8.3 C
New York
Friday, April 19, 2024

Buy now

வீல்சேரில் உட்கார்ந்தபடி நடிக்கிறதை என் மனைவியும் இரண்டு மகன்களும் விரும்பவில்லை” – நாகார்ஜூனா

”நல்ல கதையில் நடிக்கவேண்டும் என்ற தேடலில் ‘தோழா’வுக்காக ஒரு வருடம் காத்திருந்தேன்’ – ஜூனியர் மார்க்கண்டேயன் கார்த்தி

’தோழா’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தங்களது திரைப்படப் பயணத்தில் மறக்க முடியாத உணர்வுப்பூர்வமான தருணங்களை பகிர்ந்து கொண்ட ‘எவர்க்ரீன் ஹீரோ’ நாகார்ஜூனா, ’ஜூனியர் மார்க்கண்டேயன்’ கார்த்தி மற்றும் ‘நவீன கலைவாணர்’ விவேக்.

என்னுடைய சினிமா கேரியர்ல ‘தோழா’ படம் ஒரு மைல்கல் படமாக இருக்கும்னு சொல்ல. ஆனால் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உருவாக்கிய படம். சமீபத்துல ‘InTouchables” ஒரு ஃப்ரெஞ்ச் படத்தைப் பார்த்தேன். இந்த மாதிரி ஒரு அருமையான படத்தை ஏன் இங்கே ரீமேக் பண்ணக்கூடாதுன்னு தோணுச்சு. அப்படியொரு உணர்வுப்பூர்வமான படம். அந்தப் படத்தைப் பார்த்த நாள்ல இருந்து, நான் சந்திக்கிற நண்பர்கள்கிட்டயெல்லாம் ‘InTouchables’ படத்தைப் பாருங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன். அந்த மாதிரியான ஒரு உணர்வை ‘தோழா’ படம் நிச்சயம் கொடுக்கும். இன்னொரு விஷயம் ‘தோழா’ படத்துல நான் நடிக்கிறதுல என் குடும்பத்துல யாருக்குமே விரும்பமில்ல. நான் நடிக்கக்கூடாதுன்னு என்னோட மனைவி அமலா, ரெண்டு பசங்களும் எதிர்ப்பு தெரிவிச்சாங்க. இந்தப் படத்துல நான் வீல் சேர்ல உட்கார்ந்தபடி நடிக்கிற காட்சிகள் இருக்கு. என் பசங்களாலயும், மனைவியாலும் என்னை அப்படியொரு சூழ்நிலையில நடிக்கிறத ஏத்துக்கவே முடியல. இதுதான் அவங்க என்னை நடிக்க வேண்டாம்னு சொன்னதுக்கு காரணம். அதனால ‘தோழா’வை பார்க்கும்போது என்ன சொல்ல போறாங்களோன்னு எனக்கு ரொம்ப படபடப்பாக இருக்கு” என எமோஷனல் பஞ்ச் வைத்தார் நாகார்ஜூனா.

அடுத்து பேசிய கார்த்தி, “ஒரு நல்லப்படம் நடிக்கணும்னு நமக்கு ஒரு தேடல் இருக்குமே. அந்த தேடலில் கிடைச்ச ஒரு நல்ல வாய்ப்புதான் ‘தோழா’. உண்மையைச் சொல்லணும்னா, நல்ல கதையில நடிக்கிறதுக்காக ஒரு வருஷம் காத்திருந்தேன். என்னோட தேடல் வீண் போகல. ‘தோழா’வோட ஒரிஜினல் வெர்ஷனை பார்த்தப்ப, அதை அப்படியே பிரதிபலிக்கிற மாதிரி என்னால பண்ணமுடியுமான்னு ஒரு சின்ன சந்தேகம் இருந்துச்சு. ஆனால் டைரக்டர் வம்சி செம புத்திசாலி. நமக்கு ஏற்றமாதிரி கதையை மிக அழகாக, அதனோட எமோஷன் குறையாம எடுத்திருக்கார்” என உற்சாகமானார்.

“என்னோட முப்பது வருஷ சினிமா வாழ்க்கையில் ‘ஹேண்ட்சம்’ நாகார்ஜூனா உடன் சேர்ந்து நடிக்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. ஆனால் அவரோடு சேர்ந்து நடிக்கிற மாதிரியான காட்சிகள் எனக்கு எதுவுமில்ல” என ஆதங்கப்பட்டார் விவேக்.

’தோழா’ படத்தின் மெகா ஸ்டார்களை அடுத்து பேசிய, தேசிய விருது வென்ற எடிட்டர் கே.எல். ப்ரவீன், “ஒவ்வொரு காட்சிகளிலும் நாகார்ஜூனா வெளிப்படுத்தின எமோஷனலான நடிப்பைப் பார்த்து, நான் இப்போ அவரோட தீவிர ரசிகர் ஆயிட்டேன். மறுபக்கம் கார்த்தி ஒட்டுமொத்த படத்திலும் சரி ஷூட்டிங்கிலும் சரி தன்னோட குசும்பு கொப்பளிக்கும் நடிப்பால கலகலன்னு சிரிக்க வைச்சதையும் மறக்க முடியாது” என்றார்.

அடுத்து பேசிய பாடலாசிரியர் மதன் கார்க்கி, “’தோழா’ படத்துல கார்த்தி ஹீரோவாக மட்டும் இல்லாமல் ஒரு ஆர்வமுள்ள உதவி இயக்குநரை போலவும் இருந்து எல்லோரையும் உற்சாகப்படுத்தியதை மறக்க முடியாது. பாடலை எழுதும் போது, இந்த வரியை இப்படி எழுதலாமா, இந்த வார்த்தை வந்தால் நல்லா இருக்குமா என ரொம்பவே உற்சாகப்படுத்தினதை மறக்க முடியாது. இந்தப்படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்கள் உள்மனதிற்குள் இருக்கும் நம் ஆன்மாவைத் தொடும் பாடல்களாக வந்திருக்கின்றன. மற்ற பாடல்கள் பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பாடல்களாக இருக்கும். நாகார்ஜூனா அவர்களுக்கு என் தந்தை ‘ரட்சகன்’ படத்தில் ‘சோனியா சோனியா’ என்ற மெகா ஹிட் பாடலை எழுதியிருந்தார். தற்போது நானும் நாகார்ஜூனா அவர்களுக்கு ஒரு பாடலை எழுதியிருப்பதை நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது” என்றார்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE