Home News

0 528

தற்போது தங்கமகன் சம்பந்தமான இன்னொரு செய்தியும் கசிந்துள்ளது. படத்தில் தனுஷ் மற்றும் பிரிட்டீஷ் அழகி எமி ஜாக்சனுக்கு இடையே அப்படி ஒரு கெமிஸ்ட்ரி வேலை செய்திருக்கிறதாம். படத்தின் யதார்த்தத்தை காட்ட சில இடங்களில் முத்தக்காட்சி வைத்தார்களாம், அதுவும் லிப் லாக் காட்சிகளாம், இதேபோல் இரண்டாம் பாதியில் சமந்தாவுடனும் இந்த மாதிரி காட்சிகள் வருகிறதாம். ஆனால் படத்தை சென்சார் குழுவினர் பார்த்தபிறகு எமிஜாக்சன் முத்தக்காட்சிகளை நீக்கிவிட்டால் படத்திற்கு யு சான்றிதழ் தருகிறோம் என்று கூறினார்களாம்.

என்ன செய்வது என்று தெரியாமல் தனுஷ் – எமி ஜாக்சன் லிப் லாக் காட்சிகளை நீக்கிவிட்டாராம். ஆனால் சமந்தாவுடனும் தனுஷுக்கு முத்தக்காட்சி இருக்கையில் அதை மட்டும் ஏன் நிக்க சொல்லவில்லை என்று பெரும் குழப்பம் இருக்கிறதாம். ஒருவேளை அந்த காட்சிகளை கலையுணர்வோடு எடுத்திருப்பார்போல. படத்தை பார்த்தால் புரியும்…

எப்படியும் வரும் வெள்ளி தனுஷ் ரசிகர்களுக்கு பெரிய விருந்து காத்திருக்கிறது என்றுதான் சொல்லனும்…

0 752

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய திரைப்பட வரலாறில் மிகப்பெரிய படமான கருதப்படும் சூப்பர்ஸ்டார் ரஜனியின் நடிப்பில் இயக்குனர் ஷங்கரின் 2.0 திரைப்படத்தின் படபிடிப்பு இன்று துவங்கியது. இப்படம் 2010ம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் – ஷங்கர் கூட்டணியில் வெளிவந்த எந்திரன் படத்தின் 2ம் பாகம்.

2.0 படத்தின் துவக்க விழா பிரம்மாண்டமான முறையில் அரங்கேற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால் சமீபத்தில் தமிழகத்தில் பெய்த வரலாறு காணாத மழையினாலும், வெள்ளத்தாலும் மக்கள் அவதிக்குள்ளானதை கருத்தில் கொண்டு இவ்விழா கைவிடப்பட்டது.

பெரும் பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இப்படத்தை லைகா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. 2.0 படத்திற்காக பிரபல ஹாலிவுட் திரைப்படங்களான ஜுராஸிக்பார்க், ஐயர்ன் மேன் உள்ளிட்ட படங்களுக்கு பணிபுரிந்த லீகசி எபக்ட்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு இன்று படபிடிப்பில் கலந்து கொண்டனர்.

இப்படத்தின் மற்றொரு சிறப்பம்சம் யாதெனில், முதல் முறையாக பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இயக்குனர் ஷங்கருடன் இணைகிறார்.

இப்படத்தின் துவக்க விழாவை இன்று மிகவும் எளிய முறையில் 2.0 படக்குழுவினர் கொண்டாடினர். இவ்விழாவில் லைகா குழுமத்தின் தலைவர் சுபாஸ் கரன், இயக்குனர் ஷங்கர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான், ஏமி ஜாக்சன், ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா, கலை இயக்குனர் முத்துராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் இப்படத்தில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமாரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

0 437

ஃபோம் தயாரிப்புகளில் 1999 முதல் நம்பகமான பெயர் பெற்று முன்னணி வகிக்கும் ஸ்ரீராம் போம்ஸ் நிறுவனம், தமிழ்நாடு, கேரளா அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளுக்கு ஃபோம் வழங்கி வரும் நிறுவனமாகும்.

இந்த ஸ்ரீராம் ஃபோம்ஸ் நிறுவனம் 2011-ல் இஸ்ரோ எனப்படும் ISRO-வின், அதாவது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் அங்கமான திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் (VSSC) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

அதன் படி இந்தியாவில் வடிவமைத்து உருவாக்கி ஏவப்படும் பிஎஸ் எல்வி, ஜி எஸ் எல்வி ராக்கெட்டுகளுக்குள் இருக்கும் க்ரையோ ஜெனிக் என்ஜின் பகுதிக்குள் வெப்பத்தை பராமரிக்க உதவும் சாதனங்களை தயாரித்து வழங்கும். இவை பாலி யுரித்தேன் என்கிற மூலப் பொருள் கொண்டு உருவாக்கப் படுபவை.ஏற்கெனவே செய்துள்ள அந்த ஒப்பந்தத்தின்படி ராக்கெட் உள்கட்டமைப்பில் இருக்கும் இந்த ஒரு சாதனத்தின் முதல்கட்ட ஒப்படைப்பு விழா சென்னை மணலி அருகே உள்ள பெரியமாத்தூரில் நேற்று 12. 12. 2015-ல் நடைபெற்றது.

ஸ்ரீராம் ஃபோம்ஸ் (பி) லிட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு.ப.முத்துக்குமார் ஒப்படைத்து வழங்க திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் கே.சிவன் பெற்றுக் கொண்டார்.

விழாவில்அனைவரையும் வரவேற்றுப் பேசிய ஸ்ரீராம் ஃபோம்ஸ் நிர்வாக இயக்குநர் ப.முத்துக்குமார் தன் உரையில்

”.டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் என்றால் ராக்கெட் நினைவு வரும். கலாம் அவர்களையும் ராக்கெட்டையும் பிரித்துப் பார்க்க முடியாது.அவர் பலருக்கு ஊக்கமும் தூண்டுதலுமாக இருந்து முன்னேற்றம் கொடுத்தவர். இங்கே விழாவில் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்துள்ள டாக்டர் கே:சிவன் அவர்கள் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக பல சாதனைகளைச் செய்திருப்பவர். டாக்டர் அப்துல்கலாம் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்,அவருடன் இணைந்து பல பணிகளைச் செய்தவர்.திருவனந்தபுரம் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக அவரது பங்களிப்பு பெரிய அளவிலானது, பெருமைக்குரியது.

இங்கே நிறைய பேர் இருக்கிறீர்கள்.கலாம் அவர்களின் தொடர்ச்சியாக அவர் வழியில் இந்தக் கூட்டத்திலிருந்து இன்னொரு அப்துல்கலாம் வர வேண்டும். அவரது கனவும் லட்சியமும் நம்மை வழிநடத்திச் செல்லும் . நமது தேசத்துக்கான இந்தப் பெருமை மிகுந்த பயணத்தில் பங்கேற்பதில் ஸ்ரீராம் ஃபோம்ஸ் நிறுவனம் பெருமை கொள்கிறது” என்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் கே:சிவன் பேசும்போது
”இந்த விழாவில் கலந்து கொண்டதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஸ்ரீராம் ஃபோம்ஸ் நிறுவனம் சக்தி வாய்ந்த ஊழியர் குழுவைக் கொண்டுள்ளது. இவர்கள் ராக்கெட் வடிவமைப்புப் ப ணியில் தொடர்ந்து இணைந்து பங்களிப்பு செய்ய வேண்டும். அதற்கான தகுதியோடுதான் இந்த நிறுவனம் வளர்ந்திருக்கிறது. அதற்குரிய நம்பிக்கையைப் பெற்றுள்ளது. இந்த கூட்டுறவு தொடர வேண்டும் ‘மேக் இன் இண்டியா’ என்கிற குறிக்கோளுக்கு ஒரு சிறந்த உதாரணமாக இந்நிகழ்வு இருக்கும். ” என்றார்.

விழாவில் ஸ்ரீராம் ஃபோம்ஸ் பொது மேலாளர் பிரபுராமும் பேசினார். ஸ்ரீராம் ஃபோம்ஸ் (பி) லிட் நிறுவனத்தின் ஊழியர்களும் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிபவர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

இந்திய ராக்கெட் வடிவமைப்பில் இப்படிப் பங்கேற்க இந்தியாவின் பல முன்னணி நிறுவனங்களும் போட்டியிட்ட நிலையில் நம் தமிழ்நாட்டு நிறுவனம் தகுதி பெற்றுத் தரமுத்திரை பெற்றுள்ளது என்பது நம் தமிழகத்துக்குப் பெருமை எனலாம்.

0 456

வருடா வருடம் கோலகலமாக தொடங்கி அனைத்து கார்நாடக இசை ரசிகர்களை கவர்ந்த லஷ்மன் ஸ்ருதியின் சென்னையில் திருவையாறு தனது 11ஆம் ஆண்டு சென்னையில் திருவையாறு இசை திருவிழாவை இந்த மாதம் 18ம் தேதி தொடங்கவுள்ளது. இவ்விழாவை பிரபல நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குனர் திரு. பிரபுதேவா அவர்கள் தொடங்கி வைக்கிறார்.

இவ்வாண்டு நடக்கவுள்ள இந்த இசை திருவிழாவின் சிறப்பம்சங்களை பற்றி விவரிக்க இன்று (14 டிசம்பர்) பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பல அம்சங்கள் பற்றி விவரித்த இந்த சந்திப்பில் கர்நாடக இசை ஜாம்பவாங்கள் கலந்து கொண்டனர்.

சமீபத்தில் சென்னையில் பெய்த கனமழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண தொகைகளை கர்நாடக இசை கலைஞர்கள் அறிவித்தனர்.

நடன கலைஞர் மற்றும் பிரபல நடிகை ஷோபனா 1 லட்சமும், கர்நாடக இசை கலைஞர் கே என் சசிகிரன் 1 லட்சமும், கர்நாட்டிகா சங்கம் சார்பாக 1 லட்சமும், மற்ற கர்நாடக இசை கலைஞர்கள் அனைவரும் சேர்ந்து 3 லட்சமும் வழங்கினர்.

மேலும் சென்னையில் திருவையாறு இசை விழாவின் மற்றுமொரு சிறப்பாக கருதப்படும் உணவுத்திருவிழாவில் உலக அதிசங்களில் ஒன்றாக கருதப்படும் ஈபில் டவரை ஒற்றாற் போல் 30 அடி உயரமான முருங்கைகாய் கோபுரத்தை பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜ் துவங்கி வைக்கிறார்.
இந்த நிவாரண தொகை ரோட்டரி இண்டர்நேஷனல் டிஸ்டிர்க்ட் – 3230 மூலம் வழங்கப்படும் என்று கூறினர்.

0 520

நவீன உலகின் அடையாளங்களில் ஒன்று சிகையலங்காரம். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சிகையலங்காரம் உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது. எல்விஸ் ப்ரெஸ்லி, மைக்கேல் ஜாக்ஸன், லியானர்டோ டி காப்ரியோ என மேற்குலக பிரபலங்களின் சிகையலங்காரம் நம்மை வியக்க வைத்துள்ளன. அத்தகைய சிகையலங்காரஙகள் நமக்கு கிடைக்காதா என்று எண்ணி ஏங்கிய வேளையில் தான், தமிழ்நாட்டில் தடம் பதித்தது உலகின் பாரம்பரிய மிக்க சிகையலங்கார சேவை மையமான டோனி அண்ட் கய்.

இங்கிலாந்தை பூர்விமாக கொண்ட இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் ஏற்கனவே பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது தனது புத்தம் புதிய கிளையை சென்னை – 600 080 கொரட்டூர் கிழக்கு அவென்யூ சாலை, டிஎன்எச்பி பிளாட்ஸ், கதவு எண் எல்-16, லீட்ஸ் டவர், வுபா லவுஞ்ச் என்ற முகவரியில் திறந்துள்ளது டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் …இதனை விஜய் டிவியின் அசத்தல் நிகழ்ச்சி தொகுப்பாளரான திருமதி.திவ்யதர்ஷிணி திறந்து வைத்தார்.

டோனி அண்ட் கய் நவீன சிகையலங்கார மையத்தின் திறப்பு விழாவுக்கு பின்னர் நடைபெற்ற வண்ணமிகு பேஷன் ஷோ இத்தனை சிகையலங்காரங்களா என்று வியக்குமளவுக்கு பார்வையாளர்களை கவர்ந்தது.. கண்ணை கவரும் உடைகளுடனும், கருத்தை கவரும் நவீன சிகையலங்காரத்துடனும் அழகிகளும், இளைஞர்களும் மேடையில் வலம் வந்தனர். இந்த பேஷன் ஷோவுக்கு சிகரம் வைத்தார்போல் இருந்தது சிறப்பு அழைப்பாளரான திவ்யதர்ஷிணியின் பங்கேற்பு.

நவீன நாகரீகத்தை தீர்மானிக்கும் விஷயத்தில் தங்களது டோனி அண்ட் கய் ஷோரூம் விளங்குவதாக பெருமிதம் கொள்கிறார் டோனி அண்ட் கய் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் திரு சாம்பால். கொரட்டூர் டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் ஷோரூமின் ப்ரான்சைஸ்-ஆன திரு. மாதவன் மற்றும் வினோத் கிருஷ்ணா கூறுகையில், 1500 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் மையத்தில் இருபாலருக்கான மையம், பெண்களுக்கான தனிப்பிரிவு, நீராவியுடன் கூடிய ஸ்பாக்கள், மணமக்கள் மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கான 1 தனியறை போன்றவை இதன் சிறப்பம்சங்கள் ஆகும் என்கின்றனர்.

உங்களை நீங்களே புதியவராக உணர வேண்டுமா.. வாருங்கள், மாற்றத்தை உணருங்கள்..
டோனி அண்ட் கய்-யில்..
மேலதிக விவரங்களுக்கு 044 42811511 / 044 42811911 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

0 1103

பல வருடங்களாக தமிழ் திரை படங்களில் கொடிக் கட்டி பறக்கும் நயன்தாரா Sahodarikku Sasneyam (To sister,with love) என்ற அமைப்பின் மூலமாக பிரபல மலையாள பத்திரிகை ஒன்றின் வாயிலாக சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்க பட்ட பெண்களுக்கு சில பிரத்தியேகமான உதவி பொருட்களை சென்னைக்கு அனுப்பி உள்ளார். 1000 பேருக்கு உதவக் கூடிய இந்த உதவி பொருட்கள் , உடைகள் மற்றும் சுகாதார சம்மந்தப் பட்ட பொருட்களாகும்.

0 932

சில படங்கள் அறிவிக்கப்படும் போதே பெரும் எதிபார்பை ஏற்படுத்தும். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் அறிமுகமாவதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘தனி ஒருவன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மோகன் ராஜா இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

மோகன் ராஜாவின் தனி ஒருவன் படத்தின் மாபெரும் வெட்ற்றியை இவரின் அடுத்த படம் யார் ஹிரோ என்று பல எதிர்பார்புகள் இருந்தது இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தேர்வாகியுலார்,

‘ எங்களுடைய நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக உருவாக இருக்கும் இந்தப்படத்தில் இயக்குனர் மோகன் ராஜாவுடன் பணியாற்றுவதில் எங்களுக்கு பெருமை. அவர் இயக்கிய படங்கள் எல்லாமே ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை.இதுவே ஒரு சிறந்தஇயக்குனருக்கு தர சான்றிதழ் என சொல்லலாம். குடும்பத்தோடு படம் பார்க்க ரசிகர்களை திரை அரங்குகளுக்கு சுண்டி இழுப்பதிலும் , வந்த ரசிகர்களை திருப்திப்படுத்துவதிலும் அவருக்கென்று ஒருதனி தன்மை உண்டு.ஒரு தயாரிப்பு நிறுவனமாக எங்களுடைய 24 AM STUDIOS நிறுவனமும், நாயகனாகசிவகார்த்திகேயனும் இயக்குனர் மோகன் ராஜாவுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறோம் ‘ என்றார் தயாரிப்பாளர் R.D.ராஜா.

0 1091

வரும் பொங்கள் அன்று விஷால் நடித்திருக்கும் கதகலி, இயகுனர் பாலா இயகத்தில் சசிகுமர் நடிக்கும் தாரதப்பட்டை மற்றும் சுந்தர.c இயக்கும் அரன்மனை-2 படம் வெளிவருகிறது என்ற தகவல் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவரவிருக்கும் கெத்து திரைப்டம் இந்த பொங்கள் ரெசில் கலந்து கொல்கிறது என்பது குறிபிடத்தக்கது, இந்த படத்தில் ஸ்டாலினுக்கு ஜேடியாக நடிக்கிறார். ரெட் ஜெய்ன்ட் முவிஸ் தயரிக்கும் இந்த படத்தை இயக்குனர் கே.திருகுமரன் இயக்குகிறார்.

மேலும் இப்படம் இந்த மதம் அதாவது டிசம்பர் 24 ஆம் தேதி இப்படம் வெளியிடுவதாக உருதி செய்யபட்ட நிலையில் சில சந்தர்ப சூல்னிலையால் வெளியிட்டு தேதியை தல்லிவைத்ததாக தகவல்கள் வந்துள்ளது.

0 828

இயக்குனர் ஷங்கர் தனது படங்களில் எந்த நடிகையையும் ஒரு படத்திற்கு மேல் நடிக்க வைத்ததில்லை என்பது குறிப்பிடதக்கது. ஆனால் இப்போது லண்டன் நடிகை எமிஜாக்சனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதுவும் அடுத்தடுத்து கிடைத்திருக்கிறது. ஷங்கர் இயக்கிய ஐ படத்தில் நடித்தவர் அடுத்து எந்திரன்-2 படத்திலும் நடிக்கிறார் என்பது தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில், விஜய், தனுஷ் என்று பெரிய நடிகர்களுடனும் நடித்து வருவதால் கோலிவுட்டில் முன்னணி நடிகையாகி விட்டார் எமிஜாக்சன்.

மேலும், எந்திரன்-2 படத்தில் அவர் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதாகத்தான் இதுவரை கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது விசாரித்தால், ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்பதே இன்னும் முடிவாகவில்லையாம்.

சில முன்னணி பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். அதோடு இந்த படத்தில் எமிஜாக்சன் ரோபோ வேடத்தில் நடிக்கிறாராம். அதற்கான ரிகர்சல் சம்பந்தமாகத்தான் சமீபத்தில் பங்கேற்று இருக்கிறார். இதற்கிடையே எந்திரன்-2 படத்தில் ஏற்கனவே ஹாலிவுட் நடிகர் அர்னால்டு நடிப்பதாக உறுதி செய்யப்பட்ட நிலையில், இப்போது விஜய்யின் கத்தி படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் நீல்நிதின் முகேசும் வில்லனாக நடிப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது