Home Movie Reviews

0 138

இயக்குனர் வெற்றி செல்வன் தன் பங்கை மிகவும் உணர்ந்து தமிழ் ரசிகர்களின் எண்ணத்தை புரிந்து அதே போல பிராசாந்த்க்கு என்ன தேவையோ அதை புரிந்து ரசிக்க வைத்துள்ளார்.

இந்த படத்தில் பிரசாந்த்,சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்த்ராஜ், அசுதோஷ் ராணா, ஆத்மா பேட்ரிக்,சாயாஜி சிண்டே மற்றும் பலர் நடிப்பில் பன்னீர்செல்வம் ஒளிப்பதிவில் ஜெய் கணேஷ் இசையில் வெற்றி செல்வன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் ஜானி

பிரசாந்த், பிரபு, ஆனந்த்ராஜ், அசுதோஷ் ராணா, ஆத்மா பேட்ரிக் உள்ளிட்ட 5 பேரும் ஒரு குழுவாக செயல்படுகிறார்கள். இவர்கள் ஒவ்வொருத்தரும் சட்டவிரோத தொழில்களில் ஈடுபட்டு குறுக்கு வழியில் சம்பாதித்து ஒரு சூதாட்ட கிளப்பை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கொச்சி போலீசிடம் சிக்கிய கடத்தல் பொருள் பாதி விலைக்கு வந்திருப்பதாக பிரபுவுக்கு தகவல் கிடைக்கிறது. ஐந்து பேரும் சேர்ந்து பணம் போட்டு அந்த பொருளை வாங்க திட்டமிட்டு ஆத்மா பேட்ரிக்கிடம் பணத்தை கொடுத்து அனுப்புகின்றனர்.

பணத்தை எடுத்துச் செல்லும் ஆத்மாவிடம் இருந்து பிரசாந்த் பணத்தை திருடிவிடுகிறார். இதற்கிடையே பிரசாந்த்தின் காதலியான சஞ்சிதா ஷெட்டியை அசுதோஷ் ராணா தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். தனது அப்பா, வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் தன்னை அசுதோஷ் ராணா கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், அவரிடம் இருந்து தன்னை காப்பாற்றும்படியும் சஞ்சிதா, பிரசாந்த்திடம் கேட்கிறார்.

கடைசியில், பிரசாந்த் தனது கூட்டாளிகளிடம் சிக்கினாரா? சஞ்சிதா ஷெட்டியை காப்பாற்றினாரா? அந்த பணம் என்னவானது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் பிரசாந்த் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது பார்முக்கு வந்திருக்கிறார். காதல், ஆக்ஷன் என படத்தில் வித்தியாசமான பிரசாந்த்தை பார்க்க முடிகிறது. சஞ்சிதா ஷெட்டி அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். திருப்பங்களுடன் வரும் பிரபுவின் கதாபாத்திரம், காமெடி கலந்த வில்லத்தமான ஆனந்த்ராஜ் கதாபாத்திரம் மற்றும் அசுதோஷ் ராணா, ஆத்மா பேட்ரிக் வில்லத்தமான கதாபாத்திரங்களும் சிறப்பாக வந்துள்ளது. ஷாயாஜி ஷிண்டே போலீஸ் அதிகாரியாக சிறப்பாக நடித்திருக்கிறார்.

2007-ம் ஆண்டு இந்தியில் வெளியான திரைப்படம் ‘ஜானி கட்டார்’ படத்தை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் பி.வெற்றிசெல்வன். ஆக்‌ஷன், அதிரடி, காமெடி, காதல் என கதைக்கு ஏற்ப படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக நகர்கிறது. எனினும் படத்தின் தேவையில்லாத சில காட்சிகளை மட்டும் தவிர்த்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.

ஜெய்கணேஷின் பின்னணி இசை படத்திற்கு பலம். எம்.வி. பன்னீர் செல்வம் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. Rank 3.5/5

0 161

30-க்கு மேற்பட்ட என்கவுண்ட்டர் செய்துள்ள மும்பையை சேர்ந்த என்கவுன்ட்டர் ஸ்பெசலிஸ்ட் பிரில்லா போஸ் (விக்ரம் பிரபு) இவருக்கும் மருத்துவரான அவரது தாய்க்கும், காதலி மைதிலி (ஹன்சிகா) இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்து தனித்தனியே வாழ்கிறார்கள். இந்நிலையில், தென் தமிழகத்தில், ராமேஸ்வரத்தில் 15 வயது பெண் கற்பழிப்பு தொடர்பான வழக்கில் கைதானவரை விசாரிக்க விக்ரம் பிரபுவுக்கு அழைப்பு வருகிறது.

இந்த விசாரிப்புதான் படத்தின் மிக பெரிய திருப்புமுனையாக அமைகிறது துப்பாக்கி முனை படத்திற்கு அற்புதமான திரைகதை மூலம் படத்துக்கு பலம் சேர்த்து இருக்கிறார் இயக்குனர் எம்.எஸ்.பாஸ்கர் மகள் அபிராமி பள்ளிக்கூடம் படிக்கும் பெண் அதே ஊரின் மிக பெரியதொழில் அதிபர் வேல ராமமூர்த்தி மகன் கற்பழித்து அப்பாவி வெளி மாநிலத்தின் இளைஞன் மீது பழி விழுகிறது இந்த மர்ம முடிச்சை விக்ரம் பிரபு எப்படி அவிழ்க்கிறார் என்பது தான் கதை

ஆக்ஷன் காட்சிகளில் விக்ரம் பிரபு சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளது. படத்தில் எம்எஸ் பாஸ்கர் சிறப்பாக நடித்துள்ளனர். பாடல் ஒன்றில் மும்பை மற்றும் ராமேஸ்வரத்தை மேட்ச் செய்துள்ளது சிறப்பாக உள்ளது. படத்தின் நிறைய காட்சிகள் ராமேஸ்வரத்தில் எடுக்கப்பட்டுள்ளதால், படத்தின் கேமரா காட்சிகள் பிரமிக்க வைக்கிறது. படத்தின் எடிட்டர், சிறப்பாக தனது பணியை செய்துள்ளார்.

படத்தில் உள்ள வன்முறை காட்சிகள் மூலம் தவறு செய்ய கூடாது என்பதையும், தவறு செய்ததால் கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் என்பதை தெளிவாக காட்டியுள்ளார் இயக்குனர். தினேஷ் செல்வராஜ்.புலிக்கு பிறந்தது பூனை ஆகாது என்பதுக்கு எடுத்துகாட்டு தான் இந்த படத்தின் இயக்குனர் ஆம் அன்னக்கிளி செல்வராஜ் மகன் தான் இந்த படத்தின் இயக்குனர் தினேஷ் செல்வராஜ் அதோடு மணிரத்தினத்தின் மாண்புமிகு மாணவன் சொல்லவா வேணும் அருமையான திரில்லர்வுடன் இன்றைய மக்களுக்கு தேவையான கருத்தையும் கூறியிருக்கிறார்.

படத்தின் மிக பெரிய பலம் என்றால் ஒளிப்பதிவாளர் ராசாமதி ஒவ்வொரு காட்சியும் கண்ணில் ஒற்றிகொள்ளும் அளவுக்கு காட்சிகள் இதுவரை ராமேஸ்வரம் பகுதியை இவ்வளவு அழகாக காண்பித்தது இல்லை அதோடு கதைக்கும் இயக்குனர் எண்ணத்துக்கும் ஏற்ப ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்ததை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இவரின் தயாரிப்பில் மேலும் ஒரு வைரம் என்று தான் சொல்லணும் இசை – எல்.வி.முத்துகணேஷ், ஒளிப்பதிவு – ராசாமாதி, கலை – மாயபாண்டி, படத்தொகுப்பு – புவன் ஸ்ரீனிவாஸ், பாடல்கள் – புலவர் புதுமைப்பித்தன், பா. விஜய், சண்டைபயிற்சி – அன்பறிவ், தயாரிப்பாளர் – கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பு – வி கிரியேஷான்ஸ், இயக்கம் – தினேஷ் செல்வராஜ்.

0 120

சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம்  “ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “ இதில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாகஆஷ்னாசவேரிநடிக்கிறார். மற்றும்ஆனந்தராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன்  போலீஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.முதல் முறையாக ஆங்கில நடிகை “ மியா ராய் “ கன்பைட் காஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

விமல் ‘அந்த’ விஷயத்தில் மச்சக்கார ஆசாமி. அழகானபெண்ணோ அம்சமான ஆன்டியோ எவர் கிடைத்தாலும் பவர் காட்டுகிறார்.இவருக்கு ஒரு லவ்வர்; அவரும் இவரிடம் காட்டுக் காட்டென HOTடுகிறார். இது ஒரு டிராக்கில் நிகழும் சதை. மன்னிக்கவும் கதை.

விமலும் சிங்கம்புலியும் தாங்கள் பார்க்கும் வேலையில் சம்பளம் பத்தவில்லை என்பதால் சோப்பு, சீப்பு, கண்ணாடி, காண்டம் என கண்டதையும் களவாண்டு பிழைப்பை ஓட்டுகிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த ஊர் இன்ஸ்பெக்டரின் பெரிய வீட்டிலிருந்து ஐந்து லட்சம், சின்ன வீட்டிலிருந்து ஐந்து லட்சம் என கனமாக கைவைத்து கண்டத்தில் சிக்குகிறார்கள். இவர்களை சப் இன்ஸ்பெக்டர் பூர்ணா துரத்தித் துரத்தி வெளுக்கிறார். இது கதையின் இன்னொரு டிராக்…

விமல் லண்டனில் வேலைக்குப் போகிறார். அந்த ஊரில் ஒரு மாடர்ன் மங்காத்தா விமலின் ஆண்மையை யானை பலத்தோடு சுருட்டிச் சுவைத்து சக்கையாய் பிழிகிறது. ‘ஆழம் பாத்தது போதும், யப்பா சாமி ஆளைவிடு’ என நம்மூருக்கு ஓடிவருகிற விமலை துரத்திக் கொண்டே வருகிறது அந்த லண்டன் லட்டு. கதையில் இதுவும் ஒரு டிராக்…

விமலும் சிங்கம் புலியும் எதையெதையோ திருடியதில் அந்த ஊரின் பெரிய தாதா ஆனந்த்ராஜின் ஒரு கோடி மதிப்புள்ள போதைப் பொருள் ஒன்று அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் கைக்கு வந்து சேர்கிறது. அதை கைப்பற்ற ஆனந்த்ராஜ் அன்ட் கோ வெறியாய்த் துரத்துவது கதையின் மற்றொரு டிராக்…

இத்தனை கதையிருந்தும் படம் பார்த்து முடித்தபின் ‘படத்துல கதையே இல்லையே’ என்ற ஃபீலிங் வருகிற அளவுக்கு திரைக்கதை அமைத்திருப்பது இயக்குநரின் சாமர்த்தியம்!

ஒரே அடியில் பத்து பேரை பந்தாடுவது, கன்டெய்னரை காலால் எத்தி காயலான் கடைச் சரக்காக்குவது போன்ற ஹீரோயிஸத்துக்கெல்லாம் வாய்ப்பில்லாத கேரக்டர் விமலுக்கு. அதற்குப் பதிலாக பிளேபாயாக புகுந்து விளையாடியிருக்கிறார். ஆஷ்னா சவேரியுடனாக காதல் சவாரியும் அந்த ஒற்றைப் பாட்டும் அநியாயத்துக்கு அசைவம்!

0 178

அழகிய கிராமத்து காதல் கதைகளம் சிறந்த நட்சத்திரங்கள் அழகிய நாயகி இவையனைத்தும் இருந்தும் திரைகதை பழசு

குடும்ப கவுரவத்தால் வாழ்வை தொலைக்கும் ஒரு காதல் ஜோடியின் கதையே சீமத்துரை.

ஊரில் உள்ள காதல் ஜோடிகளை சேர்த்து வைப்பது தான் நாயகன் கீதன் மற்றும் நண்பர்களின் தலையாயப்பணி. தெருத்தெருவாக சென்று கருவாடு விற்று மகனை கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கிறார் நாயகனின் தாய் விஜி சந்திரசேகர். பக்கத்து ஊரின் பெரிய தலைக்கட்டு குடும்பமான மணியார் வீட்டு செல்லக்கிளி நாயகி வர்ஷா பொல்லம்மா. கீதன் படிக்கும் அதே கல்லூரியில் முதலாமாண்டு மாணவி. வர்ஷாவை கண்டதும் காதல் வயப்படுகிறார் கீதன். வர்ஷாவை துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஒருகட்டத்தில் வர்ஷாவும் கீதனை காதலிக்க, விஷயம் நாயகியின் வீட்டிற்கு தெரிந்து பிரச்சினையாகிறது. இதற்கிடையே வர்ஷாவின் தாய்மாமன் காசிராஜன், இவர்களுக்கு வில்லனாக மாறுகிறார். காதலர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதே கதை.

இந்த படத்தை பொறுத்த வரைக்கும் ஹீரோவாக நடித்திருக்கும் கீதன், நாயகி வர்ஷா, விஜி சந்திரசேகர், வில்லன் காசிராஜன் என அனைவருமே தங்கள் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள். ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் கீதன், துறுதுறு நடிப்பின் மூலம் தனது பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். உருண்டு, பிரண்டு, அடி வாங்கி, உதை வாங்கி மிகுந்த சிரத்தை எடுத்து நடித்திருக்கிறார். பாவாடை தாவணி, தலையில் கனகாம்பரப்பூ, வீட்டில் டிசர்ட் பாவடை என பக்கத்து வீட்டு பெண் போலவே காட்சி அளிக்கிறார் வர்ஷா. பாடல் காட்சிகளில் கொள்ளை அழகாக இருக்கிறார். அதேசமயம் நடிக்கவும் செய்திருக்கிறார்.

படத்தில் நடித்துள்ள சீனியர் விஜி சந்திரசேகர் மட்டும் தான். அதனாலே தன்னுடைய பாத்திரத்தை அவ்வளவு நேர்த்தியாக செய்திருக்கிறார். முந்தானையில் முடிஞ்சு வெச்சிருக்கும் விபூதி, இடுப்பில் சொருகி வைக்கும் மணிபர்ஸ் என கச்சிதமான கிராமத்து தாய்யாக வருகிறார். வில்லனாக நடித்திருக்கும் காசிராஜன், ஆதேஷ் பாலா உள்பட படத்தில் வரும் அனைவருமே தங்கள் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக இசையமைப்பாளர் ஜோஸ் ஃபிராங்கிளினிற்கு தனி பாராட்டுகள். படத்தில் வரும் பாடல்கள் எல்லாமே அற்புதமாக இருக்கின்றன. பின்னணி இசையும் சிறப்பாகவே இருக்கிறது. சண்டைக் காட்சிகளை மிக தத்ரூபமாக செய்திருக்கிறார் டேஞ்சர் மணி. கேமராமேன் திருஞானசம்பந்தம், எடிட்டர் வீரசெந்தில் ராஜ் ஆகியோரும் தங்களால் முடிந்த அளவிற்கு உழைப்பை தந்திருக்கிறார்கள்.

படத்தின் முக்கிய பிரச்சினை கதையும், திரைக்கதையும் தான். ஏற்கனவே நாம் பார்த்து போரடித்து போன அதே பழைய கதை. திரைக்கதையிலாவது புதுமை சேர்த்திருக்கலாம். அதுவும் இல்லை என்பதால், நாயகனோ, நாயகியோ அடுத்து பேசப்போகும் வசனத்தை கூட பார்வையாளர்களால் மிக எளிதாக யூகித்துவிட முடிகிறது.

தஞ்சை மாவட்டம் தான் படத்தின் கதை களம். ஆனால் ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு மாவட்ட மொழியில் பேசுகிறார்கள். ஆனால் நாயகன், நாயகியின் வீடு, டீக்கடை என படத்தில் வரும் இடங்கள் எல்லாமே யதார்த்தமாக இருக்கின்றன.

படம் எந்த காலத்தில் எடுக்கப்பட்டது என்பதே புரியவில்லை. ஒரு சில காட்சிகளில் சமீபத்தில் வெளியான படங்களின் போஸ்டர்கள் பின்னணியில் இடம்பெறுகின்றன. ஆனால் ஒருவர் கையில் கூட போன் இல்லை. குக்கிராமத்தில் கூட ஆன்ட்ராய்டு போன் ஆதிக்கம் செலுத்தி வரும் இன்றைய காலத்தில் போன் இல்லாமல் ஒரு ஊரே இருப்பது நம்பும்படியாகவா இருக்கிறது இயக்குனரே. அதுவும் அந்த க்ளைமாக்ஸ் காட்சி உச்சக்கட்ட சோகம். இதில் எண்ட்கார்டில் பாரதியின் பாடல் வரிகள் வேறு.

0 233

தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் சர்கார் முருகதாஸ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி இன்று முதல் உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது.

பாதின் கதையும் சரி ஏ,ஆர் முருகதாஸ் இயக்கம் அடேகப்பா என்று சொல்லும் வியக்கும் அளவுக்கு ஒரு மிக சிறந்த படமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு காட்சியும் இயக்குனர் நம்மை பிரமிக்கவைக்கிறார். அவருக்கு மிக பெரிய பக்கபலமாக இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன்

படத்தின் கதை பகுதி எவ்வளவு தான் லீக் ஆனாலும் படத்தில் பல ட்விஸ்ட் உள்ளது அதை பார்ப்பதற்கு குறைந்தது இரண்டு முறை நாம் பார்க்கணும் அதை எல்லாம் சொன்னால் படத்தின் சுவாரிசம் குறைந்து விடும் படத்தின் மிக பெரிய பிளஸ் என்று சொன்னால் அது திரைகதை தான் அந்த அளவுக்கு சரவெடி போல விருவிருவுனு இருக்கு ஏ.ஆர் முருகதாஸ் தான் மீண்டும் ஒரு சிறந்த இயக்குனர் என்று நிருபித்துவிட்டார்

தளபதி அழகு மேலும் அழகு கண் இமைக்காமல் ரசிக்க வைக்கிறார் அவர் உடைகள் அடேங்கப்பா அருமை என்றும் பதினாறு மார்கண்டேயன் போல காட்சி அளிக்கிறார் . சண்டை காட்சிகளில் மிகவும் ரிஸ்க் எடுத்து இருக்கிறார்

படத்தின் மேலும் பலம் ராதா ரவியின் வில்லத்தனம் அப்படி ஒரு வில்லத்தனம் கதையின் வேகத்துக்கு மிக பெரிய பலமாக இருந்து இருக்கிறார், அதேபோல படத்தின் மிக பெரிய பலம் யோகிபாபு நகைசுவை தீபாவளி என்று சொல்லும் அளவுக்கு சிரிக்கவைக்கிறார்.

வரலக்ஷ்மி விஜய்யுடன் இணைந்த முதல் படம் படத்தில் அலட்டி கொள்ளாமல் மிக அழனாகன நடிப்பை கொடுத்து இருக்கிறார் இவர் பங்குக்கு மேலும் பலம் சேர்கிறார் அதேபோல கீர்த்திசுரேஷ் எப்பவும் போல நம்மை மயக்குகிறார்

முதல் பாகம் புல் ஆப் மாஸ் & terrific என்று துவக்கியுள்ளார். ”ஐ எம் ஏ கார்பரேட் கிர்மினல்” என்ற விஜய்யின் வசனம் அதிர வைக்கிறது. இந்த வசனம் மொத்தப் படத்திற்கும் அழுத்தமான வசனமாக அமைந்து இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் விஜய்க்கு மாஸ் ஹீரோ இமேஜ் கிடைத்துள்ளது. முக்கியமான சமூக செய்திகளை இந்தப் படத்தில் ரசிகர்களுக்கு விடுத்துள்ளார். அதிர வைக்கும் இசையுடன் வெளி வந்திருக்கும் இந்தப் படம் இயக்குனர் முருகதாசுக்கு மேலும் ஒரு ரத்தினம்.

படம் துவங்கியதில் இருந்து முடியும் வரை விஜய், விஜய், விஜய்…தான். பிரமிக்க வைக்கும் சண்டைக் காட்சிகள், நடனக் காட்சிகள், பறக்கும் வசனங்கள் என்று படம் அடுத்த லெவலுக்கு சென்றுள்ளது. நிச்சயமாக இந்தப் படம் பாக்ஸ் ஆபீசில் வெற்றி பெற்று, பைசா வசூலில் ஜொலிக்கும். இந்தப் படம் நன்றாக எடுக்கப்பட்டுள்ளதா என்றால் ஆமாம் என்று நூறு சதவீதம் சொல்ல வேண்டும். பவர் பேக்டு.

0 130

முதல் பாதி அஜித் ரசிகர்களுக்கான படம் போலவும் இரண்டாம் பாகம் காதல் கதையாகவும் சொல்லாவந்து இருக்கிறார் இயக்குனர். அனால் இரண்டும் சரியாக முழுமையாக சொல்லவில்லை என்பது உறுதி காரணம் காதல் கதை ரொம்ப பழசு அஜித் பற்றிய விஷயங்களும் புதுசு இல்லை அதுவும் பழசு மொத்தத்தில் அரச்ச மாவு என்று தான் சொல்லணும் முதல் பாடத்திலும் அஜித் சமந்த காட்சிகள் அழுத்தம் இல்லை இரண்டாம் பகுதியுலும் காதல் காட்சிகள் புதுசு இல்லை குறிப்பாக கிளைமாக்ஸ் .

இந்தபடத்தில்R.K.சுரேஷ.இந்துஜா,சாந்தினி,பிரபாத்,தம்பிராமையா,மாரிமுத்து,அமுதவாணன்,சங்கிலிமுருகன்,சௌந்தர்,மற்றும் பலர் நடிப்பில் நடிகர் சூரி மற்றும் விதார்த் கௌரவ தோற்றதில் வருகிறார்கள்.படத்துக்கு ஒளிப்பதிவு ஜீவன் இளையவன் இயக்கம் ராஜசேதுபதி படத்தின் வில்லன் பிரபாத் தான் படத்தின் தயாரிப்பாளர்.

மதுரையில் தீவிரமான, வெறித்தனமான, பக்தியான அஜித் ரசிகராக இருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். பில்லா படம் ரிலீசுக்கு பிறகு தனது பெயரை பில்லா பாண்டி என மாற்றிக் கொள்கிறார். அஜித்தை போற்றிப் பாடும் இவர் கட்டிட வேலை செய்து வருகிறார்.

 

இவரது முறைப்பெண் சாந்தினி தமிழரசன். ஆர்.கே.சுரேஷும், சாந்தினியும் ஒருவர் மேல் ஒருவர் பிரியமாக இருக்கிறார்கள். கட்டிட தொழிலில் வரும் பணத்தையெல்லாம் ரசிகர் மன்றத்தின் மூலம் உதவி செய்வது வருவதால் சாந்தினியை, ஆர்.கே.சுரேஷ்க்கு திருமணம் செய்து வைக்க மறுக்கிறார் மாரிமுத்து.

ஆர்.கே.சுரேஷ் காண்ட்ராக்ட் எடுத்து கட்டும் வீட்டுக்கு சொந்தக்காரரான இந்துஜாவுக்கு சுரேஷ் மீது காதல் ஏற்படுகிறது. ஆனால் ஆர்.கே.சுரேஷோ இந்துஜாவை கண்டுகொள்ளாமல், சாந்தினியையே காதலிக்கிறார்.

இந்த நிலையில், இந்துஜாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்க, அனைவர் முன்பும் இந்துஜா, தான் ஆர்.கே.சுரேஷை காதலிப்பதாக கூறுகிறார். இதற்கிடையே ஒரு விபத்தில் இந்துஜாவின் வீட்டார் அனைவரும் இறந்துவிடுகிறார்கள். இந்துஜா மனநிலை பாதிக்கப்படுகிறார்.

தனது குடும்பத்தை இழந்த இந்துஜாவை தனது பொறுப்பில் கவனிக்க ஆரம்பிக்கிறார் ஆர்.கே.சுரேஷ். இதனால் இவருக்கும், சாந்தினிக்கும் இடையே பிரிவு வருகிறது.

கடைசியில், ஆர்.கே.சுரேஷ் காதல் என்ன ஆனது? இருவரில் யாரை கரம்பிடித்தார்? இந்துஜா பழைய நிலைமைக்கு திரும்பினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

தமிழ் சினிமாவில் ஒரு நல்ல வில்லன் என்று பெயர் எடுத்த R.K.சுரேஷ் ஹீரோ பிரவேசம் அப்படி ஒன்னும் செட் ஆகவில்லை உங்கள் திறமை ஹீரோவுக்கு செட் ஆகவில்லை என்று தான் சொல்லணும் நீங்கள் வில்லனாகவே நடியுங்கள் அப்படி இல்லை என்றால் மேலும் பயிற்சி எடுத்துகொள்ளுங்கள்

சாந்தினி இந்துஜா இருவரும் தன் பங்குக்கு கொடுத்த வேலையை மிக சரியாக செய்துள்ளனர். தம்பிராமையா காமெடி கொஞ்சம் அருவியாக தான் உள்ளது பாவம் சூரி கும்பலோடு கோவிந்தா போட்டுவிட்டு செல்கிறார் விதார்த்யும் அதே அதே

0 209

இந்த படத்தில் நாயகனாக தினேஷ் நாயகியாக அதிதி மேனன் இவரின் அம்மாவாக தேவயாணி அப்பாவாக ஆனந்த் ராஜ் தினேஷ் அம்மாவாக ரேணுகா, வில்லனாக முனிஷ்காந்த், மனோபாலா, மாகநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், சாம்ஸ், மற்றும் பலர் நடிப்பில் சரவண்ணன் அபிமன்யு ஒளிப்பதிவில் ரகுநந்தன் இசையில் அறிமுக இயக்குனர் காந்தி மணிவாசகம் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் நகைசுவை படம் தான் களவாணி மாப்பிள்ளை

மிகவும் செல்வந்தர் தேவயானி. இவருக்கு பொய் சொன்னால் பிடிக்காது. இவரது அப்பா உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது கணவர் ஆனந்த் ராஜ்க்கு கார் ஓட்ட தெரியாத காரணத்தால் அப்பா இறந்து போகிறார். கார் ஓட்ட தெரியாது என்று தன்னிடம் மறைத்ததால் ஆனந்த் ராஜை ஒதுக்கி வைக்கிறார்.

தேவயானியின் ஒரே மகள் நாயகி அதிதி மேனன். இவர் கால்நடை உதவி மருத்துவராக இருக்கிறார். இவருக்கும் நாயகன் தினேஷுக்கும் ஒரு விபத்தில் பழக்கம் ஏற்படுகிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது. தினேஷுக்கு 18 வருடங்களுக்கு எந்த வண்டியும் ஓட்டக்கூடாது என்று ஜோதிடர் ஒருவர் சொல்ல, எந்த வண்டியும் ஓட்ட பழகாமல் வளர்ந்திருக்கிறார்.

தினேஷ், அதிதிமேனனின் காதல் விஷயம் தேவயானிக்கு தெரிந்து திருமண ஏற்பாடுகள் செய்கிறார்கள். கார் ஓட்ட தெரியாத காரணத்தால் கணவரை ஒதுக்கி வைத்திருக்கும் தேவயானிக்கு, தினேஷின் விஷயம் தெரிந்ததா? நாயகி அதிதி மேனனை தினேஷ் கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் தினேஷ் இப்படத்தின் நாயகனாக நடித்திருக்கிறார். காமெடியில் ஓரளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக இப்படத்தில் நடனம் சிறப்பாக ஆடியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அதிதி மேனன் அழகாக இருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

மாமியாராக நடித்திருக்கும் தேவயானி, தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். இவருக்கு கணவராக நடித்திருக்கும் ஆனந்த் ராஜுக்கும் இடையேயான காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது.

முனிஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். பல இடங்களில் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள்.

காமெடியை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் காந்தி மணிவாசகம். ஆனால் ஓரளவிற்கே காமெடி கைகொடுத்திருக்கிறது. சுவாரஸ்யமான காட்சிகள், வித்தியாசமான காட்சிகள் வைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

ரகுநந்தன் இசையில் முதல் பாடல் தாளம் போட வைக்கிறது. மற்ற பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது.

0 118

இன்றைய காலத்திற்கு ஏற்ப படம் அது மட்டும் இல்லை இன்று மக்களின் அவசியத்தையும் சொல்லி இருக்கும் படம் என்று சொன்னால் மிகையாகது இந்த படத்தை இயக்கிய இயக்குனருக்கும் சரி படத்தை தயாரித்த தயாரிப்பளருக்கும் இரு கரம் கூப்பி நன்றிகள் சொல்ல நாம் அனைவரும் கடமை பட்டு இருக்கிறோம் என்று தான் சொல்லணும் இந்த கருத்து வர்த்தக ரீதியாக எப்படி சாத்தியம் ஆகும் என்று தெரியவில்லை அதை பற்றி கவலை படமால் என் நாடு என் பிள்ளைகள் அவர்கள் இப்படி இருக்கவேண்டும் என்ற கருத்துடன் சொல்லி இருப்பது பாராட்ட வேண்டிய விஷயம்  இந்த படத்தில் விவேக்,தேவயாணி, பிரேம்குமார்,அழகம்பெருமாள்,ரிஷி,செல்முருகன்,இவர்களுடன் நம்பிக்கை நட்சத்திரங்கள் நாளைய வரலாறுகள் என்று சொல்ல கூடிய குழந்தை நட்சத்திரங்கள் பிரவீன்,ஸ்ரீஜித்,வினித்,சுகேஷ்,கிருத்திகா,தீபிகா மற்றும் பலர் நடிப்பில் கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவில் கணேஷ் சந்திரசேகரன் இசையில் விஜி இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் எழுமின்

The director V.P. Viji tackles easily on both the aspects of giving an impart knowledge of some fact, Vishwanathan and Bharathi concentrate in their child’s growth, the couple focuses, that he wants to become a champion in all competitions. In the Sundaram academy, Azhagam Perumal who is a greedy man, focuses on money and for the middle class people, it is not possible to learn martial arts apart from this situation, if they join in the academy they can’t select in the competition. As such, in a competition the couple’s son getting victory and by over excitement that his heart pumps heavily and both of them missing their child. After the tragedy the couple, fulfilling their child’s wish and starting an academy and giving martial arts to the middle class people. Now the greedy Sundaram planning to stop the growth of Vishwanathan academy and the middle class children’s too. With the mild preaching effects the story comes to an end.The film doesn’t contain glamorous sequels and unwanted excessive dialogues. The actor Vivek decent preaching and his mature acting made to like in every scene, in the mother eccentric Devayani done in a perfect way and the children’s energy levels over-the-top.

0 197

இன்றைய அரசியல்வாதிகள் அனைவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் இளைஞர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை மிக சாமர்த்தியமாக கூறியிருக்கும் படம் தான் நோட்டா படத்தின் ஆரம்ப காட்சியில் இருந்து கதை ஓட்டத்தில் பயணிக்க ஆரம்பித்து விட்டார் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் அரசிய படத்துக்கு மிக முக்கியம் திரைகதை என்பதை உணர்ந்து செயல்பட்டுள்ளார்.

இந்த படத்தில் அறிமுக நாயகனாக விஜய் தேவரகொண்டா நாயகியாக இல்லை கதை நாயகி மெஹ்ரின் பிர்சாடா சத்யராஜ், நாசர்,எம்.எஸ்.பாஸ்கர்,சஞ்சனா நடராஜன், மொட்டை ராஜேந்திரன்,யாசிகா ஆனந்த் கருணாகரன் மற்றும் பலர் நடிப்பில் சந்தான கிருஷ்ணன் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவில் சாம் CS இசையில் ஆனந்த் ஷங்கர் மற்றும் ஷான் கருப்புசாமி திரைக்கதையில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ஞாவேல்ராஜா தயாரிப்பில் வெளிவந்து இருக்கும் படம் நோட்டா

தமிழ் சினிமாவில் ஒரு முழுமையான அரசியல் படத்தைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. அந்தக் குறையை இந்தப் படத்தின் மூலம் தீர்த்து வைத்திருக்கிறார் இயக்குனர் ஆனந்த் சங்கர்.

தமிழ் சினிமாவையும், தமிழ்நாட்டு அரசியலையும் பிரிக்க முடியாது. அப்படி ஒன்றுக்கொன்று இரண்டறக் கலந்தது. இன்று இங்குள்ள முன்னணி ஹீரோக்களே நடிக்கத் தயங்கும் ஒரு கதாபாத்திரத்தில் தெலுங்கிலிருந்து ஒரு ஹீரோவை அழைத்து வந்து நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

 

தமிழ் பேசத் தெரியாத ஒரு தெலுங்கு ஹீரோ எந்தவிதமான தெலுங்கு சாயலும் இல்லாமல் தமிழை இந்த அளவிற்கு நேசித்து, பயிற்சி பெற்று, பேசி நடித்திருப்பது மிகப் பெரிய விஷயம். அதற்காகவே படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டாவுக்கு கள்ள ஓட்டுக்களைக் கூட தாராளமாகக் குத்தலாம்.

தன் மீது விரைவில் வர உள்ள ஒரு வழக்கு கைது நடவடிக்கைக்காக, ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கும் மகன் விஜய் தேவரகொண்டாவை தமிழ்நாட்டின் முதல்வர் ஆக்குகிறார் அப்பா நாசர். வேண்டா வெறுப்பாக பதவியேற்கும் விஜய், அதன்பின் அந்தப் பதவியில் இருந்தால் என்னவெல்லாம் செய்யலாம் என பத்திரிகையாளர் சத்யராஜ் ஆலோசனைப்படி அதிரடி அரசியல் ஆட்டத்தில் இறங்குகிறார். அந்த ஆட்டத்தில் அவர் எப்படிப்பட்ட எதிர்ப்புகளை சம்பாதிக்கிறார், அவற்றை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் இந்த நோட்டாவின் கதை.

 சூர்யர், அஜித் கலந்த ஒரு கலவையாக இருக்கிறார் விஜய் தேவரகொன்டா. ஜாலியாக சுற்றித் திரிந்து கொண்டிருப்பவர் பேருந்து எரிக்கப்பட்ட ஒரு சம்பத்தின் போது பத்திரிகையாளர்களை நோக்கி மிரட்டலாகப் பேசும் அந்த ஒரு காட்சி போதும் அவருடைய நடிப்பைப் பற்றி சொல்ல. அதன்பின் ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய அதிரடி தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இந்த நோட்டா விஜய்க்கு தமிழிலும் ஒரு சிறப்பான அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

படத்தின் இரண்டு முக்கிய புள்ளிகள் சத்யராஜ், நாசர். இவர்களில் நாசர் முதல்வராக இருந்து பதவி விலகியவர், சத்யராஜ் ஒரு பத்திரிகையாளர். இவர்களிருவருக்கும் படத்தில் என்ன தொடர்பு என்பது எதிர்பாராத சஸ்பென்ஸ். நாசர், சொல்லவே வேண்டாம், வழக்கம் போலவே அற்புதமாக நடித்திருக்கிறார். அரசியல் என்றால் என்ன என்பது அவருடைய முகபாவத்துடன் மட்டுமல்ல, குரலிலும், வசன உச்சரிப்பிலும் கூடத் தெரிகிறது.

 

படத்தின் நாயகி என்று மெஹ்ரீன்–ஐ சொல்வதை விட எதிர்க்கட்சித் தலைவரின் வாரிசாக வரும் சஞ்சனா-வைச் சொல்லலாம். படத்தில் இவருடைய கதாபாத்திரப் பெயரான கயல் என்பதும், இவருடைய தோற்றமும் தற்போதைய பெண் வாரிசு அரசியல் பிரமுகரை ஞாபகப்படுத்துகிறது. முதல் படத்திலேயே முத்திரை பதிக்கும் ஒரு கதாபாத்திரம், அந்த வாய்ப்பை சஞ்சனா வீணாக்கவில்லை. மெஹ்ரீன் படத்தின் ஆரம்பத்தில் ஒரே ஒரு கேள்வி கேட்கிறார். அதன்பின் அவருக்கு முக்கியத்துவமில்லை.

அரசியல் என்றாலே வலது கரம் இல்லாமலா ?, அப்படி ஒரு வலதுகரமாக எம்.எஸ்.பாஸ்கர். ஒரு உண்மையான வலது கரம் எப்படி இருப்பார் என்பதை இவரைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

சாம் சிஎஸ் இசையில் இரண்டு துள்ளல் பாடல்கள் மட்டுமே இருக்கின்றன. மற்றபடி பின்னணி இசையில் எந்த பாதகமும் செய்யாமல் படத்தின் ஜீவனைக் கூட்டியிருக்கிறார்.

படத்திற்கு பலமான காட்சிகள் பல உள்ளன. அவை இன்றைய அரசியல் காட்சிகள் , கடந்து போன சில அரசியல் காட்சிகள் ஆகியவற்றை ஞாபகப்படுத்துகின்றன. முதல்வரைப் பார்த்து மந்திரிகள், எம்எல்ஏக்கள் குனிவது, செம்பரம்பாக்க ஏரி திறப்பு சம்பவம், ரிசார்ட்டில் எம்எல்ஏக்கள் குடித்துவிட்டு அமர்க்களம் செய்வது, ஆஸ்பிட்டல் காட்சி, ஸ்டிக்கர் மேட்டர், இடைத்தேர்தல், கார்ப்பரேட் சாமியார் என காட்சிகள் வரும் போது தியேட்டரில் கைதட்டல் அதிகமாகவே ஒலிக்கிறது.

இடைவேளைக்குப் பின் பரபரப்பான அரசியல் அதிரடி ஆட்டம் இருக்கும் என்று எதிர்பார்த்தால், அவ்வப்போது மட்டுமே அது வருவது ஒரு குறை. முதல்வராக இருக்கும் விஜய்யை எதிர்த்து எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சியினர் ஏதாவது செய்வார்கள் என்று எதிர்பார்த்தால் அதில் ஏமாற்றமே. நேரடி அரசியல் தாக்குதல் இல்லாமல், பணத்திற்காக ஒரு சாமியார் செய்யும் மோசடி வேலை என்பதில் பெரிய பரபரப்பு திரைக்கதையில் இல்லை. இந்த ஆட்டத்தை இன்னும் வேறு விதமாக ஆடியிருக்கலாமோ என்று எண்ண வைக்கிறது.

. மொத்தத்தில் ரவுடி சிஎம் சிறந்த படமாக அமைந்துள்ளது.

0 183

Ram (Vijay Sethupathi), who is a travel photographer with the professional and an anxiousness Ram memory always adhered with the past life. Once with a short-change, the school friends form a  group in a social media and plan for reunions.

All were strict on with higher professional jobs, in their busy schedule, the guys making everyone’s presence and even Janu (Trisha), travels towards Chennai from Singapore to meet her old friends. Now upon, the sequels blends with old school life and present life of Ram and Janu. In a town Ram and Janu grow up their love in the tenth standard, Ram whenever looks up at Janu, the guy gets eagerly desirous and express his love in a seemly manner and Janu accepts in glossiness way. By this unexploited situation, both of them getting separated. By this, the second half made somnolence, which was romantic sequels lengthen in an adequate manner and even frame by frame romantic was furthering. The film not only bumps the youngsters even the old people if they had old memories. The director opted Janu name for the heroine character, to express the guy’s feelings!!!…

The director targets with Illiayaraja’s old songs that the young school going girl Janu (Janaki Devi), sings when the audience request to her. The viewers might murmur when they come out of the theatre.  Govind Menonv’s music was kept on with the characterized by pleasing melody, the BGM is a noticeable degree. The cinematography was sufficiently valuable to justify the investment, the dialogues of Vijay Sethupathi competently when the situations overlap. Aditya Bhaskar steps in with an innocent eccentric. 

 

வாழ்வியல் படங்கள், சமூகப் படங்கள், காதல் படங்கள் ஆகியவைதான் எப்படிப்பட்ட மாற்றத்தைத் தருகின்றன. தேவையற்ற ஹீரோவின் கொண்டாட்டம், தற்பெருமை பாடும் பாடல்கள், நகைச்சுவை என்ற பெயரில் கடி ஜோக்குகள் என பல படங்களைப் பார்த்து நொந்து போயிருக்கும் தமிழ் சினிமா ரசிகன் இந்த ‘96’ போன்ற படங்களைப் பார்த்து நெஞ்சம் நிமிர்ந்து ரசிப்பான்.

சிம்பிளான ஒரு வரிக் கதைதான். பள்ளி படிக்கும் காலத்தில் காதலித்த விஜய் சேதுபதி, த்ரிஷா இருவரும் அப்போதே பிரிந்து விடுகிறார்கள். 22 வருடங்களுக்குப் பிறகு அவர்கள் சந்திக்கும் போது அவர்களின் சந்திப்பு எப்படி நடக்கிறது, எப்படி நகர்கிறது, எப்படி முடிகிறது என்பதுதான் இந்த ‘96‘ ?.

தமிழ் சினிமாவிலும் விஜய் சேதுபதிக்கு முன் விஜய் சேதுபதிக்குப் பின் என தாராளமாகப் பிரிக்கலாம். எப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதற்குள் அப்படியே அடங்கிப் போய்விடுகிறாரே ?.  கோடிகளில் வசூல் கொடுத்து தமிழ் சினிமாவை ஆள வேண்டும் என்று நினைக்காமல் இப்படிப்பட்ட படங்களைத் தேர்வு செய்து நடிப்பதற்காகவே அவரை தனியாகப் பாராட்டலாம்.  காதல் பிரிவையும், முன்னாள் காதலி த்ரிஷாவை சந்திக்கத் தயக்கப்பட்டு ஒளிந்து கொண்டிருப்பதையும், த்ரிஷாவை சந்தித்த பின் அவரை விட்டு கொஞ்சம் ஒதுங்கியிருக்க நினைப்பதும் என வரம்பு மீறாத, காதலை மனதில் இருத்திக் கொண்ட கே.ராமச்சந்திரன் கதாபாத்திரத்தில் அப்படியே வாழ்ந்திருக்கிறார்.

இத்தனை வருடங்களாக இப்படிப்பட்ட நடிப்பை எங்கே ஒளித்து வைத்திருந்தீர்கள் த்ரிஷா. முன்னணி நடிகர்களுடன் நடித்து, நடித்து உங்களது நடிப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் விட்டுவிட்டீர்களே. இப்போதாவது இம்மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற உங்களின் முடிவுக்கு எத்தனை பாராட்டினாலும் தகும். காதலை பேசிக் கொள்ளாமல் காட்டுவது, பேசிக் கொண்டாலும் அதை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு காட்டுவது, வெளிப்படையாகச் சொன்னாலும் அதை எல்லை மீறாமல் காட்டுவது, காதலை வெளிப்படுத்துவதில்தான் அவருக்கு எத்தனை எத்தனை வாய்ப்புகள். கொஞ்சம் நழுவினாலும் இந்தக் காதல் வேறு மாதிரியான காதலாகப் போய்விடும் சூழல். அதைப் புரிந்து கொண்டு அந்தக் காதலை எத்தனை லாவகமாகக் காட்டுகிறார் த்ரிஷா. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ பட ஜெசியை விட இந்த ‘96’ எஸ். ஜானகி தேவிக்கே நமது ஓட்டு.

விஜய் சேதுபதியின் பள்ளிப் பருவ கதாபாத்திரத்தில் ஆதித்யா பாஸ்கர், காதலியைப் பார்த்து பயந்து நடுங்குவதும், வார்த்தை வராமல் தடுமாறுவதும், அவர் தொட்டதும் மயங்கி விழுவதும் என அந்த வயது தடுமாற்றங்களை இயல்பாய் வெளிப்படுத்தியிருக்கிறார். பள்ளிப் பருவ த்ரிஷா கதாபாத்திரத்தில் கௌரி ஜி. கிருஷ்ணா. காதலை வெளிப்படுத்துவதில் எந்தத் தயக்கமும் இல்லாமல் தைரியமாய் அணுகுகிறார். இவர்கள் இருவரின் நடிப்பு, படம் பார்க்கும் பலரையும் அவர்களது பள்ளிப் பருவக் காலத்திற்கே அழைத்துச் சென்றுவிடும். இவர்களின் தோழியாக, சிறு வயது தேவதர்ஷினி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பெண்ணும், தோழனாக நடித்திருப்பவர்களும் சில காட்சிகளே வந்தாலும் அவர்கள் பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

பள்ளியின் வாட்ச்மேனாக ஜனகராஜ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவில் நடித்திருக்கிறார். அதற்காகவாவது இவரது கதாபாத்திரத்திற்கு ஏதோ ஒரு முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கலாம். தேவதர்ஷினி, பக்ஸ், ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் உடன் படித்தவர்களாக ரசிக்க வைக்கிறார்கள்.

கோவிந்த் வசந்தா இசையமைப்பில் காதல் ததும்பும் சில பாடல்கள் இருந்திருக்கலாம். படத்தில் அடிக்கடி வரும் இளையராஜா பாடல்கள் பொருத்தமாக அமைந்துவிட்டதால் படத்தின் தனிப் பாடல்கள் அதன் முன் தோற்றுவிடுகின்றன என்பதே உண்மை. இருப்பினும் ‘காதலே…காதலே…’ உருக வைத்துவிடுகிறது. அதே போல பின்னணி இசையிலும் இசையால் காதலின் உணர்வை இனிமையாய் வெளிப்படுத்தியிருக்கிறார்.

சண்முகசுந்தரம், மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு கதாபாத்திரங்களுடனேயே சேர்ந்து பயணிக்கிறது. காதல் படங்களை நம் மனதுக்குள் செலுத்த நடிகர்களின் உணர்வுகள் முக்கியம், அதை அவர்களது குளோசப் காட்சிகள் மூலம் நமக்குள் புகுத்தி விடுகிறார்கள்.

இடைவேளைக்குப் பின் விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் மட்டுமே படத்தில் அதிகம் இருக்கிறார்களோ என்று எண்ண வைத்தாலும், அவர்களிருவரின் காதல் நடிப்பு மூலம் அதையும் தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.