7.9 C
New York
Thursday, April 18, 2024

Buy now

Baiyama Irukku Review

நீண்ட இடைவேலிகு பின் மீண்டும் ஒரு பேய் படம் ஆனால் வித்தியாசமான கதை களம் வித்தியாசமான லோகஷன் வித்தியாசமான நட்சித்திரங்கள் என்று சொல்லணும் அதேபோல மனம் விட்டு அதோடு பயம் இப்படி செமையான ஒரு கலைவையான படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் .

இந்த படத்தில் சந்தோஷ் பிரதீப்,ரேஷ்மி மேனன் லொள்ளுசபா ஜீவா,பரணி,ஜெகன், மொட்டை ராஜேந்திரன்,கோவை சரளா மற்றும் பலர் நடிப்பில் சத்யா இசையில் ஜவகர் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் ’பயமா இருக்கு’

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தனது மனைவியை தனியாக விட்டுவிட்டு, இலங்கைக்கு செல்லும் ஹீரோ சந்தோஷ் பிரதீப், தமிழர்கள் பிரச்சினை காரணமாக 4 மாதங்கள் கழித்து தமிழகம் திரும்ப நேரிடுகிறது. அப்போது அதே பிரச்சினையில் சிக்கிகொண்ட சென்னையில் இருந்து இலங்கை சென்றவர்களான ஜீவா, பரணி, ஜெகன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோரையும் தன்னுடன் தமிழகத்திற்கு அழைத்து வரும் சந்தோஷ், தனது வீட்டில் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு போகும்படி சொல்கிறார்.

அதன்படி, பிரதீப்பின் வீட்டின் அருகே உள்ள ஒரு வீட்டில் தங்கும் இந்த நால்வர்களில் மொட்டை ராஜேந்திரன் சந்தோஷின் மனைவி ரேஷ்மி மேனனை பேய் என்று சொல்கிறார். அதே சமயம், அந்த ஊரில் உள்ள சிலரும், சந்தோஷின் மனைவியை பேய் என்று சொல்ல, ஒரு கட்டத்தில், சந்தோஷின் நான்கு நண்பர்களும் ரேஷ்மியை பேய் என்று சொல்வதோடு, அவர் இறந்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.

தனது கை குழந்தையுடன் சகஜமாக இருக்கும் ரேஷ்மி மேனன், குறித்து தனது நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் சொல்வதை சந்தோஷ் நம்பாமல் இருந்தாலும், அவரை ரேஷ்மியிடம் இருந்து காப்பாற்றியாக வேண்டும், என்று அவரது நான்கு நண்பர்களும் முயற்சிக்கிறார்கள். அதே சமயம், உங்களுடன் பேய் இருக்கிறது, ஆனால் அது யார் என்பது தெரியாது, என்று கூறும் மந்திரவாதி கோவை சரளா, அதை கண்டுபிடிக்க மந்திர அரிசியை கொடுக்கிறார். அதை பயன்படுத்தும் நான்கு நண்பர்களும் சந்தோஷ் தான் பேய் என்ற முடிவுக்கு வர, சில நிமிடங்களில் சந்தோஷ் பேய் இல்லை என்பதையும் கண்டுபிடித்துவிட, உண்மையான பேய் யார்? உயிருடன் இருக்கும் இந்த 6 பேர்களில் ஒருவர் எப்படி பேய் ஆனார்?, என்பதே ‘பயமா இருக்கு’ படத்தின் கதை.

படத்தின் தலைப்பும், நடிகர்களும் பேய் படம் என்ற பெயரில் நமக்கு கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைக்க போறங்க, என்று நினைக்க வைத்தாலும், இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் தொடங்கும் படம். கேரளா தமிழகம் எல்லையில் அமைந்துள்ள கிராமம், அந்த கிராமத்தில் தண்ணீரில் மிதக்கும் ஒரு வீடு, அதில் இருக்கும் மர்மங்கள் என படத்தின் ஆரம்பமே நம்மை சீட் நுணியில் உட்கார வைத்தாலும், பல தடுமாற்றங்களுடன் நகரும் திரைக்கதை, சில காட்சிகளுக்கு பிறகு, படம் சூடு பிடிக்கிறது

சந்தோஷ் பிரதீப், ரேஷ்மி மேனன், ஜீவா, மொட்டை ராஜேந்திரன், ஜெகன், பரணி இவர்களுடன் ஒரு சில காட்சிகளில் வரும் சில ஜுனியர் ஆர்டிஸ்ட்கள் தான் படத்தின் மொத்த நடிகர்கள். இவர்களை வைத்துக்கொண்டு, ஆரம்பத்தில் படத்தை சீரியஸாக நகர்த்தி ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை தூண்டும் இயக்குநர் ஜவஹர், அதன் பிறகு காமெடி என்ற பெயரில் திரைக்கதையை திசை மாற்றுவதோடு, க்ளைமாக்ஸில் கோவை சரளாவை மந்திரவாதியாக்கி, செய்யும் நகைச்சுவை காட்சிகள் மூலம் மொத்த படத்தையே ரசிக்கவைக்கிறார்

சத்யாவின் இசையும், மகேந்திரனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருப்பதோடு, நடிகர்களைக் காட்டிலும் படத்தை அதிகமாக தூக்கி சுமப்பவர்களே இவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு மற்றும் இசை என்று தொழில்நுட்ப ரீதியாக படம் ரசிக்கும்படியாக இருந்தாலும், அதை வைத்து ரசிகர்கள் பயப்படும் அளவுக்கு ஒரு திகில் படமாக கொடுத்து படம் ரசிக்கும்படியாக இருக்கிறது . இயக்குநர் ஜவஹர் இயக்குனர் ஜவகர் பாஸ்

மொத்தத்தில், இந்த ‘பயமா இருக்கு’ ரசிகர்களுக்கு பயத்தையும் சிரிப்பையும் கொடுத்துள்ளது

Previous article
Next article

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE