8.3 C
New York
Friday, April 19, 2024

Buy now

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பாடபொருளானது கபிலன்வைரமுத்துவின் நாவல்

கவிஞர் வைரமுத்துவின் இளையமகன் கபிலன்வைரமுத்து எழுதிய மெய்நிகரி என்ற நாவல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் “தற்கால தமிழிலக்கியம்” வகுப்பில் பாடபொருளாக கற்பிக்கப்பட்டது.

இது தொடர்பாக தேசிய பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் டாக்டர் வாசுகி கைலாசம் கூறுகையில்,

“ஆகஸ்ட் 2015 முதல், நான் தெற்காசியக் கல்வித்திட்டத்தின்கீழ் (South Asian Studies Programme) சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பாடங்களைக் கற்பித்துவருகிறேன். தமிழில் மட்டுமே அமைந்த ‘தற்காலத் தமிழிலக்கியம்’ என்ற பாடத்தையும், ‘தமிழ்ச் சமூகமும் வரலாறும்’ என்ற பாடத்தை தமிழ், ஆங்கிலம் இரண்டுமொழிகளிலும் கற்பிக்கிறேன். கணினி யுகத்தில் தமிழ் வெகுசனஇலக்கியத்தின் பரிணாம வளர்ச்சியை எடுத்துரைக்கும் நோக்கத்துடன் கபிலன்வைரமுத்துவின் “மெய்நிகரி” (www.meinigari.com) நாவலை ‘தற்காலத் தமிழிலக்கியம்’ வகுப்பில் கற்பித்தேன். கவனச்சிதறல் அதிகமுள்ள இக்கால இளையர்களிடம் இலக்கியக்கற்பனைகள் தூண்டப்பட பல புதுமுயற்சிகளை இந்த நாவல் பயன்படுத்துகின்றது. மெய்நிகரியின் கதையமைப்பு நேர்க்கோட்டுத் தன்மையில்லாதது; புலம்பெயர் சூழலில் வாழும் இளையர்களுக்கு இந்த ‘தமிழ்’ இலக்கிய வடிவம் புதியதாக அமைந்தது;” என்று பதிவு செய்திருக்கிறார்.

பூமரேங் பூமி, உயிர்ச்சொல், மெய்நிகரி ஆகிய நாவல்களை எழுதியிருக்கும் கபிலன் ஐந்து கவிதைத் தொகுதிகளையும் வெளியிட்டிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் இதழியல் பட்டம் பெற்றவர் தமிழில் ஒரு தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி உருவாக்கத்தில் பங்கு வகித்தார். தற்போது திரைத்துறையில் எழுத்தாளராகவும் பாடலாசிரியராகவும் இயங்கிக்கொண்டிருக்கிறார்.கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி-டி.ராஜேந்தர் இணைந்து நடிக்கும் படம், அஜித்-சிவா கூட்டணியில் உருவாகிக்கொண்டிருக்கும் தல57, இந்திரஜித், சிங்கம்3, மதியால் வெல், காஷ்மோரா இயக்குநர் கோகுலின் அடுத்த படம் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு எழுதிக்கொண்டிருக்கிறார்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE