏறத்தாழ ஒரே கால கட்டத்தில் நடிக்கிறார் என்பதில் இருவருக்கும் சம பெருமையும் அந்தஸ்தும் கூட.வெவ்வேறு கதைகள் , வெவ்வேறு இயக்குனர்கள்  என்றாலும் அதே நடிகர் என்பதில் ரொம்பவும் சௌகரியம் தான்.அவரது இந்த தொழில் நேர்மைக்கு நாங்கள் கொடுக்கும் பரிசுதான் ‘வீரா’ என்கிற இந்தப் படத்தின் தலைப்பு. ரஜினி சாரின் இந்த தலைப்பை விட அவருக்கு நாங்கள் சிறந்ததாக என்ன கொடுத்து விட போகிறோம்.இது திட்டமிட பட்டது என்பதை விட அமைந்தது என சொல்லலாம். நகைசுவையுடன் action கலந்த இந்த  ஜனரஞ்சகமான கதைக்கு பிரபல எழுத்தாளர் பாக்கியம் சங்கர் கதை, திரைக்கதை அமைத்து வசனம் இயற்றுகிறார் . வீரா படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார் புதிய இயக்குனர் K.ராஜாராமன் .ஒரு நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்தது வரும் கதா நாயகன் பாபி சிம்மாவுக்கு ‘வீரா’ மேலும் ஒரு மணி மகுடம் ஆகும். 
எனது நிறுவனம் சார்பாக பல் வேறு திறமையான புதிய  இயக்குனர்களை அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன். அந்த வகையில் இந்த படத்தின் இயக்குனர்   ராஜா ராம் எங்கள் நிறுவனத்துக்கு பெரும் பெருமை சேர்ப்பார் என்பதில் எனக்கு பெரும் நம்பிக்கை உண்டு.புதிய நாயகி ஐஸ்வர்யா மேனன் இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகம்  ஆகிறார். வளர்ந்து  வரும் நகை சுவை நடிகர்  பால சரவணன்  இந்தப்படத்தில் ஒரு முக்கிய  கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.விரைவில் படப்பிடிப்பு துவங்க  உள்ள இந்த படத்துக்கு மற்ற தொழில் நுட்ப  கலைஞர்கள் தேர்வு நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது’ என்று பெருமிதத்துடன் கூறுகிறார் தயாரிப்பாளர்  எல்ரெட்  குமார்.

0 1094

ஆர்யாவைப் கதாநாயகிகளுக்குப் பிடிக்க என்ன காரணம் என்று ஒருபடவிழாவில் விவாதிக்கப்பட்டது.  யூடிவி மோஷன்ஸ் பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணுவர்தன் பிலிம்ஸ் இணைந்து வழங்கும் படம் ‘யட்சன்’ ..

ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னதி, சுவாதி நடித்துள்ளனர். விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். ‘யட்சன்’ என்றால் குபேரன்,இயக்குபவன் என்று பொருளாம்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா  நடந்தது.அதுவே படத்தின் அறிமுக விழாவாகவும் அமைந்தது.

விழாவில் படத்தை இயக்கியுள்ள விஷ்ணுவர்தன் பேசும் போது ” இது ‘ஆரம்பம்’ படத்துக்கு முன்பே பேசப்பட்ட ஒரு விஷயம். ஆனந்தவிகடனில் வந்த சுபா அவர்களின் தொடர்கதை திரை வடிவம் பெற்றுள்ளது. படத்தின் பாடல்கள்  நன்றாக வந்து வரவேற்பைப் பெற்றுள்ளன.  கம்போசிங் ,பாட்டு என்று நாங்கள் வெளிநாடு எல்லாம் போய்  சிரமப்படவில்லை. திநகரிலுள்ள ஒரே ரூமில்தான் இப்படிப்பட்ட பாடல்களை எல்லாம் உருவாக்கினோம்.

ஒளிப்பதிவாளர் ஒம்பிரகாஷ் என்னுடன் இணைந்துள்ள 2 வது படம். ஸ்டண்ட் சில்வா ,.ஆர்ட் லால்குடி இளையராஜா

ஆர்யாவுடன் இது எனக்கு 5 வது படம். ஆர்யா என் ஹீரோ.அவரைப் பார்த்தாலே எதுவும் கேட்க வேண்டாம். கதை சொல்ல வேண்டாம். எப்ப மச்சான் ஷூட்டிங் போகலாம் என்பவர் .அவருடன் என் தம்பி கிருஷ்ணாவும் இணைந்திருக்கிறார்.நான் எப்போ படம் தொடங்கினாலும்அம்மா உன் தம்பியையும் நடிக்க வைப்பா என்பார்கள் . அவருக்கு ஏற்றமாதிரி கதை அமைந்ததால் இதில் நடிக்க வைத்திருக்கிறேன். ஆர்யா-கிருஷ்ணா இரண்டு பேரையும் நடிக்க வைக்க படாதபாடு பட்டேன். தீபா சன்னதிக்கு நல்ல நடிப்புக்கு இடம் தருகிற பாத்திரம்.

யுவன் என் ஆரம்பகாலம் முதல் என்னுடன் பெரியபலமாக தொடர்பவர். நீ எத்தனை ஆல்பம் போட்டாலும் எனக்கு தனியா போட வேண்டும் என்று உரிமையோடு கேட்கிற நட்பு எங்களுடையது.

படப்பிடிப்பே ஜாலியாக கலாட்டாவாக போனது.” என்றார்.

பாடலாசிரியர் பா. விஜய் பேசும் போது ” நானும் விஷ்ணுவர்தனும், யுவனும் இணைந்து இது எட்டாவது படம். அதிலும் எல்லாப் படங்களிலும் எல்லாப் பாடல்களையும் எழுதியுள்ளேன். எங்கள் 3 பேரிடம் அப்படி ஒருநட்பு, புரிதல் உள்ளது. இவர்களுக்கு எழுதும் போது மட்டும் பாடல் எழுதும் மனநிலையில்  நான் போனதில்லை நண்பர்களைப் பார்ப்பது போல போவேன். இந்தப் படத்தின் மூலம் ஆர்யா என்கிற நண்பனின் நட்பு கிடைத்தது. ஆர்யாவை ஏன் எல்லாப் பெண்களும் கதாநாயகிகளும் விரும்புகிறார்கள் தெரியுமா? இதுவரை தெரியாது,இப்போது புரிகிறது.
நட்புக்குஅவ்வளவு மரியாதை தருபவர். எளிமையாக, இனிமையாகப் பழகுபவர்.
இதுவரை மூவாயிரம் பாடல்கள் எழுதியிருக்கிறேன். நான் பிரஸ்மீட் வைத்து பாட்டெழுத மாட்டேன் என்று சொன்னதில்லை நடிக்க வந்தபிறகு அப்படி பரப்பி விட்டார்கள். இதன் பாடல்களும் ,’சர்வம்’ படத்துக்குப்பிறகு இந்தப்படமும் பெரிய வெற்றியடையும் ”என்றார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா  பேசும்போது ” இந்த விஷ்ணுவர்தனின் படத்துக்கு மட்டும் யுவன் என்ன ஸ்பெஷலாக செய்திருக்கிறார் என்ன மேஜிக் செய்திருக்கிறார் என்கிறார்கள். விஷ்ணுவர்தனின் துறுதுறுப்பும் எனர்ஜியும் பழகினாலே நமக்கும் வந்து விடும் .அவரை பள்ளி நாட்களிலிருந்தே தெரியும். நல்லதோ கெட்டதோ முகத்துக்கு நேரே சொல்பவர் .”என்றார்.

கிருஷ்ணா பேசும் போது ”ஆர்யாவுடன் சேர்ந்து நடித்தது செம ஜாலியாக இருந்தது..என்னைப் பார்க்கிறவர்கள் எல்லாரும் ஏன் அண்ணன் இயக்கத்தில் நடிக்கவில்லை என்பார்கள் இனி இதைக் கேட்க மாட்டார்கள் .என் முதல் இரண்டு படமும் தோல்வி அடைந்தபோது மிகவும் வருத்தப்பட்டேன். அப்போது அண்ணன் ‘நேரம் வரும்போது நாம் இணையலாம் ‘என்று கூறினார். என் படங்களுக்கு யுவனின் இசை அடையாள அட்டையாக இருந்து வெற்றி பெற்றுத்தந்தது. ‘கழுகு’ படவெற்றிக்கு100 சதவிகித காரணம் யுவன் இசைதான்” என்றார்.

ஆர்யா பேசும்போது “என்னைநடிக்க வைத்து யூடிவியில் பலபடங்கள் எடுத்த போதும் தொடர்ந்து வாய்ப்பு தருகிறார்கள். எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறார்கள். விஷ்ணுவர்தனிடம் நான் கதை கேட்பதில்லை. அவர் சொல்ல ஆரம்பித்தால் ஆறேழு மணிநேரம் போகும் ஆறேழு மணிநேரம் கதை சொல்வார் அவருடைய பொறுப்பை விடமாட்டார் எனவே நான் கதை கேட்பதில்லை.

நான் இதுவரை நடித்தவை 25 படங்கள், என் எல்லாப் படங்களுக்கும் யுவன்தான் இசை என்கிற அளவுக்கு நிறைய செய்துள்ளார் .என் சினிமா பயணம் ‘தீப்பிடிக்க’ பாடலில் தொடங்கியது அதுமுதல் ‘தீப்பிடிக்க’ பாட்டில் நடித்த பையன் என்று அடையாளம் வந்தது. அது இன்னும் தொடர்கிறது காரணம் யுவன்..

‘சர்வம்’ படத்துக்கு பிறகு ‘யட்சன்’ படமும் பேசப்படும் .இதில்கிருஷ்ணா  புது கிருஷ்ணாவாக வருவார் கிருஷ்ணாவுடன் நடித்ததில் திருப்தி. அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார். பெங்களூரிலிருந்து வந்துள்ள தீபா சன்னதி அழகான நடிகை.இந்தப் பட அனுபவம் ஜாலியாக இருந்தது.” என்றார்.

நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் சுபா, நடிகை தீபா சன்னதி, ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் தயாரிப்பாளர் யூடிவி ஜி.தனஞ்ஜெயன் ஆகியோரும் பேசினார்கள்.

ஆடியோ சிடியை எழுத்தாளர்கள் சுபா வெளியிட யுவன் சங்கர்ராஜா பெற்றுக் கொண்டார்.