19.6 C
New York
Sunday, September 19, 2021

Buy now

வல்லவனுக்கும் வல்லவன் படத்தில் பதினொன்று கெட்டப்பில் நடிக்கும் பாபி சிம்ஹா

‘அசால்ட் சேது’ என்னும் கதாப்பாத்திரம் மூலம் தேசிய விருதை தட்டிச் சென்ற பாபி சிம்ஹாவிற்கு, சமீபத்தில் வெளியான ‘இறைவி’ திரைப்படம் ரசிகர்களின் பாராட்டுகளை வெகுவாக பெற்று தந்திருக்கிறது. அதுமட்டுமின்றி இவர் நடிப்பில் வெளியான கோ 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுகளை பெற்றது மட்டுமின்றி, வர்த்தக ரீதியாகவும், வணீக ரீதியாகவும் வெற்றி பெற்று இருக்கிறது. இப்படி தொடர்ந்து வெற்றி பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கும் பாபி சிம்ஹா தற்போது ‘வல்லவனுக்கும் வல்லவன்’ என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‘அசால்ட் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் பாபி சிம்ஹா தயாரித்து, கதாநாயகனாக நடிக்கும் ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படத்தை இயக்கி வருகிறார் அறிமுக இயக்குனர் விஜய் தேசிங்கு. தயாரிப்பு துறையில் தொடர்ந்து தரமான வெற்றி படங்களை ரசிகர்களுக்கு வழங்கி வரும் ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ நிறுவனத்தோடு இணைந்து ‘அசால்ட் புரொடக்ஷன்ஸ்’ இந்த ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. நெடுஞ்சாலை’ புகழ் ஷிவதா மற்றும் பூஜா தேவாரியா முன்னணி கதாப்பாத்திரங்களிலும், நடிகர் கருணாகரன் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்து அதிரடி திரைப்படமாக உருவெடுத்து வரும் இந்த ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படத்தின் டீசரானது, வருகின்ற ஆகஸ்ட் இரண்டாம் தேதி அன்று வெளியாகிறது.

‘வல்லவனுக்கும் வல்லவன்’ படத்தில் பாபி சிம்ஹா பதினொன்று கெட்டப்பில் நடித்து வருகிறார் என்பது அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, சுமார் பதினைந்து வருடம் கழித்து சென்னையை அடுத்து உள்ள பழவேற்காடு ஏரியில் படமாக்கப்பட்டிருக்கும் தமிழ் படம் ‘வல்லவனுக்கும் வல்லவன்’. நடிகர் அஜித் குமார் நடித்த ‘சிட்டிசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தான் இங்கு கடைசியாக படமாக்கப்பட்ட தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஏகப்பட்ட சுவாரசியங்களை உள்ளடக்கிய ‘வல்லவனுக்கும் வல்லவன்’ திரைப்படம், வருகின்ற ஆகஸ்ட் இரண்டாம் தேதி வெளியிடும் டீசரின் மூலம், ரசிகரக்ளின் கவனத்தை பெருமளவில் ஈர்க்கும் என்பதை உறுதியாகவே சொல்லலாம்.

Related Articles

Ravana Kootam Shooting wrapped

Kannan Ravi GroupProducer Mr. Kannan Ravi PresentsVikram Sugumaran directorialShanthnu Bhagyaraj starrer Raavana Kottam shooting wraps up The shooting of Actor Shanthnu Bhagyaraj’s Raavana Kottam, directed...

Be bold always-Dir SAC advice to new directors

தைரியமாக இருங்கள் உண்மைகளைப் பேசுங்கள் : இளம் இயக்குநர்களுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவுரை தைரியமாக இருங்கள் உண்மைகளைப் பேசுங்கள் என்று இளம் இயக்குநர்களுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவுரைகூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு: இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர்...

Raame Aandalum Raavane Aandalum releasing 24th sep

https://t.co/wTwsLRLmWS ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' பட வெளியீட்டு தேதி அறிவிப்பு அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின் படி, 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்'...

Stay Connected

22,043FansLike
2,506FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

Ravana Kootam Shooting wrapped

Kannan Ravi GroupProducer Mr. Kannan Ravi PresentsVikram Sugumaran directorialShanthnu Bhagyaraj starrer Raavana Kottam shooting wraps up The shooting of Actor Shanthnu Bhagyaraj’s Raavana Kottam, directed...

Be bold always-Dir SAC advice to new directors

தைரியமாக இருங்கள் உண்மைகளைப் பேசுங்கள் : இளம் இயக்குநர்களுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவுரை தைரியமாக இருங்கள் உண்மைகளைப் பேசுங்கள் என்று இளம் இயக்குநர்களுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவுரைகூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு: இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர்...

Raame Aandalum Raavane Aandalum releasing 24th sep

https://t.co/wTwsLRLmWS ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' பட வெளியீட்டு தேதி அறிவிப்பு அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின் படி, 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்'...

Rasavachiye song from Aranmanai3 released

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் அரண்மனை-3 படத்தின் இரண்டாவது பாடல் 'ரசவாச்சியே' வெளியானது ! குடும்பங்கள் சிரித்து கொண்டாடும் ஜனரஞ்சகமான  படங்களை இயக்குவதில் சிறந்தவர் சுந்தர் சி. இவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை2...

Murungakkai chips Audio Launch

“முருங்கைக்காய் சிப்ஸ்” திரைப்பட இசை வெளியீட்டு விழா! Libra Productions சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் காதல் காமெடி திரைப்படம்...