Home News

0 29


ஓவியம் மட்டுமல்ல மிரட்டுவதிலும் நான் கில்லாடி என்று நிரூபித்திருக்கிறார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்

ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தன் திறமையை ஓவியங்கள் மூலம் நிரூபித்த இவர், தற்போதைய நடிப்பிலும் நிரூபித்திருக்கிறார்.
இவர் ஏற்கனவே ஆந்திராமெஸ் படத்தில் வில்லனாக நடித்து மக்களிடத்தில் மிகவும் பிரபலமானார். தற்போது கதிர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜடா’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு வில்லனின் கதாபாத்திரம் பார்க்கும் ரசிகர்கள் கோபப்பட வைப்பதுதான். அந்த கோபத்தை பார்ப்பவர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறார் ஏ.பி.ஸ்ரீதர். படத்தின் இவருடைய அறிமுக காட்சியிலும் சரி, மகனுக்காக பழிவாங்கும் காட்சியிலும் சரி பார்வையிலேயே மிரட்டி இருக்கிறார். 
பக்கம் பக்கமாக வசனங்கள் பேசி கவர நினைப்பவர்கள் பலர் இருப்பினும், பார்வையாலயே மிரட்ட தனித்தன்மை வேண்டும். அந்த தனித்தன்மையை பெற்று இருக்கிறார் ஏ.பி.ஸ்ரீதர். இவரது மிரட்டலான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. ஓவியம் மட்டுமல்ல நடிப்பிலும் நான் கில்லாடி என்பதை தற்போது நிரூபித்திருக்கிறார் ஸ்ரீதர்.
இப்படம் குறித்து ஏ.பி.ஸ்ரீதர் கூறும்போது, ‘அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியிருக்கும் ஜடா திரைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் நடிக்க என்னை அணுகினார்கள். இப்பொழுது படத்தை பார்த்த அனைவரும் என்னை பாராட்டுகிறார்கள். என்னுடைய நடிப்புக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் படக்குழுவினருக்கே சேரும். பொயட் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கதிர் கால்பந்தாட்ட வீரராக நடித்திருக்கிறார். சாம்.சி.எஸ். இசையமைக்க, சூர்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிச்சர்ட் படத்தொகுப்பை கவனித்துள்ளார். இவர்களின் கூட்டு முயற்சியால் என்னுடைய நடிப்பு கவனம் பெற்றிருக்கிறது. தற்போது இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார்.

0 21

J.N. சினிமாஸ் தயாரிப்பில் ‘ஜீவி’ புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது

‘ஜீவி’ புகழ் வெற்றி நாயகனாக நடிக்க ஜெ.என். சினிமாஸ் சார்பில் பார்த்தசாரதி தயாரிக்கும் புதிய படத்தை குரு ராமானுஜம் இயக்குகிறார். இவர் கழுகு படத்தின் இயக்குனர் சத்ய சிவாவிடம் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்தவர். இப்படத்தை சமூக விழிப்புணர்வு மற்றும் கமர்ஷியல், சென்டிமென்ட் கலந்த திரில்லர் படமாக இயக்குகிறார். வெற்றி நாயகனாக நடிக்கிறார் இவருக்கு ஜோடியாக தியா மயூரிகா நடிக்கிறார். குணச்சித்திர பாத்திரத்தில் மாரிமுத்து நடிக்க, கே.ஜி.எஃப் படத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திர ராஜு இப்படத்திலும் வில்லனாக நடிக்கிறார். மற்ற நடிகர்-நடிகைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் பூஜையுடன்

(06.12.2019) துவங்கியது.

படத்தைப் பற்றிய மற்ற விபரங்களை தயாரிப்பு நிறுவனம் பின்னர் அறிவிக்கும்.

தயாரிப்பு – பார்த்தசாரதி இயக்கம் – குரு ராமானுஜம்
வசனம் – சி.முருகேஷ் பாபு
புகைப்படம் – பாஸ்கர்
ஒளிப்பதிவு – எஸ்.ராமலிங்கம் படத்தொகுப்பு – ராஜா முகமது (பருத்தி வீரன் & சுப்ரமணியபுரம்)
கலை இயக்கம் – எஸ்.பத்மநாபன்
சண்டை பயிற்சி – சுதேஷ்
தயாரிப்பு உருவாக்கம் – அபிமன்னன் எம்.ஏ.
தயாரிப்பு நிறுவனம் – ஜெ.என். சினிமாஸ்

0 36

தமிழ் திரையுலகில் எப்போதுமே வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்தால், படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகும். அப்படியொரு வெற்றிக் கூட்டணியை மீண்டும் இணைந்து படம் பண்ணவுள்ளார்கள். ஆம், அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்தக் கூட்டணி மீது நம்பிக்கை வைத்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார் ‘ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்’ விஜய ராகவேந்திரா. ‘செக்கச்சிவந்த வானம்’, ‘தடம்’ ஆகிய படங்களின் வெற்றியால் சக்சஸ் நாயகனாக வலம் வரும் அருண் விஜய், இந்தப் படத்துக்காக தற்போது தயாராகி வருகிறார். இன்னும் ஒருசில நாட்களில் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கவுள்ளது. படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்கள் தேர்வில் தற்போது தீவிரமாக பணிபுரிந்து வருகிறார் இயக்குநர் அறிவழகன்.அருண் விஜய்யை வைத்து ‘குற்றம் 23’ என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய அறிவழகன், இம்முறை ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை இயக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் இந்தப் படம் தயாராகிறது. அறிவழகன் இயக்கத்தில் உருவான படங்களில் இது தான் பொருட்செலவில் அதிகம். சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
இந்தப் படம் தொடர்பாக அறிவழகன், “‘குற்றம் 23’ படத்துக்குப் பிறகு மீண்டும் அருண் விஜய் சாரை இயக்கவிருப்பதில் மகிழ்ச்சி. தமிழ் திரையுலகில் இதுவரை வந்திராத புதுமையான ஒரு ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் கதை. எனது முந்தைய படங்களை விட இதில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம். கண்டிப்பாக அது பேசப்படும். ரெஜினா நாயகியாக நடிக்கவுள்ளார். மீதமுள்ள நடிகர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அறிவழகனின் நெருங்கிய நண்பராக ராஜசேகர் ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ளார். இவர் ‘ஆர்யா 2’, ‘ஆரஞ்ச்’ உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் பணிபுரிந்தவர். தற்போது இசையமைப்பில் தனிமுத்திரை பதித்து வரும் சாம் சி.எஸ் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். ‘குற்றம் 23’ படத்துக்கு கலை இயக்குநராக பணிபுரிந்த சக்தி வெங்கட்ராஜ் இதிலும் கலை இயக்குநராக ஒப்பந்தமாகியுள்ளார்.டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கி 2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக இந்தப் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

0 31

It looks like the promising-handsome star Harish Kalyan and Filmmaker Sanjay Bharathi have struck a jackpot even prior to the release of their Friday release “Dhanusu Raasi Neyargalae”. Yup! The duo will be teaming up for yet another film to be bankrolled by producer Dr G. Dhananjayan of Creative Entertainers and Distributors. The news comes officially from the desk of producer as he brings up some surprising facts about the genre of this film.

“Yes, Creative Entertainers and Distributors will be producing a film with Harish Kalyan in lead, directed by Sanjay Bharathi, which will be a supernatural action entertainer,” says Dr. G Dhananjayan, who continues to add that he was completely engrossed with the trailer of Dhanusu Raasi Neyargalae. “Having been a part of industry for more than a decade, I have seen very few filmmakers, who have mastered the pulse of audiences. Apparently, Sanjay Bharathi has equipped himself with these traits, which I believe will definitely escalate him with jet-speed progression. After witnessing, the phenomenal response towards the teaser, trailer and songs of DRN across the youngsters, I casually rang up Sanjay to appreciate and congratulate him. Gradually, he shared a gist, which instantly grabbed my attention. As he was narrating me the plot and lead characterization, I couldn’t imagine anyone else other than Harish Kalyan, where I just suggested why not him. Surprisingly, Sanjay too admitted the same and we decided to proceed with it. We will start shooting the film by the Second quarter of 2020 and will be soon making official announcements on the title, cast and crew along with release date.”

Producer G Dhananjayan is involved in the production of Sibiraj’s ‘Kabadadaari’ for Creative Entertainers and Distributors and will be making his directorial debut with an interesting star-cast, which will have the announcements made soon.

0 34

எடிட்டர் மோகன் எழுதிய  ‘வேலியற்ற வேதம்’ மற்றும் அவரது மனைவி வரலட்சுமி மோகன் எழுதிய ‘தனிமனிதன்’ மற்றும் ஆகிய நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலங்கள் வாழ்த்தி பேசியதாவது:-
மோகன் ராஜா, ஜெயம் ரவி இணைந்து வரவேற்ப்புரை நிகழ்த்தினார்கள்.

ஜெயம்’ ரவி பேசும்போது,

எங்கள் குடும்பத்திற்கு இன்று முக்கியமான நாள். எங்கள் பெற்றோருடைய வாழ்க்கையின் சாராம்சத்தைக் கொண்டாடும் விழா. பாக்யராஜ் அவர்கள் எங்கள் குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறை உள்ள மனிதர். எங்கள் குடும்பத்தையும், என்னையும் என் அண்ணாவையும் சினிமாவில் வெற்றிபெற வைத்து மகிழ்ந்த மனிதர். என்னை முதன்முதலாக கண்டித்தவர் பிரபு சார் தான். அண்ணா கூறியதுபோல் என்னுடைய முதல் இயக்குநரும் அர்ஜுன் சார் தான். எனக்கு என்னையே அடையாளம் காண்பித்தவர் டைரக்டர் ஜனநாதன் தான். சமத்துவத்தைப் பற்றி நான் கற்றுக் கொண்டதும் அவரிடம் தான். நான் முதன்முதலாக பணியாற்றியது தாணுவிடம் சாரிடம் தான்.

நடிகர் அர்ஜுன் பேசும்போது,

அப்பா எடிட்டர், அம்மா இரட்டை எம்.ஏ., பட்டம் பெற்றவர், மூத்த மகன் இயக்குநர், இளைய மகன் நடிகர், மகன் பல் மருத்துவர் என்ற சிறந்த குடும்பத்தின் சிறப்பான விழா. எடிட்டர் மோகன் படத்தில் நான் நடித்த தெலுங்கு படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதற்காக பேசிய ஊதியத்தொகைக்கும் மேலாக எனக்கு கொடுத்தார். அவரின் பண்பைக் கண்டு நான் வியந்தேன் என்றார்.

வரலட்சுமி மோகன் பேசும்போது,

இவ்விழா நூல் வெளியீட்டு விழா மாதிரியே தெரியவில்லை. அனைவரும் எங்கள் குடும்பத்தினர்களாகவே கலந்து கொண்டார்கள்.

எங்களுக்கு திருமணமானதும் என் கணவர் என்னிடம் பேசிய முதல் வார்த்தை, நீ என்னுடைய இரண்டாவது மனைவி என்றார். அவருக்கு தொழில் தான் முதல் மனைவி. நாங்கள் எடுத்த முதல் படம் ‘ஜெயம்’ என்பதால் ஜெயம் குடும்பத்தார் என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

மேலும் இந்நிகழ்ச்சியில்  நடிகர் ராஜேஷ், தயாரிப்பாளர் AL. அழகப்பன், டைரக்டர் மனோஜ்குமார், பாண்டியராஜன், SP.ஜனனாதன், கலைசெல்வி  புலியூர் தேசிகன், கமலா வள்ளியப்பன், ரவிவர்மா, பாடலாசிரியர் காமகோடியன், பா.விஜய் , விவேகா ஆகியோரும் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியாக, எடிட்டர் மோகன் எழுதிய ‘தனிமனிதன்’ புத்தகத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட நடிகர் அர்ஜுன் பெற்றுக் கொண்டார். வரலட்சுமி மோகன் எழுதிய ‘வேலியற்ற வேதம்’ புத்தகத்தை ஷோபா சந்திரசேகர் வெளியிட நடிகர் பிரபு பெற்றுக் கொண்டார்.

தயாரிப்பாளர் எஸ்.தாணு பேசும்போது,

‘தனிமனிதன்’ புத்தகமும், ‘வேலியற்ற வேதம்’ புத்தகமும் இவர்களின் குடும்பத்திற்கு காலத்தால் அழியாத பெட்டகமாகவும், கருவூலமாகவும் அமையும் என்றார்.

0 55

தம்பி இசை வெளியீடு !

கார்த்தி, ஜோதிகா அக்கா- தம்பியாக முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் தம்பி. பாபநாசம் ரீமேக் மூலம் தமிழில் அறிமுகமான இயக்குநர் ஜீத்து ஜோசப் முதல்முறையாக இயக்கும் நேரடி தமிழ்ப்படம். சௌகார் ஜானகி, சத்யராஜ், நிகிலா விமல்,  ரமேஷ் திலக் என பிரமிக்கும் நடிகர் பட்டாளம் நடித்திருக்கும் படம்  இப்படி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பின் உச்சத்தை விதைத்திருக்கும் “தம்பி” படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது.

கார்த்தி பேசியதாவது…

இரண்டு வருட உழைப்பு இந்தப்படத்துக்கு பின்னாடி இருக்கு. சத்யராஜ் சார் வராட்டி இந்தப்படமே வேண்டாம்னு சொன்னேன். ஒவ்வொன்னா சேர்த்து இந்தப்படத்த உருவாக்க இரண்டு வருஷம் ஆகியிருக்கு. இயக்குநர் ஏற்கனவே மோகன்லால், கமல் சார் படமெல்லாம் பண்ணிட்டு வந்திருக்கார். எனக்கு பயமா இருந்தது. ஆனா எதிர்பார்த்தற்கு எதிரா அவ்வளவு இயல்பா, நட்பா இருந்தார். அவருக்கு என்ன வேணுங்கறதுல ரொம்பவும் தெளிவா இருந்தார். அப்புறம் அண்ணி கூட நடிச்சது எனக்கு ஸ்பெஷல். அவங்க ஒரு கேரக்டருக்கு எடுக்கிற சிரத்தை, உழைப்பு பிரமிப்பு தருது. இப்படி அண்ணி கூட ஒரு படம் நடிப்பேன்னு நான் நினைக்கவே இல்ல. நடிச்சது சந்தோஷம். சத்யாராஜ் மாமா இல்லாட்டி இந்தப்படமே வேண்டாம்னு சொன்னேன். அவ்வளவு முக்கியமான கேரகடர். சினிமாவில் ஒழுக்கம் என்பதை அவர்கிட்ட கத்துக்கிட்டேன். இன்னும் அவர் தொழில் மேல காட்டுற மரியாதை பெரிசு. கட்டப்பால்லாம் இன்னக்கி பண்ண இந்தியாவுல ஆள் இல்லை. இளவரசு, ரமேஷ் திலக் ரெண்டு பேரையும் நீங்க ரசிப்பீங்க. கோவிந்த் வசந்தா அலட்டிக்காம, கஷ்டமே படாம ரொமப ஈஸியா மியூஸிக் பண்ணிடுறாரு, அவருக்கு அது வரம். படம் பார்த்தேன் மியூஸுக் அவ்வளவு நல்லா வந்திருக்கு. ஒரு நல்ல நடிப்ப இன்னும் அழகு கூட்டி காட்டறது மியூஸிக் தான். கைதிக்கு அப்புறம் இந்தப்படம் வர்றது எனக்கு சந்தோஷம். குடும்பத்தோட எல்லாரும் ரசிக்கிற மாதிரியான படம். எல்லோருக்கும் நன்றி
சூர்யா பேசியது…

ரொம்ப நெருக்கமான படைப்பு. சத்யராஜ் மாமா, ஜோ, கார்த்தி, சூரஜ் எல்லாரும் இணைஞ்சிருக்க படம். ஒரு சின்ன கரு இவ்வளவு பெரிய படமா மாறியிருக்கிறது ஆச்சர்யமா இருக்கு. கார்த்தி இப்படி படங்கள் நம்பி பண்றது பெருமையா இருக்கு. கார்த்தி ஜோ இரண்டு பேருமே சிறந்த  நடிகர்கள். கிளிசரின் போடமா என்னால அழவே முடியாது “நந்தா” படத்தில மட்டும் தான் என்னால அப்படி நடிக்க முடிஞ்சது . ஆனா கார்த்தி கிளிசரின் போடாம அத அநாயசமா பண்ணிடுறாரு. கைதி வரைக்குமே அத நான் பார்த்துட்டு இருக்கேன் ரொம்ப ஈஸியா பண்ணிடுறார். ஜீத்து ஜோசப் பாகுபலி அளவு பிரமாண்ட படத்திற்கு இணையா பாபநாசம் படத்தை இந்தியா முழுக்க கொண்டு போனவர். அவர் இந்தப்படம் செஞ்சிருக்கறது சந்தோஷம். கோவிந்த் வசந்தா நான் சந்திச்சப்போ எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கார். படத்தில் பாடல்கள் எல்லாம் அருமையா வந்திருக்கு. படமும் அழகா இருக்கு. எல்லோருக்கும் வாழ்த்துக்கள். இறுதியாக ரசிகர்களுக்கு உறவுகளுக்கு நாம் கார்த்தி எவ்வளவு அவசரம் இருந்தாலும் அதிகாலை பயணம் செய்வதை தவிர்த்துடுங்க, 3 மணி, 4 மணிக்கு பயணம் செய்வதால் சில தவறான சம்பவங்கள் நடந்து விடுகிறது. நாம நினவுகள் இல்லாம நம்ம கட்டுப்பாடு மீறி சில விசயங்கள் நடந்துடுது. தயவு செய்து அத தவிர்த்துடுங்க. எல்லோருக்கும் நன்றி

இயக்குநர் ஜீது ஜோசப் பேசியதாவது…

பாபநாசம் என்னோட முதல் தமிழ்ப்படம் அதுக்கப்புறம் நல்ல கதைக்காக வெயிட் பண்ணினேன். சூரஜ் இந்த ஐடியா சொன்னார்.  ஜோதிகா கார்த்தி அக்கா தம்பியா நடிக்கிற ஐடியா இருக்குனு சொன்னவுடனே இத மிஸ் பண்ணக்கூடாதுனு ஒத்துகிட்டேன். சத்யாராஜ், சௌகார் ஜானகி மேடம் இந்தப்படத்துக்கு மிகப்பெரிய பலம். கோவிந்த் வசந்தா அற்புதமாமான இசை தந்திருக்கார். இது ஒரு டீம் ஒர்க் எல்லோரும் அவங்களோட பெஸ்ட் கொடுத்திருக்காங்க. இது குடும்பங்கள் ரசிக்கிற கமர்ஷியல் படம். எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.


0 48

With a much spectacular announcement, Mookuthi Amman directed by RJ Balaji had created an instant sensation. Apparently, the film was launched this morning (November 29, 2019) with a ritual ceremony at Bhagavathi Amman Temple in Kanyakumari followed by commencement of shooting at Nagercoil.  The first leg of shooting will be held here at Nagercoil and Nayanthara will be joining the crew sooner.

Grish Gopalakrishnan who shot to fame for his musical score in “Aval” and music director of Nayanthara’s upcoming film “Netrikann” is composing music for Mookuthi Amman. Dinesh Krishnan of Thaanaa Serndha Koottam fame is handling cinematography and Stunt Silva is choreographing stunts. Selva RK of Pariyerum Perumal fame is taking care of editing and costumes are designed by Divya Nagarajan and Anu Vardhan with Vijayakumar as the art director.

RJ Balaji, who will be sharing the screen space with Nayanthara, has written the story, screenplay and dialogues for ‘Mookuthi Amman’ apart from directing it along with NJ Saravanan. Following the hat-trick success of LKG, Comali and Puppy, Dr. Ishari K Ganesh is producing this film for Vels Film International.

0 39

The next film of 2D Entertainment, a production house known for consistently delivering quality films that succeed at the box office, began in fine fashion today with the official launch pooja being held at actor Suriya’s Agaram Foundation in Valasaravakkam.

Several celebrities including actor Sivakumar, 2D Entertainment Founder and Producer Suriya, Karthi, Sasikumar, Jyotika, Samuthirakani, Soori, Kalaiyarasan, music director D Imman and the CEO of 2D Entertainment Rajasekar Karpoorasundarapandian  participated in the grand event, that took place at around 10.45 this morning.

The film, which, sources say, will have a very unique story, will feature Jyotika, Sasikumar and Samudrakani in the lead and will also feature Soori and Kalaiyarasan in important roles.

Set in a rural backdrop, this film will emphasise the strength of relationships.

Written and directed by Era Saravanan, the film will have cinematographer-cum-director Velraj handling the camera.

D Imman, whose music is a hot favourite of youngsters today, will score the music for the film. The film will be edited by one of Tamil film industry’s important editors, S.Ruben. Mujibur Rahman will be the art director of the film, which is to be shot in Pudukottai and Tanjore districts. The list of guests who have attended are Directors Pandiraj, Kalyaan,Fredrick, SY Gowthamraj, TJ Gnanavel,        Guhan Senniapan, Producers SR Prabhu, Cinematographers Ramji Ravi Varma , Kathir and  Playback singer krish

0 45

பாபிசிம்ஹா நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு பூஜையோடு துவங்கியது!  

SRT எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து ஒரு புதியபடத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை இன்று பிரம்மாண்டமாக நடந்தேறியது. SRT எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இப்படத்தில் பாபிசிம்ஹா ஹீரோவாக நடிக்கிறார். தேர்ந்த கதைகளில் நடிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ள நடிகர்களில் பாபிசிம்ஹாவும் ஒருவர். அதனால் அவர் தலைமை பாத்திரம் ஏற்றிருக்கும் இப்படம் தரமான கன்டென்ட்டோடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாபிசிம்ஹாவிற்கு ஜோடியாக அழகான நடிகை காஷ்மீரா பர்தேஷி நடிக்கிறார்.
 இப்படத்தை எழுதி இயக்குபவர் ரமணன் புருஷோத்தமா.மிக வித்தியாசமான கதைக்களம் கையில் எடுத்துள்ளார்.
 ஒரு நல்ல கதையை ரசிகனின் மனதுக்கு நெருக்கமாக கொண்டுபோக இசை மிக முக்கியம். அந்த வகையில் தரமான இசையை வழங்க இருக்கிறார் ராஜேஷ் முருகேசன். அதிரடி சண்டைக்காட்சிகளுக்கென பெயர் பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா சண்டைப்பயிற்சியை கவனிக்கிறார். ஒளிப்பதிவு பொறுப்பை சுனில்SK ஏற்றுள்ளார்.  பேட்டை, இறைவி போன்ற படங்களுக்கு எடிட்டராக இருந்து ஜிகர்தண்டா படத்திற்கு தேசிய விருதும் பெற்றுள்ள  எடிட்டர் விவேக் ஹர்ஷன் இப்படத்தின் எடிட்டராக பொறுப்பேற்றுள்ளார். அழகான ஆடை வடிவமைப்பால் அசத்த இருக்கிறார் காஸ்ட்யூம் டிசைனர் நந்தினிNK.

படத்தின் மொத்த புரொடக்ஷன் விசயங்களையும்  தன் பொறுப்பில் ஏற்றுள்ளார் நாகராஜ்RK . ஒரு படத்தின் பூஜையில் இருந்து ரிலீஸ் வரையில் பப்ளிசிட்டி மிக முக்கியம். அப்பொறுப்பை டூனிஜான் ஏற்றுள்ளார்.

இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு பிரம்மாண்டமாக துவங்கியது. இதன் துவக்க விழாவில் படக்குழுவினர் உட்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இப்படம் பெரும் பொருட்செலவில்  சிறப்பாக எடுக்கப்பட இருக்கிறது.

0 51

Huge expectations for Vaibhav – Venkat Prabhu starrer “Lock Up”
On behalf of Shvedh – A Nitin Sathyaa Production House, “Lock Up” is bankrolled by Nitin Sathyaa. Vaibhav plays the hero while Vani Bhojan is the female lead. Venkat Prabhu plays a role with completely different shades. SG Charles, who worked with filmmaker Mohanraja is making his debut as director.
Vaibhav – Venkat Prabhu duo associated with hilarious entertainers in the past, team up for a serious outing in “Lock Up”. The teaser released recently grabbed the attention of all. It has crossed over 1 Million views.
The cast includes Eswari Rao, Poorna in key roles besides a galaxy of artistes. Music is by Arrol Corelli and cinematography by Santhanam Sekar.