18.9 C
New York
Monday, September 20, 2021

Buy now

தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது ‘பயம் ஒரு பயணம்’ திரைப்படம்

இந்த ஆண்டு வெளியான ‘கான்ஜுரிங் 2’ திரைப்படத்தை பார்த்த பலர், தங்கள் தூக்கத்தை பயத்தினால் தியாகம் செய்திருப்பதை நாம் எல்லோரும் நன்கு அறிவோம். தற்போது அந்த வரிசையில், தமிழக ரசிகர்களின் பயத்திற்கு காரணமான திரைப்படமாக வலம் வந்து கொண்டிருக்கிறது சமீபத்தில் வெளியான ‘பயம் ஒரு பயணம்’ திரைப்படம். விஷாகா சிங்கின் பேய் அவதாரம் தான் அந்த பயத்திற்கு காரணம் என்பதை உறுதியாகவே சொல்லலாம்.

‘ஆக்டோஸ்பைடர் புரொடக்ஷன்’ சார்பில் எஸ் துரை மற்றும் எஸ் சண்முகம் தயாரித்து, அறிமுக இயக்குனர் மணிஷர்மா இயக்கி இருக்கும் ‘பயம் ஒரு பயணம்’ திரைப்படமானது, தமிழக ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா விமர்சகர்கள் மத்தியிலும் அமோக பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த ‘பயம் ஒரு பயணம்’ திரைப்படம் மூலம், ஒரு சிறந்த அறிமுக இயக்குனராக மணிஷர்மா தன்னை தமிழ் சினிமாவில் நிலை நிறுத்தி கொண்டுள்ளார் என்பதை வெகுவாக சொல்லலாம். பயம் ஒரு பயணம் வெளியாகி நான்கு நாட்கள் ஆகி இருந்தாலும், ஒரு உண்மையான திகில் அனுபவத்திற்காக ரசிகர்கள் பலர், இந்த படத்தை பார்ப்பதற்கு படையெடுத்து சென்ற வண்ணம் இருக்கின்றனர்.

‘பயம் ஒரு பயணம்’ படத்தின் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்த டாக்டர் பரத் மற்றும் மீனாக்ஷி தீட்சித் ஆகியோர் தங்களின் எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கை தட்டல்களை பெற்று இருக்கின்றனர். “தொடர்ந்து நல்ல விமர்சனங்களை எங்களது ‘பயம் ஒரு பயணம்’ பெற்று வருவதை பார்க்கும் பொழுது எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு முழுக்க முழுக்க காரணம், எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினரின் ஒத்துழைப்பும், கூட்டு முயற்சியும் தான்.

எங்களின் இந்த வெற்றிக்கு முதுகெலும்பாக செயல்பட்ட ‘பயம் ஒரு பயணம்’ படத்தின் தயாரிப்பாளர்கள் எஸ் துரை மற்றும் எஸ் சண்முகம், இயக்குனர் மணிஷர்மா, விஷாகா சிங், மீனாக்ஷி தீட்சித், ஒளிப்பதிவாளர் ஆண்ட்ரு மற்றும் இசையமைப்பாளர் ஒய். ஆர் பிரசாத் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்…இந்த வெற்றியின் மூலம் , ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எனது எண்ணம் மேலும் அதிகரித்துள்ளது…” என்கிறார் ‘பயம் ஒரு பயணம்’ படத்தின் கதாநாயகன் டாக்டர் பரத்.

Related Articles

Ravana Kootam Shooting wrapped

Kannan Ravi GroupProducer Mr. Kannan Ravi PresentsVikram Sugumaran directorialShanthnu Bhagyaraj starrer Raavana Kottam shooting wraps up The shooting of Actor Shanthnu Bhagyaraj’s Raavana Kottam, directed...

Be bold always-Dir SAC advice to new directors

தைரியமாக இருங்கள் உண்மைகளைப் பேசுங்கள் : இளம் இயக்குநர்களுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவுரை தைரியமாக இருங்கள் உண்மைகளைப் பேசுங்கள் என்று இளம் இயக்குநர்களுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவுரைகூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு: இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர்...

Raame Aandalum Raavane Aandalum releasing 24th sep

https://t.co/wTwsLRLmWS ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' பட வெளியீட்டு தேதி அறிவிப்பு அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின் படி, 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்'...

Stay Connected

22,043FansLike
2,506FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

Ravana Kootam Shooting wrapped

Kannan Ravi GroupProducer Mr. Kannan Ravi PresentsVikram Sugumaran directorialShanthnu Bhagyaraj starrer Raavana Kottam shooting wraps up The shooting of Actor Shanthnu Bhagyaraj’s Raavana Kottam, directed...

Be bold always-Dir SAC advice to new directors

தைரியமாக இருங்கள் உண்மைகளைப் பேசுங்கள் : இளம் இயக்குநர்களுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவுரை தைரியமாக இருங்கள் உண்மைகளைப் பேசுங்கள் என்று இளம் இயக்குநர்களுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவுரைகூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு: இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர்...

Raame Aandalum Raavane Aandalum releasing 24th sep

https://t.co/wTwsLRLmWS ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' பட வெளியீட்டு தேதி அறிவிப்பு அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின் படி, 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்'...

Rasavachiye song from Aranmanai3 released

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் அரண்மனை-3 படத்தின் இரண்டாவது பாடல் 'ரசவாச்சியே' வெளியானது ! குடும்பங்கள் சிரித்து கொண்டாடும் ஜனரஞ்சகமான  படங்களை இயக்குவதில் சிறந்தவர் சுந்தர் சி. இவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை2...

Murungakkai chips Audio Launch

“முருங்கைக்காய் சிப்ஸ்” திரைப்பட இசை வெளியீட்டு விழா! Libra Productions சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் காதல் காமெடி திரைப்படம்...