Home News

0 776

தெனிந்திய நடிகர் சங்கத்தின் 62 வது ஆண்டு பொது குழு கூட்டம் வரும் மார்ச் 20 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை மதியம் 2 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லுரி வளாகத்தில் உள்ள பெர்ட்ராம் ஹாளில் நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெறுகிறது.

புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் இது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.நடிகர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) ஆகிய அமைப்புகள் அன்றைய தினம் பொதுகுழுவிற்காக படபிடிப்புகளை ரத்து செய்து விடுமுறை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில் பழம்பெரும் நடிகர் “நடிகபூபதி” அமரர், P.U.சின்னப்பா அவர்களுடைய குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்துதல் ,அவரது நுற்றாண்டு விழா வீடியோ மற்றும் நடிகர் சங்கம் செயல்பாடுகள் பற்றிய வீடியோ தொகுப்பும் திரையிடப்படும். அத்துடன் நடிகர் சங்கத்தின் டைரக்டரிவெளியிடு மற்றும் “இணையதளம்” வெளியிட்டும் நடைபெறும்.மேலும், தங்களது வாழ்கையை நாடகத்துறைக்கு அர்பணித்த பழம்பெரும் கலைஞர்களை கௌரவித்து சுவாமி சங்கரதாஸ் கலைஞர் விருதுமற்றும் பொற்கிழி வழங்கப்படுகிறது.

துணை தலைவர் கருணாஸ் 2014 – 2015 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்ய பட்ட வரவு செலவு கணக்கு அறிக்கையை சமர்பிப்பார். பொருளாளர் கார்த்தி, சங்கத்தின் எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்தும், பொது செயலாளர் விஷால், சங்கத்தின் எதிர்கால நலத்திட்டங்களை குறித்தும் விளக்கி உரையாற்ற, துனண தலைவர் பொன்வண்ணனின் நன்றி உரையுடன் கூட்டம் நிறைவு பெறுகிறது. இந்நிகழ்ச்சியில் முன்னணி நடிகர் நடிகைகள் மற்றும் நாடக கலைஞர்களும் பங்கேற்க உள்ளனர்.

உறுபினர்கள் அனைவரும் தங்களுடைய உறுப்பினர் அட்டையுடன் தவறாமல் பேரவை கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென்று நடிகர் சங்க நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

0 734

பல முன்னனி நடிகர்கள் நடித்த சுமார் 500க்கும் மேற்ப்பட்ட படங்களை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் மூலம் வெற்றிகரமாக வினியோகம் செய்த R.ரவிந்திரன் வெற்றிவேல் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்

தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும், படத்திற்கு படம் வித்தியாசமும் நிறைந்த கதாபாத்திரத்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த M.சசிகுமார் “வெற்றிவேல்” படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார்.

ஜில்லா படத்தில் இயக்குனர் நேசனிடம் உதவியாளராக பணிபுரிந்த வசந்தமணி இப்படத்தின் மூலம் கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார்.

முக்கிய வேடத்தில் பிரபு மற்றும் தம்பி ராமையா இப்படத்தில் நடிக்கின்றனர். மியா ஜார்ஜ், நிகிலா மற்றும் வர்ஷா என முன்று கதாநாயகிகளுடன் M.சசிகுமார் நடிக்கின்றார்.

காதலையும் குடும்பத்தையும் மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நகைச்சுவை, ஆக்ஷன்,செண்டிமெண்ட் என அனைத்து கலவைகளையும் கலந்து, அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம் மிகவும் ஜனரஞ்சகமான முறையில் இப்படம் எடுக்கபட்டுள்ளது.

டி இமான் படத்திற்கு இசையமைக்க, S.R.கதிர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

தஞ்சாவுர் மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படபிடிப்பு நடைபெற்றது.

தற்போது இறுதி கட்டப் பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ள வெற்றிவேல் படக்குழு, இப்படத்தின் இசை வெளியிடு வரும் மார்ச் 18 அன்று நடைபெறும் என்றும், இப்படம் மிக விரைவில் பட வெளியிடப்படும் என்றும் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்

இசை – டி இமான்

ஒளிப்பதிவு – SR. கதிர்

கலை இயக்கம் – முத்து

பாடல் வரிகள் – யுகபாரதி, மோகன்ராஜ்

நடனம் – பிருந்தா, தினேஷ்

சண்டை பயிற்சி – திலிப் சுப்புராயன்

தயாரிப்பு நிர்வாகம் – D. உதயகுமார்

இணை தயாரிப்பு – J. அப்துல்லத்திப்

தயாரிப்பு – ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் சார்பாக R. ரவிந்திரன்

கதை திரைக்கதை வசனம் இயக்கம் – வசந்தமணி

0 704

கடந்த வருடம் வெளி ஆன படங்களில் ரசிகர்களின் இதயத்தை கொள்ளை அடித்த முக்கியமான படம்’ராஜ தந்திரம் ‘. மிகவும் நேர்த்தியான படப்பிடிப்பு, இயக்கம், நடிப்பு என எல்லோராலும் பாராட்டப் பட்ட இந்தப் படம் விமர்சகர்கள் இடையே பெரிதும் பிரபலமானது. ‘ராஜ தந்திரம் ‘ என்றத் தலைப்பு ரசிகர்களை கவரும் பெரிய மந்திரம் எனலாம். இப்பொழுது அந்த தலைப்பே இரண்டாவது பாகமாக வரஇருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

அந்தப் பரவசத்தை முதல் அறிவிப்பிலேயே செய்து விட்டார் ராஜ தந்திரம் 2 படத்தின் இயக்குனர் செந்தில் வீரா சாமி. இவர் இயக்குனர் கௌதம் மேனனிடம் பயின்றவர் என்பதுக் குறிப்பிடத்தக்கது. ‘ராஜ தந்திரம்’ 2′ படத்தில் இருந்து ரசிகர்களின் ஆர்வத்தைக் கூட்ட ராஜ தந்திரம் முதல் பாகத்தில் நடித்த வீரா உட்பட மூன்று பேர் நடிக்கும் முக்கியக் காட்சியான ஒரு ஆறு நிமிட காட்சியை முன்னோட்டமாக வெளி இட்டு உள்ளனர் படக் குழுவினர்.

‘ராஜ தந்திரம் 2 படம் முந்தைய படத்திலிருக்கும் சுவாரசியம் ஒன்றுக் கூட குறையாமல், நிறையசுவாரசியம் கூடித்தான் வெளி வரும். எங்களுக்கு வலு சேர்க்க இசை ஜாம்பவான் இளைய ராஜா சார் இணைந்து இருப்பது எங்களுக்கு மிகப் பெரிய பெருமை. இந்த வருடம் வெளி வரும் என்பதையும் , தமிழ்ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு நிச்சயம் இருக்கும் எனக் கூறினார் செந்தில் வீராசாமி.

0 231

நடிகர் நரேன் முதல் படம் தொட்டு இன்றுவரை தனது படங்களை தேர்வு செய்வதில் மிக்க சிரமம் எடுத்து கூடுதல் கவனம் செலுத்தி நடிப்பவர் என பெயர் பெற்றவர். அப்படி வந்தது தான் சித்திரம் பேசுதடி,அஞ்சாதே மற்றும் முகமூடி. இதற்கு இடையில் சிறிய சறுக்கல்கள் இருந்தாலும் பெரும்பாலும் நல்ல படங்களில் பணியாற்றி தனது பணியை திறம்பட செய்பதில் நரேன் வல்லவர். சமீபத்தில் வெளியான கத்துக்குட்டி படமும் அந்த வகையே..,

இதனை தொடர்ந்து நடிகர் நரேன் தற்போது நடித்து வரும் படம் ரம். இந்தப் படத்தை பற்றி அவர் கூறியது.., ‘இதுவே நான் நடிக்கும் முதல் HORROR படம் என்பதால் பெரும் மகிழ்ச்சியுடன் இந்த படத்தில் கலந்து கொண்டேன். இந்த படத்தில் அனுபவம் வாய்ந்த நடிகர் விவேக் நடிக்கிறார் அவர் உடன் நான் நடிப்பதில் மிக்க மகழ்ச்சி அடைவதோடு பெருமையும் அடைகிறேன்.

இந்த படம் நிச்சயம் ரசிகர்களை திகில் பயத்தில் உறைய வைக்கும் அதற்கு உறுதி நிச்சயம் புதிய அனுபவத்தை இந்த படம் ரசிகர்களுக்கு வாரி வழங்கும், அனிருத் இசை அமைப்பு என்றாலே படத்துக்கு ஒரு கெத்து வந்து விடும்,அந்த வகையில் அவருடைய இசை அமைப்பில் நான் நடித்து இருப்பதில் எனக்கு பெருமையே’ என்றார்.

மசாலா படம் படத்தை தயாரித்த ஆல் வின் pictures தயாரிக்க , சாய் பாரத் இயக்க புது முகம் ஹ்ரிஷிகேஷ், ஷெட்டி, மிய ஜார்ஜ் நடிக்க அவர்களுடன் விவேக், நரேன், சஞ்சிதா ஷெட்டி ஆகியோரும் நடித்து வருகின்றனர். மிகவும் எதிர்பார்க்க படும் ‘ரம்’ ரசிகர்களை கிறு கிறுக்க வைக்கும் காட்சி அமைப்புகளை கொண்டப் படமாகும்..

0 744

உன்னோடு கா பட பிடிப்பில் அலை மோதும் ரசிகர்கள் கூட்டம்!!ஆடம்பரமான திருமணம் பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

உன்னோடு கா பட குழுவினர் சமிபத்தில் பிரம்மாண்ட திருமண காட்சியை EVP பார்க்கில் செட் அமைத்து எடுத்தனர் அந்த செட் மிகவும் அழகாகவும் மிக பிரம்மாண்டமாகவும் அமைந்து இருந்தது.பல்வேறு ரசிகர்கள் அந்த செட்டை ஒரு காட்சி பொருள் போன்று பார்த்து வருகின்றனர்.பல்வேறு நட்சத்திரங்களின் குவியல் அவர்களின் ஆர்வத்தை கூட்டியது.
இதனால் படபிடிப்பில் பெரும் பிரச்சனை நிகழ்த்து உள்ளதாக தகவல்
அங்கு வரும் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கு அடங்க வில்லையாம்.மும்பை பூக்களின் வடிவங்கள் மற்றும் கலை வண்ணமயமான அலங்காரங்கள் என்று ஒரு வண்ண கலவையாக இருக்க, அதை நேர்த்தியாக படம் பிடிக்க ஒளிப்பதிவாளர் சக்தி , நிச்சயம் ஆடை வடிவமைப்பாளர் ரம்யா, டான்ஸ் மாஸ்டர் கல்யாண் மற்றும் கலை இயக்குனர் செந்தில் குமார் ஆகியோரும் பெரும் பங்கு வகிக்கின்றனர்.

ஆர்.கே. இயக்க அபிராமி மெகா மால் சார்பில் நல்லமை ராமநாதன் தயாரிக்க நெடுஞ்சாலை ஆரி நாயகனாக நடிக்க அவருக்கு இணையாக டார்லிங் 2 மாயா நடிக்கிறார். பால சரவணன் – மிஷா கோசல்ஜோடி அவர்களுக்கு இணையான முக்கியக் கதா பாத்திரங்களில் நடித்து உள்ளனர்.’நட்சத்திர நடிகர்கள் பிரபு, ஊர்வசி, ஆகியோருடன் தென்னவன்,மன்சூர் அலிகான், மனோ பாலா, இலங்கை ரஞ்சனி, சுப்பு பஞ்சு, சண்முக சுந்தரம்,சாம்ஸ், ராஜா சிங் மற்றும் பலர் நடிக்கும் ‘உன்னோடு கா’ படத்தின் கதையை இயற்றி இருப்பவர் திரைத்துறை வர்த்தகத்தில் கோலோச்சும் அபிராமி ராமநாதன் ஆவார்.

0 800

தமிழ் திரையுலகில் கடந்த 12 வருடங்களாக இர்பான் பணியாற்றி வருகிறார்.சின்ன துறையில் துவங்கி தற்போதுவெள்ளித்திரை என பல வருட உழைப்பிற்கு பிறகு அவர் வந்து நிற்கும் கரைதான் ‘ஆகம்’.

அவரது திரை பயணத்தில் சிறந்த இடத்தை பிடித்து தரப்போகும் ஆகம் படம் வருகின்ற மார்ச் 18 வெள்ளி அன்று திரைக்கு வரஇருக்கிறது இந்த படம் மறைந்த முன்னால் ஜனாதிபதி அப்துல் காலம் அவரின் கனவு 2020 பற்றிய படம் என படத்தின் நாயகன்இர்பான் கூறுகிறார்.

வரலாற்றில் மார்ச் 18 மிக முக்கிய தினம் காரணம் காந்தி ஜி வெள்ளைக்காரானை எதிர்த்து

போர் கொடி தூக்கி உலகை திரும்பி பார்க்க வைத்த தினம் அந்த தினத்தில் ஆகம் படம் வெளியாக உள்ளது அதுவும் சமூகபிரச்சனையை கையில் எடுத்து கொண்டு வெளியாக இருக்கும் இப்படம் அப்துல் காலம் அவர்களின் இந்தியா வல்லரசு கனவுபற்றிய படம் என்று குறிப்பிட்டு இருப்பதால் இந்த படத்தை பற்றிய ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் பெருகிவருகிறது.

‘ நம் நாட்டில் ஒரு முக்கிய நெருக்கடியாக மாறியுள்ளது வேலை ஊழல் மற்றும் மூளை வடிகால், இதை அடிப்படையாகக்கொண்ட ஒரு சமூக திரில்லர் படமே ஆகம் நான் இந்த படத்தில் சமூக பொறுப்புணர்வுள்ள நபராக நடித்து உள்ளேன்வளர்ந்துவரும் நடிகனான நான் இந்தப் படத்தில் . நான் என் வயதை மீறிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளேன் அதே சமயத்தில் அதுபடத்தின் கதையை பாதிக்காத வண்ணம் நடித்து உள்ளேன் .என்னை அவ்வாறே இய்யகுனர் வேலை வாங்கி உள்ளார் என்றார்படத்தின் நாயகன் இர்பான் .

இயக்குனர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் ஆகம் படத்தை மிகவும் புதுமையாக யாரும் எதிர்பார்க்காத

திருப்பங்கள் உடன் எடுத்து உள்ளார் சிறந்த திரைக்கதை உடன் என்னை பார்க்க வந்தார் இயக்குனர் அவ்வாறேபடத்தையும் இயக்கினார் என்றும் கூறினார் படத்தின் நாயகன் கதைதான் எனவும் குறிப்பிட்டார் .

“Aaagam – தற்கால சமூகத்தில் இளையவர்கள் முன் இருக்கும் நெருக்கடியே கதை

இந்திய நாட்டின் இளையவர்களின் மூளையை சர்வதேச நாட்டு கம்பெனிகள் எவ்வாறு விலைக்கு வாங்கி அடிமைபடுத்துகின்றனர் என்பதே கதை ஆகம் படத்திற்கு ஜில் ஜங் ஜக் புகழ் விஷால் சந்திர சேகர் இசை அமைத்து உள்ளார் படத்தைகோடீஸ்வர ராஜ் ஹேமா ராஜ் தயாரித்து உள்ளனர்.

0 802

நடிகர் கார்த்தி நாகர்ஜுனா தமன்னா நடிக்கும் படம் தோழா இந்த படத்தின் இசைவெளியீடு சமிபத்தில் நடந்தது அதை அனைவரும் அறிவர் படத்தின் பாடல்கள்அனைத்தும் வெகுவாக ரசிகர்களை கவர்ந்து உள்ளது இதனால் படத்தின்இசையமைப்பாளர் கோபி சுந்தர் சந்தோசத்தின் உச்சியில் உள்ளார்.

இசையின் அழகே அதை ரசிக்க கூடிய ரசிகர்கள் அடையும் சந்தோசத்தின் அளவை பொறுத்தே அமையும் அந்த வகையில் கோபி சுந்தர் இசை அமைத்த அனைத்து பாடல்களும் ரசிகர்களால் வெகுவாக ரசிக்க பட்டு கொண்டாப்பட்ட பாடல்கள்கள் தான் இசைக்கு மட்டும் தான் மொழி தேவை இல்லை, எந்த மொழியாக இருந்தாலும் அனைவரையும் கவரும் படி இருந்தால் நெஞ்சில் நிறைவதுதான் இசை.

இசை அமைப்பாளர் கோபி சுந்தர் மலையாள உலகின் பெரும் நேசிக்க படும் இசை அமைப்பாளர் அவர் இசை அமைத்த பாடல்கள் பெரிதும் ரசிகர்களை கவர்ந்தது.
இசை அமைப்பாளர் கோபி சுந்தர், தன் மொழி தாண்டி மற்ற மொழி காதலர்களையும் தன் பாடலை ரசிக்க வைக்கும் திறம் பெற்றவர் தற்போது வெளியாகி இருக்கும் தோழா பாடல்களும் அந்த வகையை சேர்ந்தவையே குத்து,காதல்,சோகம் என அனைத்து இடத்திலும் ஆட்டம் போடுபவர் இசை அமைப்பாளர் கோபி சுந்தர் மேலும்தோழா படத்தில் அனிருத் பாடிய பாடல் அனைவரையும் வெகுவாக கவர்ந்துஉள்ளது கார்த்தி தமன்னா நடித்து உள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா மாற்று திறனாளியாக நடித்து உள்ளார்.

0 819

ராஜா மந்திரி’ படம் ஒரு குடும்ப படம் காதல், நட்பு, நகைச்சுவை, பாசம், உணர்ச்சி, கோபம் என அனைத்தையும் கொண்ட படம் “ராஜ மந்திரி”.

ஒவ்வொரு சாதாரண ஆண்கள் மற்றும் பெண்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் காதல், உறவுகள், நட்பு, அழகானநினைவுகள் கொண்ட தொகுப்பே ராஜா மந்திரி படம் ராஜா மந்திரி படம் ஒரு சுத்தமான கிராம படம் கிராமத்தில்வாழும் ஒரு குடும்பம் அவர்களை சுற்றி இருக்கும் சுற்று சுழல் என படம் முழுக்க குடும்ப பின்னைணியை கொண்டஉருவான படம்.

ராஜா மந்திரி படத்தில் தேவையான நகைச்சுவை, காதல், சண்டை, சந்தோசம் என அனைத்தையும் கலந்து ஒருசிறந்த குடும்ப படமாக இயக்குனர் உஷா கிருஷ்ணன் இயக்கயுள்ளார் இயக்குனர் உஷா கிருஷ்ணன் பிரபல இயக்குனர்சுசீந்திரன் அவர்களின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது பாண்டிய நாடு ஜீவா போன்ற வெற்றி படங்களில் இவர்பணியாற்றி உள்ளார்.

படத்தின் நாயகன் மெட்ராஸ் புகழ் கலையரசன். நல்ல நடிகர் எனும் அங்கீகாரத்துடன் டார்லிங் 2, கபாலி எனமுக்கியமான் படங்களை எதிர் நோக்கி வரும் இவருக்கு ‘ராஜா மந்திரி’ ஒரு மைல் கல் படமாக இருக்கும் எனக்கணிக்கப் படுகிறது. காளி வெங்கட் படத்தில் இன்னொரு நாயகன் என்றே சொல்லலாம். இவரது கதாப் பாத்திரம்நமது வாழ்வில் நாம் சந்திக்கும் அன்றாட ஒரு மனிதனின் கதாப் பாத்திரமாக இருக்கும்.

இவர்கள் இருவரும் நடித்து உள்ளதால் படத்தின் எதிர் பார்ப்பு வெகுவாக உயர்ந்து உள்ளது. பால சரவணன் வயிறுகுலுங்க சிரிக்க வைக்கும் ஒரு முக்கிய நகை சுவை வேடத்தில் நடித்து வருகிறார். நாடோடிகள் கோபால், சரவணாசக்தி, காயல் பெரேரா, சூப்பர் குட் சுப்பிரமணி, வைஷாலி, ரவி, ராஜா பாண்டி, ஆனந்தி போன்ற திறமையானகலைஞர்களுடன் இந்த படம் உருவாகி உள்ளது.

20 க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷாலினி இந்த படத்தில் முக்கிய பங்குயாற்றி உள்ளார்இதுவே அவர் கதாநாயகியாக நடிக்கும் முதல் படம். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க பி ஜி முத்தையா படம்பிடிக்க வி மதியழகன் தயாரிக்க படம் வெகுவாக வளர்ந்து வருகிறது.

இந்த படத்தை மதியழகன் மற்றும் ரம்யா ஆகியோர் தயாரித்து உள்ளார். பல் வேறுப் பட்ட படங்களை விநியோகம்செய்யும் ஆரா சினிமாஸ் இந்தப் படத்தையும் வெளி இட உள்ளனர். படம் சம்மந்தப் பட்ட அனைத்து வேலைகளும்முடிவடைந்து படம்வெளி வரத் தயாராக உள்ளது.

0 826

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ஜெய் நடித்து வெளிவர இருக்கும் புகழ் படம் வருகின்ற மார்ச் 18 அன்று படம் வெளிவர இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் மணிமாறன் அரசியல் சாயம் பூசி எடுத்து உள்ளார் என்றே சொல்லலாம் இந்த படத்தின் கரு அரசியல் இளையவர்களின் சக்தி எவ்வாறு இருக்கிறது என்பதே ஆகும்

ஒரு சில சிறந்த நிகழ்வுகள் வரலாற்றில் தொடர்ந்து ஒரே தினத்தில் நடந்து கொண்டு தான் இருக்கிறது “மார்ச் 18” 94 வருடம் பின்பு பார்த்தால் இதே தினத்தில் தேச தந்தை மகாத்மா காந்தி பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போர் கோடி உயர்த்த உலகமே அதிர்ந்து போனது அன்று அதுவும் மார்ச் 18 அதே போல அரசியலில் இளையவர்களின் சக்தி முக்கியத்துவம் போன்ற முக்கிய அம்சங்களை கொண்ட படம் வெளியாவது இந்த வருட மார்ச் 18 ஆகா வரலாற்றில் சில நிகழ்வுகள் ஒரு சேர நடந்து நம்மை வியப்படைய செய்கிறது

சமகால இளைஞர்கள் சமுதாய தேவைகளை நோக்கி ஆர்வம் காட்டுவது மற்றும் நீதியை அடையும் வரை அயராது தங்கள் குரலை எழுப்புவது இது போன்ற கதை ஓட்டத்துடன் காதல்,மகழ்ச்சி,அதிஷ்டம் என இது போன்ற மசாலா தூவி அனைவரையும் கவரும் வண்ணம் புகழ் படம் இருக்கும் என இயக்குனர் மணிமாறன் குறிப்பிட்டுள்ளார்

தற்போது தமிழகத்தில் தேர்தல் சூடு பிடித்து வருகிறது இந்த பருவத்தில் அரசியலில் இளைஞர்களின் ஈடுபாடு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற வலுவான கருத்தை புகழ் படம் தாங்கி வருகிறது
அனைவரையும் கவரும் வண்ணம் கமர்சியல் கலந்த அரசியல் படமாக இருக்கும் என புகழ் பட குழுவினர் கூறியுள்ளனர்

திரைப்பட இயக்குனர் மணிமாறன் புகழ் படத்தை பற்றி கூறும்போது ஒரு இளைஞர் பற்றிய கற்பனை கதையே புகழ், அந்த இளைஞன் வசிக்கும் இடத்திற்கு அருகே உள்ள விளையாட்டு மைதானமே படத்தின் முக்கிய இடம் அந்த விளையாட்டு மைதானமும் அவரது வாழ்க்கையும் ஒருங்கிணைந்த படமே “புகழ்”

அரசியல் ரீதியான அச்சுறுத்தல் இளைஞர்களின் மகிழ்ச்சியை எவ்வாறு கெடுக்கும் என்பதே படத்தின் போக்கு இந்த கார சாரமான அரசியல் பின் புலம் கொண்ட படத்தை ஒரு சிறந்த பொழுது போக்கு படமாக எடுத்து உள்ளேன் என்றார்.

0 846

சில்வர்லைன் பிலிம் பேக்டரி பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “கருடா “ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். படத்தில் காஜலுக்கு கோவை மாவட்ட பெண் வேடம்..இந்த மாதிரி கதாபாத்திரத்தில் இவர் நடிப்பது இதுவே முதன் முறை.

வில்லனாக மகேஷ் மஞ்சுரேகர் நடிக்கிறார். இவர் ஹிந்தியில் பிரபல இயக்குனர், நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. வாஸ்தவ், ஆஸ்திவா, குருஷேத்ரா, நிடான், பிதா உட்பட 23 படங்கள் இயக்கி உள்ளார். அத்துடன் தபாங், காண்டே வாண்டட், ஸ்லம் டாக் மில்லியனர், ரெடி போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். ஏராளமான விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், கருணாஸ் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம்.நாதன்

இசை – கிரிநந்த்

கலை – மாயா பாண்டி

நடனம் – ஷோபி

ஸ்டன்ட் – அனல் அரசு

எடிட்டிங் – ஆண்டனி

தயாரிப்பு நிர்வாகம் – A.வெங்கட்

தயாரிப்பு – சில்வர்லைன் பிலிம்பேக்டரி.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – திரு. இவர் இயக்கும் 5 வது படம் இது. “ கருடா “ படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 1 ம் தேதி சென்னையில் துவங்குகிறது. ஸ்ரீபெரும்புதூர் அருகே 100 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்து அதில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப் பட்டு படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

சென்னையை அடுத்து பொள்ளாச்சி, கோவை, அகமதாபாத், லக்னோ, ஆகிய இடங்களிலும், பெரும்பகுதி படப்பிடிப்பு அரபு நாடுகளிலும் நடைபெற உள்ளது. பரபரப்பான ஆக்ஷன் படமாக “ கருடா “ உருவாகிறது.