1.3 C
New York
Tuesday, January 26, 2021

Buy now

ஒரு மெல்லிய கோடு – விமர்சனம்

தமிழ்த் திரையுலகில் பேய்ப் படங்களாக வந்து கொண்டிருக்கம் சூழ்நிலையில், இந்தப் படத்திலும் பேய் இருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, ஒரு ‘மர்டர் மிஸ்ட்ரி’யை மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ்.

அவர் இதற்கு முன் இயக்கிய “குப்பி, வனயுத்தம்” ஆகிய இரண்டு படங்களுமே விமர்சகர்களால் பெரிதும பாராட்டப்பட்ட படங்கள். அந்தப் படங்களை நிஜ சம்பவங்களை அடிப்படையாக வைத்துக் கொடுத்து பேசப்பட்டார். அதே போல இந்தப் படமும் நிஜ சம்பவம் ஒன்றின் கதையா இருக்குமோ என்று பட வெளியீட்டிற்கு முன் பத்திரிகைகளில் பரபரப்பாகப் பேசினார்கள். அந்த அளவிற்கு தன்னுடைய படங்களின் மூலம் மீடியாக்களிடமும், ரசிகர்களிடமும் பெயரெடுத்தவர் இயக்குனர் ரமேஷ்.

இந்த ‘ஒரு மெல்லிய கோடு’ படத்திலும் அவருடைய திரைக்கதைதான் படத்தின் ஹைலைட். ஒரே ஒரு இரவில் நடக்கும் கதைதான் இந்தப் படம். பிரபல பெண் தொழிலதிபரான மனிஷா கொய்ராலா கொலை செய்யப்பட, அவருடைய உடல் ‘போஸ்ட் மார்ட்டம்’ செய்தவதற்காக பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், திடீரென அவருடைய உடல் காணாமல் போய்விடுகிறது. மனிஷாவின் கணவரான ஷாம் மீது சந்தேகம் கொண்டு போலீஸ் அதிகாரியான அர்ஜுன் அவரை தன்னுடைய விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருகிறார். காணாமல் போன மனிஷாவின் உடலைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அவர் ஈடுபடுகிறார். அதன் பின் என்ன நடந்து என்பதுதான் படத்தின் பரபரபப்பான திரைக்கதை. படத்தின் முடிவு ரசிகர்கள் யாருமே யூகிக்க முடியாத ஒரு முடிவு.

அறிமுகமான காலத்திலிருந்தே போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் என்றால் அர்ஜுனுக்கு அல்வா சாப்பிடுவது போல. இந்தப் படத்திலும் அந்தக் கதாபாத்தில் சர்வசாதாரணமாக நடித்திருக்கிறார். ஷாமை விசாரிக்கும் காட்சிகள் அனைத்திலும் கம்பீரமான போலீஸ் அதிகாரி கண் முன் நிற்கிறார். ஆக்ஷனில் அதிரடியான போலீஸ் அதிகாரியாக பார்த்த அர்ஜுன் இந்தப் படத்தில் அமைதியான போலீஸ் அதிகாரியாக நடிப்பில் அதிரடி காட்டியிருக்கிறார்.

தன்னை விட மூத்த வயதுடைய மனிஷா கொய்ராலாவைத் திருமணம் செய்து கொண்டாலும் இன்னொரு பக்கம் அக்ஷா பட்டை காதலித்துக் கொண்டிருக்கிறார். படத்தில் ஆரம்பம் முதலே ஷாமை வில்லனைப் போலவே தெரிகிறார். எந்த விதமான கதாபாத்திரத்திலும் தன்னால் நடிக்க முடியும் என மீண்டும் நிரூபித்திருக்கிறார் ஷாம்.

மனிஷா கொய்ராலா சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடித்துள்ள படம். ஷாமின் காதலியாக அறிமுகமாகியிருக்கும் அக்ஷா பட் தமிழுக்கு வந்துள்ள அழகான அறிமுகம். அர்ஜுனின் வலது கரமாக படத்தின் இயக்குனர் A.M.R.ரமேஷும் விசாரணை அதிகாரியாக பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இளையராஜாவின் இசை வழக்கம் போலவே பின்னணி இசையில் படத்திற்கு விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறது.

அதிகமான காட்சிகள் மருத்துவமனை வளாகத்தில் இருந்தாலும் அது தெரியாத அளவிற்கு ஒளிப்பதிவாளர் கிருஷ்ணஸ்ரீராமும், படத் தொகுப்பாளர் கிருஷ்ண ரெட்டியும் இயக்குனருக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். மருத்துவமனையை ‘செட்’ என்று சொன்னால் நம்பவே முடியாது.

‘ஒரு மெல்லிய கோடு’ – மிரட்டலான த்ரில்லர்.

Related Articles

MXPlayer latest Tamil crime drama “KuruthiKalam”

MX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான  கொடூரமான   சண்டைக்களத்தை...

Raghava Lawrence in “Rudran” Shoot started

ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்” பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி...

Samudrakani Joins hands with Dir-SAChandrasekar

நான் கடவுள் இல்லை! S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி !நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில்...

Stay Connected

21,422FansLike
2,506FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

MXPlayer latest Tamil crime drama “KuruthiKalam”

MX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான  கொடூரமான   சண்டைக்களத்தை...

Raghava Lawrence in “Rudran” Shoot started

ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்” பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி...

Samudrakani Joins hands with Dir-SAChandrasekar

நான் கடவுள் இல்லை! S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி !நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில்...

Arun Vijay Completed AV31

Arun Vijay is really elated in having completed his one of the dream projects with director Arivazhagan tentatively titled as #AV31.  Tamil Cinema is rapidly...

Actor Rahman Is busy in 2021

பிசியான நடிகர் ரஹ்மான் !* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன்  தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார்  பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....