16.2 C
New York
Thursday, April 25, 2024

Buy now

விருதுக்காகப் படமெடுப்பதில்லை : தனுஷ் பேச்சு

விருதுக்காகப் படமெடுப்பதில்லை ,எங்கள் படங்களுக்கு விருதுகள் கிடைப்பது தானாக அமைகிறது என்று நடிகர் தனுஷ் தனது படவிழாவில் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பல வெற்றிப்படங்களையும் விருதுப் படங்களையும் தயாரித்த நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் சார்பில் இப்போது உருவாகியிருக்கும் படம் ‘ அம்மா கணக்கு’.இது இந்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டு வெற்றி பெற்ற ‘நில் பேட்டா சனாட்டா’ என்கிற படத்தின் ரீமேக்காகும்.

இப்படத்தில் அமலாபால்,ரேவதி,சமுத்திரக்கனி,சிறுமி யுவா நடித்துள்ளனர்.இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.இந்தியில் இயக்கிய அஸ்வினி ஐயர் திவாரி என்பவரே தமிழிலும் ‘அம்மா கணக்கை’ இயக்கியுள்ளார்.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகரும் படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ் பேசினார். அவர் பேசும் போது,

” நாங்கள் தயாரித்த ‘காக்கா முட்டை,’ ,’விசாரணை’ போன்ற படங்களுக்கெல்லாம் விருதுகள் கிடைத்து பாராட்டப்படுவது கடவுள் அருளால் தானாக அமைவதுதான்..நாங்கள் திட்டமிட்டு விருதுகளுக்காகப் படமெடுப்பதில்லை.இந்த ‘அம்மா கணக்கு’ படத்தை தயாரித்ததில் வுண்டர்பார் பிலிம்ஸ் பெருமைப்படுகிறது.ஏனென்றால் இது சமுதாயத்துக்குத் தேவையான கருத்தைச் சொல்லியிருக்கும் படம்.

பலருக்கும் படிக்கும் போது கணக்குப்பாடம் கடினமாகத் தெரிகிறது.இது ஏன்? நான் கூட ப்ளஸ்டூவில் கணக்கில் பெயிலானவன்தான்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது அவர்கள் படிப்பின் மீது ஒரு கனவுடன் கவலையுடன் இருக்கிறார்கள்.ஆனால் பிள்ளைகளுக்கோ படி படி என்றால் பிடிப்பதில்லை.ஏன் பெற்றோர்கள் அப்படிச் சொல்கிறார்கள் என்று பிள்ளைகள் புரிந்து கொள்வதில்லை.இந்தப்படம் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி இருக்கும்.

இந்த இந்திப் ப்படத்தை பார்க்காமலேயே வெறும் ட்ரெய்லரைப் பார்த்தே ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் ஆனந்த் எல்.ராயிடம் கேட்டேன். அப்படியே ரீமேக் உரிமையையும் வாங்கினேன். உரிமை வாங்கியபிறகுதான் படத்தையே பார்த்தேன். எனக்கு அந்த ட்ரெய்லரே அந்த அளவுக்கு தூண்டுதலாக இருந்தது. அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.ஒரு அம்மா தன் மகள் மீது வைத்துள்ள பாசம் கனவு பற்றிச் சொல்கிற படம்.இப்படத்தை அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியுள்ளார்.குறிப்பிட்ட நாட்களுக்குள் படத்தை முடித்து அசத்திவிட்டார்.

இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா சார் இசையமைத்துள்ளார்..அவரது இசை படத்துக்கு பெரிய பலமாக இருக்கும்.படத்துக்கு ஒளிப்பதிவு ஆரி செய்திருக்கிறார். அவர் ‘ஜிகர்தண்டா’ ஒளிப்பதிவாளர்.படத்தை நல்லமுறையில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்துக்கு ஹாலிவுட் தரத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் என்றே கூறவேண்டும்.

படத்தில் நடித்த பிறகு தன் நடிப்பைப்பற்றி என் அபிப்பிராயத்தை அறிய அமலாபால் மிகவும் ஆவலாக இருந்தார்.தன் நடிப்பைப் பற்றிக் கேட்டுக்கொண்டே இருந்தார்.அமலாபாலின் க்ளோஸ்அப் காட்சிகளுக்கெல்லாம் இசைஞானி இசையமைத்திருக்கிறார்.இதைவிட சிறப்பு என்ன வேண்டும்? இப்போது சொல்கிறேன், அமலாபால் ஏற்றிருக்கிற பாத்திரம் மிகவும் சிறப்பானது.

அவர் நடித்ததிலேயே இதுதான் பெஸ்ட் என்று சொல்வேன்.இப்படத்தின் மூலம் அமலாபாலுக்கும் சுட்டிப்பெண் யுவாவுக்கும் தேசியவிருது கிடைக்கும் ..”இவ்வாறு தனுஷ் பேசினார்.

நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி பேசும்போது, ”தமிழில் படம் இயக்கும் இந்த வாய்ப்பு எனக்கு ஒளிப்பதிவாளர் ஆரியால் கிடைத்தது என்பேன். தமிழில் என்னை அறிமுகம் செய்துள்ள வுண்டர் பார் பிலிம்சுக்கும் தனுஷ்சாருக்கும் நன்றி.” என்றார்

நடிகை அமலாபால் பேசும்போது ” முதலில் தனுஷ்சார் இந்தப்படம் பற்றிச் சொன்னார்.அம்மாவாக நடிக்க வேண்டும் நல்ல கதை என்றார். ஏதோ சிறு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் போலிருக்கிறது என்று ஓகே சொன்னேன். பிறகு பத்தாவது படிக்கும் ஒருபெண்குழந்தைக்கு. அம்மாவாக நடிக்க வேண்டும் என்றதும் அதிர்ச்சியாக இருந்தது.படத்தை பாருங்கள் என்றார். பார்த்தேன். அந்தப்பாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. படப்பிடிப்பில் அந்தப்பாத்திரமாகவே வாழ்ந்தேன்.இந்தப் படப்பிடிப்பு அனுபவம் சுற்றுலா சென்று வந்தது போல மகிழ்ச்சியான அனுபவமாக இருந்த்து.” என்றார்.

நிகழ்ச்சியில் வுண்டர்பார் பிலிம்ஸ் முதன்மை நிர்வாகி வினோத்குமார் ,ஒளிப்பதிவாளர் கேவ்மிக் யு ஆரி ,சிறுமி யுவா ஆகியோரும் கலந்து கொண்டார்கள்

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE