7.9 C
New York
Thursday, April 18, 2024

Buy now

தொப்புள் காட்டத்தான் ஹீரோயினா..? -சுஜாவாருணி

தொப்புள் காட்டத்தான் ஹீரோயினா..? -சுஜாவாருணி

படங்களில் இளமை ததும்ப வருகிற சுஜாவாருணி பேசும்போது முதிர்ச்சியாகப் பேசுகிறார். ”இப்போ மெச்சூர்டாய்ட்டேன். இப்போதான் நல்லது கெட்டது தெரியுது.” என்கிறார்.

மனதில் பட்டதை சட்டெனக் கேட்டோம் ரொம்ப சுமார் மூஞ்சி குமாரிகளெல்லாம் ஹீரோயின்களாகி அட்டகாசம் செய்து வருகிறார்கள். உங்களுக்கென்ன குறைச்சல்?

“நிஜத்தைச் சொல்லணும்னா இதே கேள்வியை என்கிட்டே பலபேர் கேட்டிருக்காங்க. பதில் சொல்ல முடியாத கேள்விகளில் இதுவும் ஒண்ணு.சில கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது. காலம்தான் பதில் சொல்லும். நம்மால சொல்லி விளக்க முடியாது. இந்தக் கேள்வியை சந்திக்கிறப்போ எல்லாம் சிரிச்சிக்கிட்டே போய்டுவேன். ”

அட என்ன தத்துவம்!

சரி பாடல்களில் மட்டும் தோன்றி நடித்தது தேக்கத்துக்கு காரணமாக இருக்குமோ?

” என் சினிமாப் பிரவேசம் நான் எய்த் படிக்கிறப்போ நடந்திச்சு. அப்போ எனக்கு 12 வயசு முடிஞ்சி டீன் ஏஜ் கூட ஸ்டார்ட் ஆகலை.அப்போதான் நான் முதல் படத்துல நடிச்சேன். தெரிஞ்சவங்க கேட்டாங்க. வீட்ல கூட எதிர்ப்பு. அப்படிப்பட்ட சூழலில் என் தாத்தா மட்டும் எனக்கு ஆதரவா இருந்து என்கரேஜ் பண்ணினார். அறியாத வயசுல புரியாத மனசுல அப்போ அப்படி நடிச்ச படம்தான் ‘ப்ளஸ்டூ’அப்புறம் ‘வர்ணஜாலம்’ கிற படத்துல சாங்ல ஆடினேன்.அவ்வளவுதான். சாங்ல டான்ஸ் ஆடு., தங்கச்சியா வான்னு போரடிச்சுட்டாங்க .அதன்பிறகு பல படங்களில் நடிச்சேன். பாடலுக்கு ஆடினேன். அப்புறம் ஒரே மாதிரியான வாய்ப்புகள். அந்த வயசுல நல்லது கெட்டது சொல்ல சரியான ஆட்கள் இல்லை. அதுதான் தெளிவான முடிவுன்னு எடுக்க முடியாம குழம்பிட்டேன்.இப்போ மெச்சூர்டாய்ட்டேன்”என்கிறார்.

இவர் இதற்குத்தான் லாயக்கு என்றுமுத்திரை குத்தி பார்க்கும் பார்வை நம் திரையுலகப் போக்கு இதன் மூலம் சுஜாவாருணி பாதிக்கப்பட்டதாக உணர்கிறாரா?.

“இவர் இதுக்குத்தான் லாயக்குன்னும் ஒரே மாதிரின்னும் சொல்றவங்க, வேறுமாதிரி ரோல் கொடுங்க. நானா அதே மாதிரி ரோல்லதான் நடிப்பேன்னு கேட்கிறேன்? “என்கிற சுஜாவாருணி, இப்போதைய சூழல் நன்றாக உள்ளதாக கருதுகிறார்.

“நான் இப்போ ரொம்ப மாறியிருக்கேன். அனுபவங்கள் மூலம் பாடம் படிச்சிருக்கேன். படங்களை செலக்ட் பண்ணித்தான் நடிக்கிறதுன்னு தீர்மானமா இருக்கேன். இப்ப உண்மையிலேயே சினிமா ட்ரண்ட் நல்லா இருக்கு. புதுப்புது திறமைசாலிங்க வர்றாங்க. இதுதான் படம்..இதுதான் கதைங்கிற பார்முலாவை எல்லாம் ஈஸியா உடைச்சி ஜெயிச்சுக் காட்றாங்க. அதுக்கு ஆடியன்சும் நல்ல சப்போர்ட் கொடுக்கறாங்க.

ஹீரோயின்னா மரத்தைச் சுற்றிவர்றது தொப்புள் காட்டிட்டு போறதுதான், பெரிசா நடிக்கவைக்க வேணாங்கிற கருத்து இன்னைக்கு மாறியிருக்கு.ஹீரோயின்னா தொப்புள் காட்டத்தானா..? இல்லயே. இப்ப ஹீரோயின்களுக்கும் நடிச்சுக் காட்டுற வாய்ப்பு வருது. பெர்பாமென்ஸ்ல ஸ்கோப் இருக்கிற மாதிரியும் படங்கள் வர்றது ஆரோக்கியமான மாற்றம். இப்ப ட்ரண்ட் ரொம்ப ஹெல்த்தியா இருக்கு.
இப்போ பார்வை மாறியிருக்கு படங்களும் மாறி இருக்கிறதா நெனைக்கிறேன்.”

பொரிந்து தள்ளியவர் நிதானத்துக்கு வந்தார்
.நடிக்கும் படங்கள் பற்றி சொல்லத் தொடங்கினார் சுஜாவாருணி.

“இப்போ நான் நடிக்கிற படங்கள்ல ‘வா டீல்’ கதையை மட்டுமே நம்பி எடுக்கிறாங்க. இது
எனக்கு நல்ல டீலாத் தெரியுது. அருண் விஜய்தான் ஹீரோ. சிவஞானம்கிறவர் டைரக்டர். இதில் எனக்கு நம்பிக்கையான ரோல். படத்தோட கதையின் கருவே என் கேரக்டர்தான். டைரக்டர் நல்ல திறமைசாலி. எல்லாரிடமும் காம்ப்ரமைஸ் இல்லாம வேலை வாங்கினார். அது எனக்கு பிடிச்சது. இதுல எனக்கு பாட்டே கிடையாது. சுஜாவாருணின்னா பாட்டுங்கிற முத்திரை உடைபட்டிருக்கு.ஹாப்பியா இருக்கேன்.

அடுத்தபடம் ‘அப்புச்சி கிராமம்’ இதில் நான் எல்லோர் மனசுலயும் நிப்பேன். 2 பாடல் உண்டு. நான் கூத்தாடும் பெண்ணா வருவேன். சிலர் தப்பான கோணத்தில் என்னைப் பார்ப்பாங்க. ஆனா அந்த ஊரு என்னைக் குழந்தையாத்தான் நினைக்கும். எல்லாருக்கும் என்னை பிடிக்கும். அதுல ‘எரிகல்’ங்கிற விஷயத்தை எடுத்து பண்ணியிருக்காங்க. “பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் இடையில் ஒரு ஊர்ல எடுத்தாங்க. மண்ணெல்லாம் கறுப்பா இருந்திச்சு. எமோஷனலான படமா அது இருக்கும். யதார்த்தமா இருக்கும். டைரக்ஷன் வி. ஆனந்த். இதுல பெயர் சொல்ற மாதிரி ரோல்.”என்றவர்,

.அப்பறம் ‘பென்சில்’ படத்தைச் சொல்லலாம் அந்தப் பேனர்ல வேறு ஒரு படத்துக்கு ஹீரோயினா நடிக்கத்தான் முதல்ல பிக்ஸ் பண்ணினாங்க. அதுக்குள்ள ‘பென்சில்’ல ஒரு கேரக்டர் பண்ணுன்னாங்க. செஞ்சிருக்கேன். அது அழுத்தமான கேரக்டர். பரபரப்பான கதை அது.படமே நியூ லுக்ல இருக்கும். இதை படம் பார்க்கும் போது நீங்களே உணர்வீங்க. “என்று சான்றிதழ் தருகிறார்.

பிறமொழிகளில் சுஜாவாருணி எப்படி?

“நான் தெலுங்கில் ‘நாகவல்லி’ பண்ணியிருக்கேன். வெங்கடேஷ் ஹீரோ. . ‘குண்டல்லோ கோதாவரி’ லட்சுமி மஞ்சு, ஆதி நடிச்ச படம். அதில் எனக்கு நல்ல பேரு. அடையாளம். மோகன்பாபு மகன் விஷ்ணுவுடன் ‘தூஸ்கெல்தா’ விலும் எனக்கு அழுத்தமான கேரக்டர். எல்லாமே ஹிட் படங்கள்.

இப்போ ஆலியுடன் ‘அலிபாபா ஒக்கடா தொங்கா’ நடிக்கிருக்கேன். காமெடி நடிகருடன் நடிப்பதான்னு கேட்கிறாங்க. நான் அதைப் பற்றி கவலைப் படறதில்ல. நமக்கு நடிக்க ஸ்கோப் இருக்கான்னு மட்டுமே பார்ப்பேன். இப்படி கேட்கிறதுகூட வழக்கமான பார்வைதான். ஒரு ஆர்டிஸ்ட்னா வெரைட்டியான படங்கள்ல வெரைட்டியா நடிக்கணும். அதுதான் முக்கியம்.விருந்துல பிரியாணி வைக்கிறதால தினமும் அதையே சாப்பிட முடியுமா.. போரடிச்சுடும்லையா? “கேட்கிறார்.

என்னைத்தான் சினிமா வாய்ப்பு தேடி வந்திச்சு. நானா யாரையும் தேடிப் போகலை. நான் நடிப்புக்குன்னா எந்த எல்லை வரைக்கும் போவேன். ஆடமுடியும். பாடமுடியும். ஃபைட் பண்ணமுடியும்.”என்றார்
சுஜா ஏன் சுஜா வாருனியானார்? “பெயரை மாற்றலை. கொஞ்சம் சேர்த்திருக்கேன். வாருனி என்றால் பெண் மழைக்கடவுள் பெயர்”.என்றார்.

சமீபத்தில் பார்த்த படம் என்றபோது அவர் கூறிய பதில் அதிர்ச்சியளித்தது.

“நான் மீண்டும் மீண்டும் பார்க்கும் படம் ‘வீடு’. அதில் வரும் தாத்தா கேரக்டர் என்னை அழவச்சது. மறைஞ்ச எங்க தாத்தா ஞாபகம் வந்து அப்பப்பா என்ன ஒரு படம். என் ட்விட்டர்ல கூட பாலுமகேந்திரா சாருக்கு நன்றி சொல்லி இருப்பேன். என் தாத்தா ஆறுமுகம் தினத்தந்தி, தினகரன், மக்கள் குரல் பத்திரிகைகளில் புரொடக்ஷன் செக்ஷன்ல வேலை பார்த்தவர். அவர்தான் எனக்கு ரோல் மாடல், ” சற்று செண்டிமெண்ட்டும் பேசினார் சுஜா வாருனி.
.
“கடந்த காலத்தை போஸ்ட் மார்ட்டம் பண்றது தேவையில்ல. ப்ரசன்ட்ல என்னன்னு மட்டும் பார்க்கணும். நடிச்சு முடிச்சு வெளியான படங்கள் பற்றி பேசுறது வீண். அனுபவங்கள்ல பாடம் படிச்சிட்டு அடுத்து ஆவதைப் பற்றித்தான் நினைக்கணும்.”என்று தத்துவம் பேசியவர்,”எனக்கு இப்போ வழிகாட்ட ப்ரண்ட்ஸ் இருக்காங்க. தோள் கொடுக்க தோழமை இருக்கு. இனி எனக்கு நல்ல நேரம்தான்.” என்று
நம்பிக்கையையும் வெளியிட்டார்

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE